மகாத்மா காந்திக்கு ஜே!
ஒரு விமானம் வானத்தில் மிகவும் உயரத்தில் பறந்துகொண்டிருந்தது. அந்த விமானம் வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. விமானப்பயணிகள் புத்தகங்கள் படித்துக்கொண்டும் தூங்கிக்கொண்டும் இருந்தார்கள். விமானப்பணிப்பெண் சிரித்துக்கொண்டு எல்லோருக்கும் உதவி செய்து கொண்டிருந்தாள். அப்போது அந்த விமானத்தில் ஒரு கோளாறு வந்து கோஞ்சம் கொஞ்சமாக ஆடத் தொடங்கியது. விமானத்தை ஓட்டியவர் விமானத்தின் எடையைக் கொஞ்சம் குறைக்க வேண்டும் என்று சொன்னார். யாராவது மூன்று பேர் விமானத்திலிருந்து கீழே குதித்தால் விமானமும் மற்ற பயணிகளும் பிழைப்பார்கள் என்று சொன்னார்.
விமானத்தில் இருந்த அமெரிக்கர் ஒருவர் ஜார்ஜ் வாஷிங்டனுக்கு ஜே என்று சொல்லிக்கொண்டு விமானத்திலிருந்து கீழே குதித்தார். ஒரு ரஷ்யாக் காரர் ஸ்டாலினுக்கு ஜே என்று சொல்லிக்கொண்டு கீழே குதித்தார். அங்கே இருந்த இந்தியர் ஒருவர் மகாத்மா கந்திக்கு ஜே என்று சொல்லிக்கொண்டு அவருக்குப் பக்கத்திலிருந்தவரைக் கீழே தள்ளினார்!!!