கருமி
ஒரு ஊரில் ஒரு பணக்காரர். அவர் பெரிய கருமி. யாருக்கும் பணம் கொடுக்க மாட்டார். ஏழைகளுக்கு உதவ மாட்டார். எவர் எப்பொழுதும் பழைய சட்டையைத்தான் போடுவார். கிழிந்த துண்டுதான் அவருடைய தோளில் இருக்கும். பழைய செருப்புதான் போடுவார். “உங்களிடம் நிறைய பணம் இருக்கிறது. ஆனால் நீங்கள் ஏன் பழைய சட்டையையும் செருப்பையும் போடுகிறீர்கள்?” என்று எல்லோரும் அவரிடம் கேட்பார்கள். அதற்கு அவர், “ நான் புது சட்டையும் புது செருப்பும் போட்டால், எல்லோரும் என்னிடம் பணம் கேட்பார்கள். உதவி செய்ய சொல்வார்கள். அதனால்தான் நான் பழைய சட்டையை போடுகிறேன்”, என்று சொல்வார்.
ஒரு நாள் அந்த பணக்காரர் வெளியூருக்குப் போனார். அங்கேயும் அவர் புதிய சட்டையும் புதிய செருப்பும் போடவில்லை. “ நீங்கள்தான் வெளியூரில் இருக்கிறீர்களே. நீங்கள் ஏன் புதிய சட்டை போடவில்லை,” என்று கேட்டால் அவர், “னான் வெளியூரில் இருக்கிறேன். இந்த ஊரில் என்னை யாருக்கும் தெரியாது. எனக்கு ஏன் புதிய சட்டை?” என்று கேட்பார்.
|