Home
Overview
Technical Help

Select Unit > Unit 6: வெள்ளை சட்டையையே போட்டுக்கொள். > Lesson 5:   Written      Translation   Lessons:   1   2   3   4   5   6   Exercises: 1   2   3   4   5   6   Reading: 1   2   Glossary    Test

    

Mother: என்னடா இது? interviewவுக்குப் போறெ! வெள்ள சட்டெ போட்டுக்கோ வெள்ள pant போட்டுக்கோ!

Son: வேண்டாம் வேண்டாம்! நான் பச்செ சட்டையே போட்டுக்றேன் அம்மா.

Mother: ஊகும் வெள்ள சட்டதான் போட்டுக்கணும். வெள்ள சட்டையையே போட்டுக்கோ.

son: சரி சரி. போட்டுக்றேன்.

He wears white அம்மா இப்போ சரியா இருக்கா?

Mother: tie கட்டிக்கோ. shoe போட்டுக்கோ.

Son: அதெல்லாம் வேண்டாம்மா. செருப்பையே போட்டுக்றேன்.

Mother: சொன்னால் கேள்! tieஐக் கட்டிக்கோ. shoeவைப் போட்டுக்கோ.

son: சரி போட்டுக்க்றேன்.

He wears tie, shoe அம்மா tieஐக் கட்டிக்கிட்டேன். shoeவைப் போட்டுக்கிட்டேன். போகட்டுமா?

Mother: ஊம்.. உம்ம். இந்தா! இந்த ரெண்டு வாழைப்பழம். வச்சிக்கோ! பசிச்சா சப்பிட்டுக்கலாம்!

Son: என்னிடம் பையே இல்லெ! அம்மா. வாழைப்பழத்தெயெல்லாம் வச்சிக்க முடியாது!

Mother: சின்னப் பையெ எடுத்துக்கோ!. மழை வர்ற மாதிரி இருக்கு. கொடெயெ வச்சிக்கோ.

Son: வெளியிலெ பாரம்மா. சுத்தமா வெயில் அடிக்கிது! குடையெல்லாம் வேண்டாம்.

Mother: சொன்னா கேளேண்டா. மழெ வந்தா நனஞ்சிடுவே. கொடெயெ எடுத்துக்கிட்டு போனா நனையமாட்டே.

He takes an umbrella and a bag.

Mother: ஊம்ம். வெயில் அடிக்கிது. இந்தத் தொப்பியைப் போட்டுக்கோ!

Son: அதெல்லாம் வேண்டாம்மா!.

Mother:அதெல்லாம் முடியாது! தொப்பியைப் போட்டுக்கோ!

He is ready to go out

Mother: சமத்தா இருக்கே.

Son: அம்மா. இப்படியே போனா வேலெ கிடைக்காதும்மா.

Mother: இரு! இரு! யாராவது அபசகுனமா குறுக்கே வந்துடப்போறாங்க! பார்த்துட்டு வறேன். she looks outside. நல்லா இருக்கு சகுனம். கெளம்பு.

Son: சரி! சரி! நான் போறேன்!

Mother: என்ன! போறேன் வர்றேண்ணு சொல்லிக்கிட்டு. போய்ட்டு வறேண்ணு சொல்லிக்கோ!

Son: சரிம்மா! நான் போய்ட்டு வறேன்!

mother: நல்லபடியா போய்ட்டு வாப்பா.

Son sets out in white, tie, hat, umbrella in hand, bananas in a bag! within a minute! a servant who was working on the upstairs spills a bucket of water on him!

Son: அம்மா சொன்னது சரிதான். மழெ வந்துட்டுது.

  Grammar Notes:

  என்

  We have already seen the AVP form of என்று, grammaticalized as the quotative marker. என் is also verb that occurs on its own as a main verb, ‘to say.’ In addition, it also occurrs in a number of other grammatical forms (AJP, verbal noun) with various different meanings. Below, some of these uses and grammatical constructions are explained.

