Home
Overview
Technical Help

Select Unit > Unit 5: வெயில் அடிக்கமாட்டேங்குது! > Lesson 5:   Written Spoken      Translation   Lessons:   1   2   3   4   5   6   Exercises: 1   2   3   4   5   6   Reading: 1   2   Glossary    Test

    

டோபி: ஐயா! அம்மா! டோபி வந்துருக்கேன்! சலவைக்குத் துணி இருக்கா?

ஐயா: ஆம்! உள்ளெ வாப்பா!

டோபி: ஐயா! இங்கே இருக்கீங்களா? வணக்கம்யா!

ஐயா: மரகதம் டோபி வந்திருக்கான். பாரு!

மரகதம்: இதோ வந்துட்டேங்க! உங்களோட துணி ஏதாவது சலவைக்கு இருக்கா?

ஐயா: ஆமாம்! ஆமாம்! வேஷ்டி சட்டெ எல்லாம் இருக்கே! எல்லாத்தெயும் சலவைக்குப் போட்டுறு.

மரகதம்: இந்தாப்பா! எண்ணு.

டோபி: வேஷ்டி... ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு. நாலு வேஷ்டி. சட்டெ... ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு, ஐஞ்சு, ஆறு... ஆறு சட்டெ. புடவெ... ஒண்ணு, ரெண்டு, மூணு... மூணு புடவெ .. ஆக மொத்தம் பதிமூணு உறுப்படி. ஆச்சும்மா! இருபத்தஞ்சு ரூபா அட்வான்ஸ் கொடுங்க.

மரகதம்: என்னது! அட்வான்ஸே இருபத்தஞ்சு ருபாயா? என்ன! எக்கச்சக்கமாக் கேட்டுக்கிட்டிருக்கெ?

டோபி: இல்லம்மா! ஒரு வேஷ்டிக்கு மூணு ரூபா! நாமூணு பன்னெண்டு! ஒரு சட்டெக்கி ரெண்டரெ ரூபா! ஆறெண்டு பன்னிரெண்டு, ஆறரை மூணு, ஆக மொத்தம் பதினஞ்சு ரூபா. ஒரு பொடவைக்கு நாலு ரூபா. மூணு பொடவெ. முன்னான்கு பன்னிரெண்டு ரூபா! ஆக மொத்தம் முப்பத்தொன்பது ரூபா ஆகுது அம்மா! இருபத்தஞ்சு ரூபா இருபத்தஞ்சு ரூபா அட்வான்ஸ் கேட்டம்மா!

மரகதம்: பொடவெக்கி நாலு ரூபாவா? மொதல்லெ ரெண்டு ரூபாதானே எடுத்துக்கிட்டிருந்தே? என்ன இப்போ ரெண்டு மடங்கு ஆயிடுச்சி!

டோபி: என்னம்மா பண்றது வெலெ வாசி எல்லாம் ஏறிப்போச்சி! வெயிலே அடிக்கமாட்டேங்குது. துணி காய மாட்டேங்க்து! சமயத்துலெ ஆத்துலெ தண்ணீயே வர மாட்டேங்குது! நான் என்னம்மா பண்ணுறது?

ஐயா: ஆமாம் ஒனக்கு இதே வேலெ! வெயில் அடிக்க மாட்டேங்க்து! ஆத்துலெ தண்ணி வர மாட்டேங்க்து! ஏதாவது சாக்குச் சொல்லிக்கிட்டேயிருப்பெ! சரி சரி! மொத்தமா முப்பத்து ரூபா கொடுத்துடுறேன். இந்தா அட்வான்ஸ் பதினஞ்சி ரூபா. சரி! துணி எப்போ வரும்?

டோபி: இண்ணையிலேருந்து எண்ணி எட்டு நாள்ள கொடுவந்துட்றேன்ய்யா.

மரகதம்: என்னது எட்டு நாளா? அது வரைக்கும் நாங்க எந்தத் துணியெ உடுத்துறது? இன்னும் மூணே நாள்ளெ கொடுத்துடணும். சரியா?

டோபி: சரி! பாக்றேம்மா.

மரகதம்: என்னது பாக்றேன் கேக்றேன்ல்லாம் கெடெயாது! இன்னும் எண்ணி மூணு நாள்ளெ இந்தத் துணியெல்லாம் இங்க வந்தாகணும்.

டோபி: சரிம்மா. கொண்டுவறேன்மா.

    Grammar Notes:

    Causative Expressions using செய் and வை

    The auxiliary verbs செய் and வை are used as causative suffixes in Tamil. The causative form of a verb denotes someone making someone else to do something (the verb செய் or வை is attached to) The verb that செய் or வை modifies is put in the infinitive. For example, in the sentence நான் படித்தேன், the action is performed by the agent நான் ‘I.’ In the sentence நான் அவனைப் படிக்கவைத்தேன் ‘I made him study' two actions take place. One is the primary action of ‘reading’ by அவன் (put in the accusative), and the other action is the act of making the person (him) read. Here the agent, நான், is in the nominative. Thus, a verb can become a causative verb by taking the structure Verb-infinitive + வை/செய்.

