Home
Overview
Technical Help

Select Unit > Unit 5: படிப்பை முடித்துவிட்டு > Lesson 2:   Spoken      Translation   Lessons:   1   2   3   4   5   6   Exercises: 1   2   3   4   5   6   Reading: 1   2   Glossary    Test

    

Piccaikkannu tries to read Hindi on a board and talks to himself!

Piccaikkannu: என்னதான் தலைகீழாக நின்றாலும் நமக்கு ஹிந்தி படிக்க முடியவே முடியாதுப்பா.

Ramalingam:ஏய்! பிச்சைக்கண்ணு! இங்கேதான் இருக்கிறாயா? உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? என் பெண் படிப்பை முடித்துவிட்டாள். அடுத்த மாசம் ஊருக்கு வருகிறாளாம்.

Piccaikkannu படிப்பை முடித்துவிட்டாள். ஊருக்கு திரும்பி வருகிறாள்! அது ஒரு பெரிய விஷயமா? நான்கூடத்தான் நன்றாக படிப்பை முடித்தேன். என்னமோ உன் பெண்தான் படிப்பை முடித்துவிட்டாள் படிப்பை முடித்துவிட்டாள் என்று பெரிதாக பேசுகிறாய் நீ.

a boy is running along while they are talking

Ramalingam: ஏய்! ஏய்! ஓடாதேடா! ஓடாதேடா விழுந்தாலும் விழுவாய்! he falls down

Pichaikkannu: உம்! விழுந்துவிட்டான். வாயைத் திறந்தாய். விழுந்துவிட்டான்.

Ramalingam: ஓடாதேடா விழுந்துவிடுவாய் என்று சொன்னேன். அவன் விழுந்துவிட்டான். பழியை என் மேல் போடுகிறாயா?

Boy: ஏன்யா? இந்தி படிக்கத் தெரியாது? குப்பை போடக்கூடாது என்று போட்டு வைத்திருக்கிறது. வாழைப்பழத்தோலைப் போட்டிருக்கிறீர்கள்.

    Grammar Notes:

    Using ஆல் beyond the simple instrumental case

    Conditionals in Tamil

    1. Simple conditional sentences:

    Structure: Verb + past tense +ஆல் (sp. ஆ)

    1. நாளைக்கு மழை பெய்-த்-ஆல் நான் பள்ளிக்கூடத்துக்கு (school) வரமாட்டேன்.
    If it rains tomorrow, I won’t come to school

    2. நீங்கள் எனக்குச் சொல்லிக்கொடு-த்த்-ஆல் (teach) நான் நன்றாகப் படிப்பேன்.
    If you teach me, I will study well

    3. நீங்கள் கடைக்குப் போ-ன்-ஆல் எனக்கு நிறைய பழம் வாங்கவேண்டும்.
    If you go to the store, you should buy a lot of fruits for me

    1.1. Conditional sentences with aspectual forms.

    4. நேற்று மழை பெய்திருந்தால் என்னால் பள்ளிக்கூடத்துக்கு வந்திருக்கமுடியாது.
    If it had rained yesterday, I wouldn’t have come to school yesterday

    5. யாராவது உங்களுடைய புத்தகத்தை திருடிவிட்டால் உங்களால் படிக்கமுடியாது.
    If anyone steals your book, you won’t be able to study.

    6. யாராவது உங்களுடைய புத்தகத்தை எடுத்துக்கொண்டால் உங்களால் படிக்கமுடியாது.
    If anyone had taken/takes your book, you won't be able to study.

    Simple conditional Negation:

    Structure: Infinitive + ஆவிட்டால் (sp. ஆட்டா)

    7. நீங்கள் நன்றாகப் படிக்காவிட்டால் உங்களால் நிறைய மதிப்பெண்கள் (marks) எடுக்கமுடியாது.
    If you don’t study well, you can’t get a good grade

    8. நான் நன்றாகப் படித்திருக்காவிட்டால் என்னால் பரிட்சையில் தேர்ச்சியடைந்திருக்க முடியாது (பாஸ் செய்திருக்க முடியாது).
    If I hadn’t studied well, I wouldn’t have passed the exam

    9. நீங்கள் நிறைய பணம் எடுத்துக்கொள்ளாவிட்டால் உங்களால் இந்தியாவில் எல்லா ஊருக்கும் போகமுடியாது.
    If you don’t take lots of money, you can’t go to all the cities in India.

    An exceptional, but common form, is the negative condition of இரு: இல்லாவிட்டால் (sp. இல்லாட்டா). It generally has the meaning of 'otherwise' or disjunction.

