
|
எங்கள் குடும்பம்
எங்கள் குடும்பம் ஒரு பெரிய குடும்பம். எங்கள் குடும்பத்தில் ஐந்து பேர் இருக்கிறோம். அப்பா, அம்மா, ஒரு தம்பி, ஒரு தங்கை, நான் எல்லோரும் இருக்கிறோம். என் அப்பா ஒரு பெரிய வக்கில். என்னுடைய அம்மா மருத்துவர். நான் ஒரு தமிழ் ஆசிரியர். என் தம்பி இசைக் கல்லுரியில் படிக்கிறான்.
என் தம்பிக்கு ஒரு கார் இருக்கிறது. இது பச்சை நிறம். என் அப்பா, அம்மா இரண்டு பேருக்கும் கருப்பு கார் இருக்கிறது. எனக்குக் கார் இல்லை. தங்கைக்கு ஒரு மிதி வண்டி இருக்கிறது. என் அப்பா அம்மாவை விட உயரம். அம்மா என்னை விட குள்ளமாக இருக்கிறார்கள். என் தங்கை அம்மாவைப் போல அழகாக இருக்கிறாள். நாங்கள் அழகான வீட்டில் இருக்கிறோம். எங்கள் வீடு நீயூயார்க்கில் இருக்கிறது. நியூயார்க் ஒரு அழகான நகரம். எங்கள் வீடு நீயூயார்க்குக்குத் தெற்கே இருக்கிறது. எங்கள் வீட்டுக்கு வடக்கே ஒரு குளம் இருக்கிறது. குளத்தில் நிறைய மீன் இருக்கிறது. குளத்துக்குப் பக்கத்தில் ஒரு அழகான பூங்காவும் இருக்கிறது. வீட்டுக்குக் கிழக்கே ஒரு அழகான கோவில் இருக்கிறது. அந்தக் கோவிலுக்கு மேற்கே ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது. அந்தப் பள்ளிகூடத்தில் தன் என் தங்கை படிக்கிறாள். எங்கள் ஊர் எப்பொழுதும் குளிராக இருக்கிறது. எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் எங்கள் மாமாவும் மாமியும் வசிக்கிறார்கள். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஒரு ஆண், ஒரு பெண். மகன் பெயர் காந்தி. மகள் பெயர் ரேவதி. காந்தி ஒரு நிறுவனத்தில் மேனேஜர். ரேவதி ஒரு மருத்துவர். ரேவதி ரொம்ப அழக�
��னவள். நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இது தான் எங்கள் குடும்பம்.
|