    Even though both செய் and வை occur in spoken Tamil, வை is used more often than செய்.

    1a. நீ ஏன் எப்பொழுது பார்த்தாலும் குழந்தையை அழவைத்துக் கொண்டே இருக்கிறாய்

    1b. நீ ஏன் குழந்தையை எப்பொழுது பார்த்தாலும் அழச்செய்து கொண்டே இருக்கிறாய் (Less frequently used than 1a).

    2a. எல்லோருமாகச் சேர்ந்துகொண்டு ஒரு வழியாக அவனை ஊரை விட்டே ஓடச்செய்துவிட்டோம்.

    2b) அப்படி இப்படி என்று கடைசியாக நீங்கள் என்னை உங்கள் வீட்டுக்கு வரவைத்துவிட்டீர்கள்.

    3a) நான் நான்கு ஆட்களை வைத்து சுந்தரத்துக்குச் செம்மையாக அடி கொடுக்கச்செய்டேன் (அடி கொடுக்கும் படி செய்டேன் is also ok.) 3b நீங்கள் ஒரு வழியாக நான் அவனை அடிக்கும்படி செய்துவிட்டீர்கள். (அடிக்கவைத்துவிட்டீர்கள்).

    When வை is used as an auxiliary verb after an adverbial participle form (AVP), it conveys that the action denoted by the main verb is undertaken for its consequences or uses in the future.

    4. எதற்கும் இருக்கட்டும் என்று நான் அவனுக்கு ஒரு நூறு ரூபாய் (லஞ்சம்) கொடுத்துவைத்தேன்.

    5. எதற்கும் இருக்கட்டும் என்று உனக்கு இந்தச் செய்தியைச் சும்மா சொல்லிவைக்கிறேன்.

    Homework:

    Translate the following sentences using வை, செய் and படி செய்

    1. You made me say a lie.

    2. One way or another, (எப்படியாவது) you have to make him study.

    3. We all made him eat too much at our home.

    4. Can you please make this car run.

    5. You used me to curse (திட்டு) him before everyone.

    6. Make this child to eat.

    7. We had our father buy a good for us.

    8. The doctor made the patient to sleep.

    9. Do not make him cry.

    10. The police made the thief to say the truth.

    Cultural Notes:

    Adding numbers and doing math

    Doing math in Tamil is expressed by using case suffixes with the nouns that denote the numbers ('number' in written Tamil is எண்). The equivalent for 'doing math' in Tamil is கணக்கு போடு where the verb போடு means 'put' or கணக்கு பண்ணு 'make math'.

    கூட்டல் 'addition': The sociative suffix ஓட and the accusative suffix ஐ are added. The verb சேரு 'put together' is also used in some contexts.

    நாலோட ரெண்டெ கூட்டுங்க 'add two with four' (spoken)

    நாலையும் அஞ்சையும் கூட்டுங்க 'add four and five'

    அஞ்செப் பத்துலெ சேத்தா என்ன வரும்? What would you get when you add five in ten? (cf. What do you get when you add five to ten?)

    கழித்தல் 'subtraction': The non-animate ablative suffix is used to substract numbers. The number that is being subtracted is put in the accusative.

    பத்தை இருபதுலேருந்து கழிங்க 'substract ten from twenty' (spoken)

    It can also be expressed with the conditional form of the verb, போ, போனால்:

    பத்துலெ அஞ்சு போனா என்ன வரும்? 'What remains when you substract five from ten?' (spoken)

    வகுத்தல் 'dividing': The instrumental suffix is used to divide one number from some other number. The noun that is being divided is put in the accusative.

    இருபத்தஞ்செ அஞ்சால வகுங்க! 'Divide twenty-five by five' (spoken)

    பெறுக்கு 'multiply': Usually the accusative suffix and instrumental suffixes are used.

    பத்தையும் பத்தையும் பெறுக்குங்க. 'Multiply ten and ten' (spoken).

    பத்தெ பத்தாலெ/பத்தோடெ பெறுக்கு. 'Multiply ten by/with ten.'

    சதவீதம் கண்டுபிடி 'Find out the percentage'

    ஒரு எண்ணெ நூறாலெ வகுத்தால் சதவீதம் வரும் 'when one divides a number-acc. (எண்ணை) by hundred, one gets the percentage'.

    தமிழ்நாட்டுலெ கிட்டத்தட்ட அறுபது சதவீதம் படிச்சவங்க 'Approximately sixty percent of the people in Tamil Nadu are educated people.'

    தமிழ்நாட்டுலெ இருக்குற அறுபது மில்லியன் பேரில் எத்தனை சதவீதம் படிச்சவங்க? 'What is the percentage of educated people among the total of sixty million in Tamil Nadu.'

© South Asia Language Resource Center (SALRC)