    All the negative conditional forms with the suffix ஆவிட்டால் can be substituted by the past negation of the verb followed by the conditional form of the verb என் (lit. ‘say'), என்றால் (sp. -ண்ணா) (cf. 'if it is the case that...'). For example:

    7'. நீங்கள் நன்றாகப் படிக்கவில்லை என்றால் உங்களால் நிறைய மதிப்பெண்கள் (marks) எடுக்கமுடியாது.
    If you don’t study well, you can’t get a good grade

    8'. நான் நன்றாகப் படித்திருக்கவில்லை என்றால் என்னால் பரிட்சையில் தேர்ச்சியடைந்திருக்க முடியாது (பாஸ் செய்திருக்க முடியாது).
    If I hadn’t studied well, I wouldn’t have passed the exam

    9'. நீங்கள் நிறைய பணம் எடுத்துக்கொள்ளவில்லை என்றால் உங்களால் இந்தியாவில் எல்லா ஊருக்கும் போகமுடியாது.
    If you don’t take lots of money, you can’t go to all the cities in India.

    The concessive

    When உம் is attached to the conditional (whether positive or negative, or formed with vb-pst-ஆல் or vb-pst neg என்றால்) the meaning 'even if...' is available.
      அவர்கள் வந்தாலும் இதைக் கொடுக்கமாட்டேன்.
      Even if they come I won't give it (to them).
      நான் என் கண்ணடியை தேடினாலும் என் கண்ணடியை இல்லாமல் இவைகளை எப்படி கண்டுபிடிப்பேன்?
      Even if I search for my glasses, how will I find them without my glasses?

    When a verb in the concessive is preceeded by a question word the meaning of 'Wh-ever...' or 'no matter wh-...'is available:

      யார் வந்தாலும், நான் இங்கே இல்லை என்று நீங்கள் சொல்லுங்கள்.
      Whoever comes please tell them that I am not here.

      எப்பொழுதும் வகுப்பில் வேலை செய்யவில்லை என்றாலும், வத்தியாருக்கு கோபம் வரும்.
      Whenever you don't do your work in class, the teacher gets angry.

    Cause and Effect constructions:

    Structure: Verbal noun + ஆல்

    Note: Unlike the conditional form, the suffix ஆல் here serves as an instrumental suffix since it is added to a noun rather than to a verb. This is the reason why the suffix ஆல் in causal expressions are pronounced in spoken Tamil as ஆலெ instead of ஆ like conditional expressions.

    10. நான் தமிழ் படித்ததால் என்னால் தமிழில் எழுதமுடிந்தது.
    Since studied Tamil, I was able to write in Tamil

    11. இன்று சுதந்திர தினம் (Independence day) என்பதால் எங்களுக்குப் பள்ளிக்கூடம் விடுமுறை (holiday).
    As today is the Independence day, our school is off.

    12. திடீரென்று நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டதால் எங்களால் எங்கும் போகமுடியவில்லை.
    As you visited our house so suddenly, we are unable to go anywhere.

    13. நீங்கள் என்னுடைய புத்தகத்தை எடுத்துக்கொண்டதால் என்னால் படிக்கமுடியவில்லை.
    Since you took the book, I am unable to study

    14. நான் இந்தியாவுக்கு முன்னால் போயிருந்ததால் என்னால் எல்லா இடங்களுக்கும் சிரமம் (difficulty) இல்லாமல் போகமுடிந்தது.
    As I had been to India before, I was able to go to all the places without any difficulty.

    Sentences with Causal Negation:

    Structure: Infinitive + ஆதது + ஆல்

    15. இந்த வருடம் நன்றாக மழை பெய்யாததால் தண்ணீர்ப் பஞ்சம் (Water scarcity) வந்துவிட்டது
    As it didn’t rain well this year, we had water scarcity.

    16. நான் இந்தியாவுக்கு முன்னால் போகாததால் என்னால் எல்லா இடங்களுக்கும் போகமுடியவில்லை. (போயிருக்காததால் is not possible. Cf. S. 14 above.)

    17. நான் நிறைய பணம் எடுத்துக்கொள்ளாததால் என்னால் நிறைய மாதங்கள் (months) என்னால் இந்தியாவில் தங்கமுடியவில்லை.
    As I din’t take too much money, I couldn’t stay in India for many months.

    18. நீங்கள் நேற்று எங்கள் வீட்டுக்கு வராததால் எங்களால் எங்கும் போகமுடியவில்லை. (Like இரு, விடு also do not occur in negative causal forms. So, வராவிடாததால் is not possible. Cf. S. 1n above.)
    As you didn’t come to our house yesterday, I couldn’t go anywhere

    Note: Like conditional negation, causal negation can also be made with the verb என் as in பெய்யவில்லை என்பதால், போகவில்லை என்பதால், எடுத்துக்கொள்ளவில்லை என்பதால் etc., but only in restricted contexts such as narration of events, platform speeches etc.)