  Use of என் as a main verb

  As any verb என் as a main verb takes tense and PNG accordingly. As it is used for reported speech constructions, என் as a main verb can be used as both the quotative and the main verb at the same time; that is, it can be used to embed other sentences in reported speech constructions.

  I. என்கிற்-PNG ‘say' (Present tense form)

   நான் வருகிறேன் என்கிறேன் (Written form)
   I say that I am coming.

   நான் வறேங்க்றேன் (Spoken form)

  II. என்ற்-PNG ‘said' (Past tense form)

   நான் ஜான் காப்பி குடித்தான் என்றேன் (Written form)
   I said that John drank coffee.

   நான் ஜான் காப்பி குடிச்சாண்ணேன் (Spoken form)

  III. என்ப்-PNG ‘will say' (Future tense form)

   மேரி நானும் வருவேன் என்பாள் (Written form)
   Mary will say that she will also come.

   மேரி நானும் வருவேம்பா (Spoken form)

  Other uses of என்


  So far, then, we have seen என் as a main verb that can be put in various tenses and conjugated with various PNG endings. In addition to the past, present, and future, என் can also be put in other various grammatical forms and used in different ways. To various degrees, some of these uses are much different from என் meaning as a main verb.

  என்று: the quotative marker (Lit. ‘having said’).

  We have already seen how என்று (AVP of என்) is used as a quotative marker like 'that' in English in reported speech and thought constructions. Below are a number of other uses of என்று not discussed in that lesson.

  Identification (‘called’) In Tamil, என்று can also be used is expressions where to designate the name of something or someone. It can often be translated as ‘called’ or ‘named.’ Here, rather than coming after a full sentence, என்று comes after the proper name.

   இந்த ஊரில் ராமனாதன் என்று ஒரு ஆள் இருக்கிறாரே அவரை உங்களுக்குத் தெரியுமா?
   Do you know that there is person called Ramanathan in this town.

   பல வருடங்களுக்கு முன்னால் 'பராசக்தி' என்று ஒரு சினிமா வந்ததே உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?
   Do you remember that there a movie named ‘Parashakthi’ was released many years ago.

  Purposive and causal expressions என்று can also be used in purposive and causal constructions, translatable as ‘in order to’ or ‘because’, respectively. The purposive requires that the subordinate clause verb contain the modal -லாம் or வேண்டு.

   உங்களுக்கு அதை கொடுக்கலாம் என்று வந்தேன்.
   ‘I came in order to give this to you.’

   எனக்கு அவர்களுடைய சாப்பாடு பிடிக்காது என்று அவர்கள் சாப்பிடமாட்டார்கள். ‘Because I don’t like her food she won’t cook.’

  Onomotopoeic Expression என்று can also be used in onomatopoeic expressions (and in forming adverbs more generally) through reduplication.

   தொண தொண என்று பேசாதே.
   Don’t blabber. (Lit. Don’t speak like “tona tona”).

   தண்ணீர் கல கல என்று ஓடுகிறது.
   ‘Water runs murmurously.’ (cf. Water runs like “kala kala”).

   அவர் அவனை அடி அடி என்று அடிப்பார். ‘He is going to severely beat him.’

   வெயில் சுள் என்று அடித்தால் மழை நிச்சயம் வரும் என்பார்கள்.
   It is commonly believed that if there is a hot sun, there will be rain definetly.

   கதவைப் படார் என்று தள்ளிவிட்டான் அந்தச் சின்னப் பையன்.
   That little boy pushed the door forcefully - making the noise 'pataar'.

  Giving focus When என்று follows a noun in the dative case it can adds emphasis or focus on that noun, and can be translated as ‘just for.’

   உனக்கு என்று வாங்கிவந்த சட்டையை நீ ஏன் உன்னுடைய தம்பியிடம் கொடுத்துவிட்டாய்.
   Why did you give to your brother the shirt that I bought just for you.

