![]() |
|
Select Unit > Unit 3: உங்களுக்கு வழி தெரியுமா? > Lesson 3: Spoken Translation | Lessons: 1 2 3 4 5 6 Exercises: 1 2 3 4 5 6 Reading: 1 2 Glossary Conversations Test |
A:ஐய்யா, ஒரு நிமிஷம். பெரிய கோவிலுக்கு வழி தெரியுமா?
B:நான் இந்த ஊர்தான். பெரிய கோவில் போகிறதற்கு எனக்கு நன்றாக வழி தெரியும். உங்களுக்குப் பழக்கடை தெரியுமா?
A:எனக்கு இந்த ஊரில் ஒன்றும் தெரியாது. நான் இந்த ஊருக்குப் புதிது. நீங்கள் ரொம்ப விளக்கமாகச் சொல்லுங்கள்.
B:சரி. நீங்கள் இந்த தெருவில் நேராகப் போங்கள். கடைசியில் ஒரு குளம் தெரியும். அதற்குப் பக்கத்தில் ஒரு தெரு தெரியும்.
A:இருங்கள்! இருங்கள்! நான் எழுதுகிறேன். நேராகப்போங்கள்! ஒரு குளம் தெரியும்! குளத்துக்குப் பக்கத்தில் ஒரு தெரு தெரியும். சரி. சொல்லுங்கள்.
B:அந்தத் தெருவில் ஒரு பழக் கடை இருக்கிறது. அங்கேயிருந்து ஒரு மூன்று நிமிஷம் நடங்கள். அந்தத் தெருவில் பாதியில் வலது பக்கம் திரும்புங்கள்.
A:கொஞ்ச நேரம் பொறுங்கள். ஒரு பழக் கடை இருக்கிறது. அங்கேயிருந்து ஒரு மூன்று நிமிஷம் நடங்கள். அப்புறம்?
B:அந்தத் தெருவில் பாதியில் வலது பக்கம் திரும்புங்கள்.
A:சரி! சொல்லுங்கள்.
B:திரும்பி இரண்டு நிமிஷம் நடந்தால் பெரிய கோவில் உங்களுக்கு இடது பக்கம் இருக்கும்.
A: ரொம்ப நன்றிங்க. உங்களிடம் செல் போன் இருக்கிறதா? பாதியில் வழி தெரியவில்லை என்றால் உங்களைக் கூப்பிடுவேன்.
B:என்னிடம் செல் போனும் கிடையாது. கிராம போனும் கிடையாது. உங்களுக்கு பாதியில் வழி தெரியவில்லை என்றால் அங்கே யாரிடமாவது கேளுங்கள் அவர்கள் சொல்லுவார்கள்! |
|
| |
Defective verbs'Defective' verbs are verbs that can only be conjugated with the neuter PNG suffix. Often, what would be the 'subject' in English is put in another case (e.g., the dative, instrumental). Such verbs also typically use the future/habitual to express the 'present.'Defective verbs are often called 'stative verbs' because rather than refer to events or processes, they refer to states. In Tamil such verbs are often psychological verbs, e.g., தெரி, 'know', பிடி, 'like', புரி, 'understand.' Again, as with the modals, the habitual/future tense is used to express general/habitual knowing, liking, undestanding, etc., where as the past/present forms are used in more specific (or marked) contexts:
1st per(obl)-dat tamil speak(inf.) know-fut neut I know (how) to speak Tamil. அவருக்கு அது பிடிக்காது
1st pers(obl)-dat 3rd pers masc-poss tamil understand-fut neut I (always/generally) understand his Tamil. எனக்கு அவருடைய தமிழ் புரியாது
எனக்கு அவருடைய தமிழ் புரியவில்லை
In contexts where evidence for knowing, understanding, liking, etc. is immanent, the present tense is used. As with the past, the present and past tenses are used to refer to particular moments:
what that way Tamil speak-pres-2nd pers. impolite-interoggative. 2nd pers(obl)-dat right-adv-emp. Tamil speak(inf) know(inf)-pres/past neg. 'What! You speak Tamil in that way? (cf. That's how you speak Tamil?) You do not know how to speak Tamil.' Below are examples of other defective verbs--கிடை (spoken, கெடெ), 'be available, have, get', போடு, 'be enough', வலி, 'hurt', பசி, 'be hungry.'
food available-fut neut-interrogative Is there food available (in general)? அவருக்கு வேலை கிடைக்காது
இப்பொழுது புத்தகம் கிடைக்கவில்லை
அது எனக்கு போதும்
அவ்வளவு சாப்படு அவருக்கு போதாது
எனக்கு பசிக்கிறது
என் கால் வலிக்கும்
Dialogue: unit_03/section_B/lesson01.html | |
| |
Giving and asking for directionsThere are specific words and phrases that can be learned in order to give or understand directions. Directions are normally given with respect to particular landmarks or other points of reference. So, one usually hears a lot of dative expressions in directions. This is also because many of the spatial phrases require the noun they modify to be in the dative. For example, வீட்டுக்கு முன்னாலெ (before the house), கடைக்குப் பக்கத்துலெ (near the store) and so on. Many direction phrases in Tamil are expressed using separate words called post-positions (see Unit 1, Grammar Lessons 4-5). Post positions usually require the noun they modify to have a case suffix, e.g., the dative உக்கு, the genitive/possessive இன் or the accusative ஐ. Words denoting the four directionsவடக்கு (north), தெற்கு (south), மேற்கு (west), கிழக்கு (east) Spoken forms: வடக்கெ, தெக்கெ or தெற்கெ, மேற்கெ, கெழெக்கெ Ex: இந்தியாவுக்கு வடக்கே/ வடக்கு பக்கத்தில் இமயமலை இருக்கிறது
Himalayas is to the north of India.
Words denoting the relative spatial locationsமுன்னால் (in front of), பின்னால் (back of), பக்கத்தில் (on the side of, close), நடுவில் (in the middle of) The corresponding spoken forms are: முன்னாலெ, பின்னாலெ, பக்கத்துலெ, நடுவுலெ. a) In front of, before: முன்னால் ''முன்னால': Ex: n. எனக்கு முன்னால் மேசை இருக்கிறது. (''இருக்கு") A table is in front of me. b) Behind, besides, back of: பின்னால் ''பின்னால": Ex: 3. உங்களுக்கு பின்னால் நாற்காலி இருக்கிறது. There is a chair behind me. c) Above, on top of etc.: மேல் ''மேல": Ex: 4. மேசைக்கு மேல் என்ன இருக்கிறது? What is above the table? d) Below, underneth etc.: கீழே or கீழ் ''கீழ": Ex: 5. நாற்காலிக்கு கீழே என் பை இருக்கிறது. My bag is under the chair. Side of, near etc.: பக்கத்தில்: Ex: 6. அவருக்கு பக்கத்தில் என்ன இருக்கிறது? What is near him? Other useful words and phrases: நேரா போங்க/ நேரா போகணும் (go straight) எடது பக்கத்துலெ திரும்புங்க (turn left side) நேரா கொஞ்ச தூரம் போங்க (go stright for some distance) அங்கேருந்து கொஞ்ச துரத்துலேயே (within a short distance from there) அங்கேருந்து ரொம்ப தூரம் போயிடாதீங்க (don't go far from there) ஒரு ரெண்டு நிமிஷம் நடக்க்றதுகுள்ளேயே (within a two minute walk) | |
© South Asia Language Resource Center (SALRC) |