Home
Overview
Technical Help

Select Unit > Unit 5: வெயில் அடிக்கமாட்டேங்குது! > Lesson 5:  Written Spoken      Translation   Lessons:   1   2   3   4   5   6   Exercises: 1   2   3   4   5   6   Reading: 1   2   Glossary    Test

    

டோபி: ஐயா! அம்மா! டோபி வந்திருக்கிறேன்! சலவைக்குத் துணி இருக்கிறதா?

Sir! Madam! I, the dhobi, have come.

ஐயா: ஆம்! உள்ளே வாப்பா!

Yes, come in!

டோபி: ஐயா! இங்கேதான் இருக்கிறீர்களா? வணக்கம் ஐயா!

Sir, are you here itself? Greetings, sir!

ஐயா: மரகதம், டோபி வந்திருக்கிறான். பார்!

Maragatam, the dhobi has come. Look!

மரகதம்: இதோ வந்துவிட்டேங்க! உங்களுடைய துணி ஏதாவது சலவைக்கு இருக்கிறதா?

I will come right away! Do you have any clothes at all for washing?

ஐயா: ஆமாம்! ஆமாம்! வேஷ்டி சட்டை எல்லாம் இருக்கிறதே! எல்லாவற்றையும்

சலவைக்குப் போட்ட்டுவிடு.

Yes! Yes! There are dhotis, shirts and all. Give them all for washing.

மரகதம்: சரி. வந்துவிட்டேன்.

Okay. I'll be back.

she gets the clothes

மரகதம்: இந்தாப்பா! எண்ணு.

Here you go! Count (them).

டோபி: வேஷ்டி... ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு. நான்கு வேஷ்டி . சட்டை... ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு... ஆறு சட்டை. புடவை...ஒன்று, இரண்டு, மூன்று... மூன்று புடவை . ஆக மொத்தம் பதின்மூன்று உறுப்படி ஆயிற்று அம்மா. இருபத்தைந்து ருபாய் அட்வான்ஸ் கொடுங்கள் அம்மா!

Dhotis...one, two, three, four. Four dhotis. Shirts...one, two, three, four, five, six...Six shirts. Sarees...one, two, three...three sarees. The total has come to thirteen items, madam. Give twenty-five rupees advance, madam.

மரகதம்: என்னது! அட்வான்ஸே இருபத்தைந்து ருபாயா? என்ன! எக்கச்சக்கமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறாய்?

What is this? Twenty-five rupees advance? What? You are asking a lot!

டோபி: இல்லையம்மா! ஒரு வேட்டிக்கு மூன்று ரூபாய்! நாமூணு பன்னிரண்டு! ஒரு சட்டைக்கு இரண்டரை ரூபாய்! ஆறெண்டு பன்னிரண்டு, ஆறரை மூன்று, ஆக மொத்தம் பதினைந்து ரூபாய். ஒரு புடவைக்கு நான்கு ரூபாய். மூன்று புடவை. முன்னான்கு பன்னிரண்டு ரூபாய்! ஆக மொத்தம் முப்பத்தொன்பது ரூபாய் ஆகிறது அம்மா! இருபத்தைந்து ரூபாய் அட்வான்ஸ் கேட்டேன் அம்மா!

No, madam! A dhoti is three rupees! Four times three is twelve! A shirt is two and a half rupees. Two times six is twelve, six halves is three, and the total is fifteen rupees. A saree is four rupees. There are three sarees. Three times four is twelve rupees! The total is thirty-nine, madam! I asked twenty-five rupees advance, madam!

மரகதம்: என்ன? புடவைக்கு நான்கு ரூபாயா? முதலில் இரண்டு ரூபாய்தானே எடுத்துக்கொண்டிருந்தாய்? என்ன இப்பொழுது இரண்டு மடங்கு ஆகிவிட்டது!

What? Four rupees for a saree? Before, you charged two rupees only. What? Now it has suddenly become two times (that)?