   ஊருக்கு என்று ஒரு ஞாயம் (judgement/rule) உனக்கு என்று ஒரு ஞாயமா? எல்லோருக்கும் ஒரே ஞாயம் தான்.
   Everyone gets the same rule. There isn’t one rule just for you and another one for everyone else.

  Adjectival Participle of என்

  என் can take an adjectival form (AJP) என்கிற. Structure: என்கிற NOUN (cf. relative clause in English).

   நான் சீதா என்கிற பெண்ணை கடைத் தெருவில் பார்த்தேன். (written)
   நான் சீதாங்க்ற பொண்ணெ கடெத் தெருவுலெ பாத்தேன். (spoken).
   I saw a girl called Sita.

   நாளைக்கு உங்களுடைய அப்பா இந்தியாவிலிருந்து வருகிறார் என்கிற சேதி எனக்குத் தெரியாது. (written)
   நாளெக்கி ஒங்களோடெ அப்பா இந்தியாவுலேருந்து வறாங்கங்க்ற சேடி எனக்கு தெரியாது. (spoken)
   I do not know the news/fact that your father is coming from India tomorrow.

  Verbal noun of என்: the factive

  என் can also take a nominalized form (verbal noun), thus turning a sentence with the main verb என் into a complex noun. In the present tense this is என்கிறது, literally, 'that which is called'. It can be translated as the factive, ‘the fact that…’ Note how the spoken version differs.

   ஜான் உங்களுடைய வீட்டுக்கு நேற்று வந்தார் என்கிறது எனக்குத் தெரியாது (written)
   ஜான் உங்களோடெ வீட்டுக்கு வந்தார்ங்க்றது எனக்கு தெரியாது. (spoken)
   I do not know the fact that John came to your house yesterday.

  Similarly, என்றது is the nominalized form of என் in the past tense, ‘ lit. that which was called.' Unlike the present form, however, என்றது does not necessarily denote, or imply, that an actual speech event has taken place. That is, this form has lost the notion of speaking in its meaning.

   நீங்கள் இந்தி பேசுவீர்கள் என்றது பொய் (Written)
   நீங்க இந்தி பேசுவீங்கண்ணது பொய். (Spoken)
   It was a lie that you speak Hindi. (Another possible interpretation: It is a lie that I said that you speak Hindi).

  The verbal noun can also take case endings. For example, the instrumental/causal case ஆல் as in என்கிறதால், literally since something is said.' Like the past tense verbal noun, this form has lost its specific meaning of denoting speech events, and simply means 'because' or 'since' more generally.

   நான் போன வருஷம் தமிழ் படித்தேன் என்கிறதால் இந்த வருஷமும் தமிழ் படிக்கிறேன். (written)
   நான் போன வருஷம் தமிழ் படிச்சேங்க்றதால இந்த வருஷமும் தமிழ் படிக்கிறேன்.(spoken)
   Since I studied Tamil last year, I study Tamil this year also.

  Other grammatical forms: the conditional, concessive

  என் can also take the conditional form, என்றால், literally 'if something is said.' However, like the past tense verbal noun, this form has also lost its specific meaning of denoting speech events, and is more generally used as a marker of the conditional more generally (see Unit 5, Grammar Lesson 2)

   நீங்கள் வருவீர்கள் என்றால் நானும் வருவேன்.
   நீங்க வருவீங்கண்ணா நானும் வருவேன்.
   I will come if you come. (lit. 'If it is said that you will come I will also come')

  When உம் is attached to the conditional of என், என்றாலும் (cf. concessive), if means ‘however’ or ‘nevertheless’ (lit. ‘even if it is said that’):

   அவர் எனக்கு பிடிக்கவில்லை. என்றாலும் அவருடைய விருந்துக்கு போனேன்.
   I didn’t like him. Nevertheless, I went to his party/feast.’

  Homework:

  Identify whether these sentences belong to one of the above types or of a different type?

  6) மழை கிழை வந்துவிடுமோ என்று எங்களுக்கு ஒரே பயம்.

  7) பகல் என்றும் ராத்திரி என்றும் பார்க்காமல் அவன் கடுமையாகப் படித்தானே தவிர பரிட்சையைச் சரியாகவே எழுதவில்லை.