    Cultural Notes:

    ஆனா ஆவன்னா; க ங ச ஞ: Names of Vowels and Consonants and their non-linguistic functions

    Traditionally, the Tamil alphabet is understood by the names ஆனா ஆவன்னா referring to vowels and க ங ச ஞ referring to consonants. This is also used to ask whether someone is knowledgeable of Tamil script, as அவருக்கு ஆனா ஆவான்னா தெரியாது 'he doesn't know Tamil alphabet' (lit. he doesn't know the vowels அ ஆ). One can say எனக்கு ஆனா ஆவன்னா நல்லா தெரியும் 'I know the vowels very well' ஆனா க ங ச ஞ நல்லா தெரியாது 'but don't know the consonants very well'.

    Following is the way the vowels are understood traditionally.

    அ - ஆனா

    ஆ - ஆவன்னா

    இ - ஈனா

    ஈ - ஈயன்னா

    உ - ஊனா

    ஊ - ஊவன்னா

    எ - ஏனா

    ஏ - ஏயன்னா

    ஐ - ஐயன்னா

    ஒ - ஓனா

    ஓ - ஓவன்னா

    ஔ - அவ்வன்னா

    அக்கேன்னா to refer to the fricative vowel.

    Syllabic consonants take the syllable ஆனா in their names like கானா, ஙானா, சானா and so on.

    Pure consonants are understood by the names like இக்கு, இங்ஙு, இச்சு, இஞ்ஞு, இம்மு etc., with the syllable இ added in the beginning and the corresponding doubling of the consonant at the end.

    Some of the consonants, vowels and syllables are used traditionally to refer to certain actions and objects. These onomatopoeic expressions occur with the sound name plus the quotative particle என்று (sp. ண்ணு).

    When someone is keeping quiet and not replying in response to a query, it can be represented using உம்மு and the quotative particle என்று (spoken ண்ணு):

    நான் கேக்குற கேள்விக்கெல்லாம் ஒன்னும் சொல்லாம உம்முண்ணு ஒக்காந்திருந்தான் 'He was sitting quietly without answering any of my questions' (lit. he was simply sitting உம்')

    When someone is perplexed and confused about something, this can be expressed using the consonant ஞே.

    உங்களுக்கு ஒன்னும் புரியவேயில்லையா? ஞேண்ணு உக்காந்திருக்கீங்க. 'What happened? Don't you understand anything? (sitting like ஞே).

    Excessive pain is expressed with the vowel ஆ:

    திடீர்ணு அவன் என்னெ அடிச்சவொடனே நான் ஆண்ணு கத்துனேன் 'As soon as he hit me without any notice, I screamed aa!'

    When someone is responding to something just with a smile, the vowel ஈ is used.

    அழகான பொண்ணெ பாத்துட்டா ஈண்ணு பல்லெ காட்ட ஆரம்பிச்சிடுவியே! 'As soon as you see a beutiful girl, you would start showing your teeth!' (lit. would show your teeth saying ஈ).

    The vowel ஈ is also used to ask someone to show all the teeth.

    ஈண்ணு! ஒனக்கு எத்தனெ பல்லு இருக்குண்ணு பாக்கலாம். 'Say ஈ, we will see how many teeth you have.'

    The long vowel ஓ and the syllable கோ are used to denote someone's crying aloud.

    பாட்டி இறந்ததைக் கேட்டதும் அவன் ஓண்ணு/கோண்ணு அழ ஆரம்பிச்சிட்டான். 'As soon as he heard about his granmother's death, he started crying aloud' (lit. started to cry saying ஓ).

    When someone or some animal is screaming out of fear, pain etc., the syllable கீ is used.

    நாயை அடிச்சதும் கீ கீண்ணு கத்திகிட்டே ஓடிப்போச்சு 'As soon as the dog is beaten, it ran away making lound noise (கீ கீ).

    The syllable ஊ is used to express the 'hot' sensation, both spicy as well as temperature hot.

    ஊ! தோசை ரொம்ப சுடுது! 'oo! the dhosa is very hot'

    என்னோட சாம்பார் சாதத்தை சாப்பிட்டுட்டு ஊ ஊண்ணு கத்த ஆரம்பிச்சிட்டான். கண்ணெல்லாம் ஒரே தண்ணி.. 'After eating the rice with spicy sauce I made, he started saying ஊ' and his eyes are full of tears'.

    The syllable டக் is used to express 'abruptness'

    நான் கேக்குற கேள்விக்கு டக்குண்ணு பதில் சொல்லு 'Answer my question instantly (without any hesitation)'

    The syllable சர் is used to express tearing off something.

    தாளெ சர்ர்ருண்ணு கிழிச்சிட்டான் 'he tore the paper (சர்)'

    படார் is used to denote 'banging' something on something.

    கதவைப் படார்ணு சாத்தினேன் 'I shut the door (படார்)'

© South Asia Language Resource Center (SALRC)