![]() |
|
Select Unit > Unit 3: கத்தரிக்காய் என்ன விலை? > Lesson 5: Spoken Translation | Lessons: 1 2 3 4 5 6 Exercises: 1 2 3 4 5 6 Reading: 1 2 Glossary Conversations Test |
shopkeeper: வாருங்கள் sir!
Consumer: ஏம்பா தக்காளி நன்றாக இருக்குமா?
shopkeeper: நம் கடையில் எல்லா காய்கறிகளுமே ரொம்ப நல்ல காய்கறிகள் sir!
Consumer: அப்படியா? என்ன விலை எல்லாம் சொல்லு!
Shopkeeper: தக்காளி கிலோ இருபது ரூபாய், சார். கத்தரிக்காய் பதினெட்டு ரூபாய். முள்ளங்கி பதினாறு ரூபாய். பீட்ரூட் பதினான்கு ரூபாய். வெண்டைக்காய் பன்னிரண்டு ரூபாய். முருங்கக்காய் ஒன்றரை ரூபாய் sir!. வாழைத்தண்டு ஒன்று இரண்டு ரூபாய். கீரை கட்டு ஒன்று இரண்டு ரூபாய். பரங்கிப்பத்தை நான்கு ரூபாய். பூசனிக்காய் நான்கு ரூபாய் sir.
Consumer: அப்போ ஒன்று செய்யுங்கள். எனக்கு அந்த கீரை வேண்டாம். பரங்கிக்காய் வேண்டாம். பூசனிக்காய் வேண்டாம். தக்காளி கால் கிலோ போதும். மற்ற காய்கறியெல்லாம் அரை கிலோ கொடுங்கள். முருங்கக்காய் எனக்கு நாங்கு கொடுங்கள். வாழைத்தன்டு ஒன்றே ஒன்று. எவ்வளவு மொத்தம் விலை ஆயிற்று சொல்லுங்கள்.
shop keeper: மொத்தம் sir!. தக்காளி ஐந்து ரூபாய், சார்.
C: ஐந்து
SK: கத்தரிக்காய் ஒன்பது ரூபாய்.
C: ஐந்தும் ஒன்பதும் பதினான்கு
SK: முள்ளங்கி எட்டு ரூபாய்.
C: பதினான்கும் எட்டும் இருபத்திரண்டு.
SK: பீட்ரூட் ஏழு ரூபாய்.
C: இருபதிரண்டும் ஏழும் இருபத்து ஒன்பது.
SK: வெண்டைக்காய் ஆறு ரூபாய்.
C: இருபத்து ஒன்பதும் ஆறும் முப்பத்தைந்து.
SK: முருங்கக்காய் ஒரு காய் ஒன்றரை ரூபாய். நான்கு காய் ஆறு ரூபாய்.
C: நான்கு முருங்கக்காய் ஆறு ரூபாய்.
SK: ஆமாம் sir.
C: முப்பத்தைந்தும் ஆறும் நாற்பத்து ஒன்று.
SK: வாழத்தண்டு இரண்டு ரூபாய் sir
C: நாற்பத்து மூன்று ஆயிற்று.
SK: நீங்கள் நாற்பது ரூபாய் கொடுங்கள் sir.
C: அவ்வளவுதானே! ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு.. எல்லாம் இந்தப் பையில் போட்டு வைங்கள். நான் வந்து வாங்கிகொள்கிறேன்.
SK: போய்விட்டு வாருங்கள், sir.
|
|
| |
Tamil Comparative constructionsThe two suffixes விட and போல are used in Tamil to represent comparative and equative expressions, respectively. விட has a variant காட்டிலும், which is only used in some dialects. விட is more frequently used than காட்டிலும், although it is possible to use both of them in written Tamil without much difference in style. போல also has a variant, மாதிரி, which is used interchangably with போல in both spoken and written Tamil. StructureAll of the forms such as விட, காட்டிலும், போல and மாதிரி are used as a postposition after accusative case marker attached to the noun being compared or equated. Use of the accusative marker ஐ is compulsory in both cases of comparative and equative constructions. While in English word order tells us what is being compared/equated: 'X is like Y' or 'X is bigger than Y', in Tamil the accusative marker distinguishes what is being compared/equated to what. Remember that because these are post-positions, the word order of the comparison/equation is the opposite of the English: 'X Y-acc. போல/மாதிரி Verb' (X verb like Y) or 'X Y-acc. விட Adverb Verb' (X is more something than Y). Below are some of the examples of comparative constructions in Tamil. Comparative constructions:1. என்னுடைய தம்பி உங்களுடைய அண்ணனைவிட நன்றாகப் படிப்பான்.