  8) ராஜா என்றோ மந்திரி என்றோ யாரும் இங்கே கிடையாது எல்லோரும் ஒரே நிலைதான் (status).

  9) வரமுடியவில்லை என்றால் பரவாயில்லை சும்மா வருகிறேன் என்றாவது சொல்லுங்களேன்.

  Translate the following sentences. Use the word என்று in all your sentences.

  1. I told my friend that I met (சந்தி) a person called Sitaraman. (identification).

  2. No matter whether it rains or shines, the peasants (விவசாயிகள்) always work (உழை) hard. (use the nouns மழை and வெயில் for the verbs 'rains' and 'shines').

  3. I have a pounding (விண் விண்) head ache. (onomatopoeia).

  4. Who cares (use கவலை) whether he is a teacher or student. He is just an ordinary (சாதாரண) person.

  5. I bought this car just for you. (focus).
  I. Translate:
  1) I have been saying that you come to my house frequently!
  2) You have been saying that I should wait for some time.
  3) Did you hear me asking what is the matter?
  4) Everyone knows the fact that you have been saying that you wouldn’t get up from where you are sitting.
  5) What do you say that I should do?
  6) Do you know what needs to be done.
  7) You have been talking about what you want to do.
  8) For the reason that I haven’t asked you, you didn’t give it to me.
  9) I was telling that I am thinking whether I can sleep for some time.

  II. Translate:
  1. எல்லோரும் படித்துக்கொண்டிருக்கிறதாலும் மழை பெய்து கொண்டிருக்கிறதாலும் பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை (day off) விட்டுவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.
  2. Because you have been watching Tamil cinema for the past two years, you have been speaking Tamil very well.
  3. நீங்கள் உங்களுடைய ஊருக்கு போய்விட்டால் இங்கே தமிழ் படிக்கிறதற்கும் பேசுகிறதற்கும் யாரும் இருக்கமாட்டார்கள். நான் நூலகத்திலிருந்து நிறைய புத்தகம் எடுத்துக்கொண்டு வந்து படித்துக்கொண்டிருப்பேன் என்று நினைக்கிறேன்.
  4. Have you been to India and seen the Taj Mahal? Because I hadn’t been to India, I hadn’t seen the Taj Mahal.
  5. நான் சிகாகோவுக்கு போனதில்லை என்கிறதால் நான் சிகாகோவின் சியர்ஸ் டவர் பார்த்ததில்லை. நீங்கள் சிகாகோவுக்கு போய் சியர்ஸ் டவர் பார்த்திருக்கிறீர்களா?
  6. If you had seen my brother, you would have spoken to him in Tamil. Because he studied Tamil in school, he was able to speak Tamil well.
  7. நான் நல்ல குடையை எடுத்துக்கொண்டதால் நான் மழையில் நனையவில்லை. என்னுடைய நண்பர் குடை எடுத்துக்கொள்ளாததால் நன்றாக நனைந்துவிட்டார்.
  8. I live in the house number 252. Do you live on the twenty fifth street?
  9. என்னுடைய பேனா காணாமல் போய்விட்டதால் நான் இப்பொழுது பென்சிலால் எழுதிக்கொண்டிருக்கிறேன். நான் பென்சிலால் எழுதிக்கொண்டிருக்கிறதால் என்னால் வேகமாக எழுதமுடியவில்லை.
  10. Because I lost my Tamil book, I have reading the story from my friend’s book.
  Make sentences/expressions using the following:
  1) நீங்களாவது வாங்கி கொடுக்றதாவது
  2) வாங்கிக்கிரேம்பான்
  3) 2. படிக்கிறேன் படிக்கிறேண்ணு சொல்லுவீங்க. ஆனா படிக்கவே மாட்டீங்க.