டோபி: என்ன அம்மா பண்ணுகிறது விலை வாசி எல்லாம் ஏறிப்போயிற்று! வெயில் அடிக்கமாட்டேன் என்கிறது. துணி காய மாட்டேன் என்கிறது! சமயத்தில் ஆற்றில் தண்ணீரே வர மாட்டேன் என்கிறது! நான் என்ன அம்மா பண்ணுகிறது?

What to do, madam? The prices of all the commodities have gone up! The sun refuses to shine. The clothes refuse to dry. At times the water refuses to come in the river! What am I to do, Madam?

ஐயா: ஆமாம் உனக்கு இதே வேலை! வெயில் அடிக்க மாட்டேன் என்கிறது! ஆற்றில் தண்ணீர் வர மாட்டேன் என்கிறது! ஏதாவது சாக்குச் சொல்லிக்கொண்டேயிருப்பாய்! சரி சரி! மொத்தமாக முப்பது ரூபாய் கொடுத்துவிடுகிறேன். இந்தா அட்வான்ஸ் பதினைந்து ரூபாய். சரி! துணி எப்பொழுது வரும்?

Yes, this is indeed your work. The sun refuses to shine! Water refuses to come in the river. You will always be telling some sort of excuse! Okay, okay! I am giving thirty rupees totally. Here's fifteen rupees advance. Okay! When will the clothes come?

டோபி: இன்றிலிருந்து எண்ணி எட்டு நாளில் கொடுவந்துவிடுகிறேன்

ஐயா!

Counting from today I will definitely bring them in eight days, sir!

மரகதம்: என்னது எட்டு நாளா? அது வரைக்கும் நாங்கள் எந்தத் துணியை உடுத்துகிறது? இதோ பார்! இன்னும் மூன்று நாளில் கொடுத்துவிடவேண்டும்.

What is this? eight days? Up until then what cloth would there be for us to wear? Look! You should definetely give (the cloths) back in three days!

டோபி: சரி! பார்க்கிறேன் அம்மா!

Okay, I will see, Madam!

மரகதம்: என்னது? பார்க்கிறேன் கேட்கிறேன் என்றெல்லாம் கிடையாது! இன்னும் எண்ணி மூன்று நாளில் இந்தத் துணியெல்லாம் இங்கே வந்தாகவேண்டும்.

What is this? No question of seeing or asking! Within three days from today all the cloths should arrive here for sure.

டோப்: சரிம்மா! கொண்டுவருகிறேன்மா.

Okay, Madam! I will bring (the clothes).

    Grammar Notes:

    Causative Expressions using செய் and வை

    The auxiliary verbs செய் and வை are used as causative suffixes in Tamil. The causative form of a verb denotes someone making someone else to do something (the verb செய் or வை is attached to) The verb that செய் or வை modifies is put in the infinitive. For example, in the sentence நான் படித்தேன், the action is performed by the agent நான் ‘I.’ In the sentence நான் அவனைப் படிக்கவைத்தேன் ‘I made him study' two actions take place. One is the primary action of ‘reading’ by அவன் (put in the accusative), and the other action is the act of making the person (him) read. Here the agent, நான், is in the nominative. Thus, a verb can become a causative verb by taking the structure Verb-infinitive + வை/செய்.

    Even though both செய் and வை occur in spoken Tamil, வை is used more often than செய்.

    1a. நீ ஏன் எப்பொழுது பார்த்தாலும் குழந்தையை அழவைத்துக் கொண்டே இருக்கிறாய்

    1b. நீ ஏன் குழந்தையை எப்பொழுது பார்த்தாலும் அழச்செய்து கொண்டே இருக்கிறாய் (Less frequently used than 1a).

    2a. எல்லோருமாகச் சேர்ந்துகொண்டு ஒரு வழியாக அவனை ஊரை விட்டே ஓடச்செய்துவிட்டோம்.

    2b) அப்படி இப்படி என்று கடைசியாக நீங்கள் என்னை உங்கள் வீட்டுக்கு வரவைத்துவிட்டீர்கள்.