2. கமலா சீதாவைவிட உயரமாக இருக்கிறாள்.
3. எங்களைவிட பணக்காரர்கள் யாரும் இந்த ஊரில் இல்லை.
4. நான் யாரைவிட நன்றாகக் கார் ஓட்டுவேன்?
5. இந்த ஊரில் என்னைக்காட்டிலும் உனக்கு நிறைய வசதி இருக்கிறதா?
6. இந்த வீட்டைக்காட்டிலும் அந்த வீடு மிகவும் பெரியதாக இருக்கிறது.
Sentences 1 to 6 are examples for comparative constructions, where the object compared always takes the suffix ஐவிட (or ஐ விட with a space in between the case suffix and the comparative marker). Superlative constructionsIn Tamil, superlative constructions can be made in a number of ways. Unlike English, however, there are no absolute superlatives such as 'This is the biggest' or 'He is the best.' Rather, the superlative must always be explicitly related to something else, either as a comparison with விட or to a location. Thus, in superlative constructions, the thing which is being compared to is either a 1) pronoun expressing totality, e.g., எல்லாவற்றையும், எல்லாரையும், எல்லோரையும், அனைவரையும்), 'everyone' or 'all persons' (note how the accusative case suffix is inserted after எல்லா ('all') and before உம்). 2) a noun modified by numeral adjective, e.g. எங்கள் மூன்று பேரையும் விட ('than the three of us'; lit. 'than our three people'), அந்த பத்து பேரையும் விட ('than those 10 people). 3) Alternatively, the superlative can be expressed by using a noun (location) in the locative case with emphasis (either ஏயே); here there is no comparison word (and hence no accusative case), e.g., மகாபலிபுரத்திலேயே ('in all of Makapalipuram'), தென்னிந்ந்தியாவிலேயே ('in all of South India').7. குமார் வகுப்பில் எல்லோரையும் விட நன்றாகப் படிப்பான்.
8. எங்கள் அனைவரையும் விட உங்களுக்குத்தான் நிறைய மதிப்பு இருக்கிறது.
9. உங்கள் எல்லாரையும் விட என்னிடம் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன.
10.எங்கள் பத்துப் பேரைக் காட்டிலும் உன்னைத்தான் அவருக்குப் பிடிக்கிறது.
11. இந்தத் தெருவில் உள்ள வீடுகள் எல்லாவற்றையும் விடப் பெரிய வீடு இந்த ஊரில் இல்லை.
12. இந்த கார் எக்மோரிலேயே வேகமான கார்
13. அந்த குழந்தை உலகத்திலேயே அழகான குழந்தை.
Equative ConstructionsThe post-positions போல and மாதிரி are used to compare two nouns in terms of similarity rather than difference. Like விட and காட்டிலும், these suffixes also take the accusative case marker obligatorily. 14. உங்களைப் போலவே என்னுடைய அப்பாவும் நன்றாகத் தமிழ் பேசுவார்.
15. என்னைப் போல உங்களுக்கும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கிறார்கள்.
(Note that the use of the suffix உம் with the subject is necessary in these constructions, although the use of the emphatic suffix ஏ is optional with the comparative marker போல. Also note the different use of the suffix உம் in 15). 16. நேற்றைய மாதிரியே இன்றைக்கும் நன்றாகப் பனி பெய்கிறது.
17. உங்கள் வீட்டில் இருப்பதைப் போலவே எங்கள் வீட்டிலும் நல்ல தோட்டம் ஒன்று இருக்கிறது.
| |
| |
Sibiling Rivalry (பங்காளிச் சண்டை)It is common among sibilings to fight (சண்டை போடு), both verbally as well as physically. Often parents intervene with some sort of punishment involving both scolding and spanking. Spanking is very common in Tamil culture. In fact, there is a saying அடியாத மாடு படியாது, 'the cow that is not spanked won't be obedient'. Parents in Tamil culture believe that the children should be raised to respect and fear their parents so that they don't develop a habit of disrespecting adults. Respecting one's parents is always expected and it is not uncommon for misbehavior to be physically punished, sometimes to the extreme of hitting them with sticks, kicking them, knocking on their heads with their fists, slapping them on their cheeks and so on. Spanking is also very common by teachers in elementary and high schools, though not in colleges. No government law has been implemented so far to legally punish such actions as the notion of how to raise children is much different.The term பங்காளிச் சண்டை specifically refers to misunderstanding between sibilings at an older age when it comes to distributing inheritance. It is common among brothers to fight at the time of partitioning the family's inherited properties. In many cases, after the partition the sibilings don't get along anymore and live without any contact whatsoever. | |
© South Asia Language Resource Center (SALRC) |