  Write the written form of the following words:
  4) ஓட்டிப்பாக்றேம்பான்
  5) கொடுக்றேண்ணேனே
  6) சொல்றேங்குறதுக்காக


  Dialogue: unit_09/section_A/lesson01.html

  Cultural Notes:

  Influence of English in Tamil

  After the British invasion in Tamil Nadu, use of English attained a prestigious and luxurious status among the Tamils. As a result, mixing English words and phrases in Tamil became very popular and common among educated speakers. Just as using Sanskrit words in one's speech was considered to be better than their corresponing Tamil words, use of English words and sentences in Tamil speech became more acceptable than the pure Tamil utterances.

  A common way that English words are put to use in Tamil is through a number of verbalizers including பண்ணு, 'to do.' and அடி 'beat/hit'. These verbs can be used to turn a noun, Tamil or otherwise, into a verb. It is commonly used in assimilating English words into Tamil. For example,

   TV off பண்ணுங்க. 'Turn off the TV.'
   அவரு workபண்ணினா ரொம்ப complainபண்ணுவாரு. 'If he does work, he complains a lot!'
   நான் suddenஆ ஒரு breakஅடிச்சதுனாலெ எல்லாரும் ஒரு dive அடிச்சி கீழ விழுந்துட்டாங்க! 'As I applied break suddenly, everyone in the car dived forward and fell down.'
   எல்லாரும் jump பண்ணி jump பண்ணி நேரத்தெ wasteஅடிச்சிக்கிட்டிருந்தாங்க. 'They were wasting their time just jumping up and down'.

  However, this does not mean that any English word can be used. Use of English words with Tamil grammar developed a standard usage where not all combinations of English and Tamil are equally acceptable. For example, நான் chairலெ உக்காந்து ஒரு bookஐ read பண்ணிக்கிட்டிருந்தேன் 'I sat in a chair and read a book' is acceptable and very natural, but not I chairலெ sit பண்ணி study பண்ணுனேன்.

  Use of Tamil case and other suffixes with English words as in சேர்லெ 'in the chair', கஸ்டமுக்காக 'for the Custom', bribeலேருந்து 'from the bribe', taalஆ 'tall', shortஆன 'short'; use of Tamil adjectives with English nouns as in ஒரு சின்ன piece of information 'a small piece of information', பெரிய presidentஉண்ணு நெனப்பா உங்களுக்கு 'do you think you are the great president?' etc. are very common in Tamil speech.

  In fact, for many, mixing English words and phrases in one's speech is considered more natural and sophisticated than trying to use only pure Tamil words. Following are some commonly used expressions that one hear in Tamil speech.

  நீங்க ஹோட்டலுக்கு ரீச்சான ஒடனே எனக்கு ஒரு போன் பண்ணி inform பண்ணிடுங்க. 'As soon as you reach the hotel, inform me with a phone call'.

  Morning nine o'clockலேருந்து factoryலெ work பண்ணிட்டு evening five o'clockகுக்கு வீட்டுக்கு வந்தா wifeஓட பெரிய nuisance. அது mistake இது mistakeண்ணு complain பண்ணி ஒரே head acheதான் போங்க! 'I work from the morning nine o'clock until five o'clock in the evening in a factory. But, when I return home from work, my wife complains about so many things not being right. She is such a nuisance. I get all but headache!

  Recent attempts of the government and other Tamil development organizations resisted upon the use of English and proposed Tamil equivalents for many words and phrases. Even though such words have attained popularity at only level of 'comprehension', they are yet to replace completely their English equivalents in speech. Following are some of the commonly known words and phrases but are yet to be very common in 'speech'.

  மிதி வண்டி நிலையம் 'Cycle/bike shop'

  புகை வண்டி நிலையம் 'Train station'

  பேரூந்து நிலையம் 'Busstand'

  விமன நிலையம் 'Airport'

  நடத்துனர் 'Bus conductor'

  ஓட்டுனர் 'Driver'

  காசோலை 'Check'

  வங்கி 'Bank'

  நூலகம் 'Library'

  கோப்பு 'File as in folder'

© South Asia Language Resource Center (SALRC)