    3a) நான் நான்கு ஆட்களை வைத்து சுந்தரத்துக்குச் செம்மையாக அடி கொடுக்கச்செய்டேன் (அடி கொடுக்கும் படி செய்டேன் is also ok.) 3b நீங்கள் ஒரு வழியாக நான் அவனை அடிக்கும்படி செய்துவிட்டீர்கள். (அடிக்கவைத்துவிட்டீர்கள்).

    When வை is used as an auxiliary verb after an adverbial participle form (AVP), it conveys that the action denoted by the main verb is undertaken for its consequences or uses in the future.

    4. எதற்கும் இருக்கட்டும் என்று நான் அவனுக்கு ஒரு நூறு ரூபாய் (லஞ்சம்) கொடுத்துவைத்தேன்.

    5. எதற்கும் இருக்கட்டும் என்று உனக்கு இந்தச் செய்தியைச் சும்மா சொல்லிவைக்கிறேன்.

    Homework:

    Translate the following sentences using வை, செய் and படி செய்

    1. You made me say a lie.

    2. One way or another, (எப்படியாவது) you have to make him study.

    3. We all made him eat too much at our home.

    4. Can you please make this car run.

    5. You used me to curse (திட்டு) him before everyone.

    6. Make this child to eat.

    7. We had our father buy a good for us.

    8. The doctor made the patient to sleep.

    9. Do not make him cry.

    10. The police made the thief to say the truth.

     

    Cultural Notes:

    Adding numbers and doing math

    Doing math in Tamil is expressed by using case suffixes with the nouns that denote the numbers ('number' in written Tamil is எண்). The equivalent for 'doing math' in Tamil is கணக்கு போடு where the verb போடு means 'put' or கணக்கு பண்ணு 'make math'.

    கூட்டல் 'addition': The sociative suffix ஓட and the accusative suffix ஐ are added. The verb சேரு 'put together' is also used in some contexts.

    நாலோட ரெண்டெ கூட்டுங்க 'add two with four' (spoken)

    நாலையும் அஞ்சையும் கூட்டுங்க 'add four and five'

    அஞ்செப் பத்துலெ சேத்தா என்ன வரும்? What would you get when you add five in ten? (cf. What do you get when you add five to ten?)

    கழித்தல் 'subtraction': The non-animate ablative suffix is used to substract numbers. The number that is being subtracted is put in the accusative.

    பத்தை இருபதுலேருந்து கழிங்க 'substract ten from twenty' (spoken)

    It can also be expressed with the conditional form of the verb, போ, போனால்:

    பத்துலெ அஞ்சு போனா என்ன வரும்? 'What remains when you substract five from ten?' (spoken)

    வகுத்தல் 'dividing': The instrumental suffix is used to divide one number from some other number. The noun that is being divided is put in the accusative.

    இருபத்தஞ்செ அஞ்சால வகுங்க! 'Divide twenty-five by five' (spoken)

    பெறுக்கு 'multiply': Usually the accusative suffix and instrumental suffixes are used.

    பத்தையும் பத்தையும் பெறுக்குங்க. 'Multiply ten and ten' (spoken).

    பத்தெ பத்தாலெ/பத்தோடெ பெறுக்கு. 'Multiply ten by/with ten.'

    சதவீதம் கண்டுபிடி 'Find out the percentage'

    ஒரு எண்ணெ நூறாலெ வகுத்தால் சதவீதம் வரும் 'when one divides a number-acc. (எண்ணை) by hundred, one gets the percentage'.

    தமிழ்நாட்டுலெ கிட்டத்தட்ட அறுபது சதவீதம் படிச்சவங்க 'Approximately sixty percent of the people in Tamil Nadu are educated people.'

    தமிழ்நாட்டுலெ இருக்குற அறுபது மில்லியன் பேரில் எத்தனை சதவீதம் படிச்சவங்க? 'What is the percentage of educated people among the total of sixty million in Tamil Nadu.'

     

© South Asia Language Resource Center (SALRC)