![]() |
|
Select Unit > Unit 6: காலையில் என்ன சாப்பிட்டாய்? > Lesson 1: Written Spoken Translation | Lessons: 1 2 3 4 5 6 Exercises: 1 2 3 4 5 6 Reading: 1 2 Glossary Test |
Boy: மல்லிகா! மல்லி! என்ன செய்துகொண்டிருக்கிறாய்?
Girl: பார்த்தால் தெரியவில்லை. துணியைத்தான் காயப்போட்டுக்கொண்டிருக்கிறேன்.
A:சரி. காலையில் என்ன சாப்பிட்டாய்?
B:கோதுமைக் கஞ்சிதான் குடித்தேன்.
A:நானும் கோதுமை கஞ்சிதான் குடித்தேன். என்ன தொட்டுக்கொண்டாய்?
B:பச்சை மிளகாயைதான் தொட்டுக்கொண்டேன்!
A:நானும் பச்சை மிளகாய்தான் தொட்டுக்கொண்டேன். மல்லிகா, நீ ரொம்ப அழகாக இருக்கிறாய்!
B:அட! சீ! போ! இதற்குத்தானா நானும் கோதுமைக் கஞ்சியைக் குடித்தேன், நானும் பச்சை மிளகாயைத் தொட்டுக்கொண்டேன் என்று கதை விட்டாய்?
A:ஐயோ! அப்படி சொல்லாதே! நான் நிஜமாகத்தான் சொல்கிறேன். என்னை நம்பு.
B:நான் எதை நம்பவேண்டும்? நீ கோதுமை கஞ்சி குடித்ததையா?
A:இல்லை! இல்லை! நீ அழகாக இருக்கிறாய் என்று சொன்னேனே. அதைத்தான்.
B:இதோ பார். சும்மா நான் அழகாக இருக்கிறேன் கிழகாக இருக்கிறேன் என்று அசடு வழிந்துக்கொண்டே இருக்காதே! போய் வேறு ஏதாவது உறுப்படியாக வேலையைப் பார்! போ!
A: அப்போ, இதை எல்லாம் நான் என்ன செய்ய?
B: ஐ! இதெல்லாம் எனக்கா? கொடு! கொடு! கொடு! |
|
| |
Using the auxilliary verb கொள்கொள் is an auxilliary verb that also occurs on its own as a main verb. கொள் as a main verb has the meaning 'hold, contain, have', though its use as a main verb is rare. Also like விடு and the other aspectuals, கொள் has a number of different meanings that vary depending on the context. It comes after another verb that is put in the AVP and can take tense and PNG. In its non-finite form it can be used to express simultaneity.
Benefactive meaning:Using கொள் with a verb in the AVP indicates that the subject is benefited by the action stated by the verb.1. பிள்ளையார் முருகனுக்குத் தெரியாமல் பழத்தை வாங்கிக்கொண்டார்.
2. நல்ல சட்டையை நான் எடுத்துக்கொண்டேன். சாதாரண சட்டையை தம்பியிடம் கொடுத்துவிட்டேன்.
3. மழையில் நனையாமல் இருக்கக் குடையை நன்றாகப் பிடித்துக்கொள்ளுங்கள் Reflexive meaning of கொள்:Adding the suffix கொள் makes the object and subject of the AVP one and the same. Usually a reflexive pronoun டான் ' self' is included in such constructions.4. குருவும் மாணவனும் தங்களுக்கே சாபம் விட்டுக்கொண்டார்கள். The teacher and the student cursed themselves. (By cursing each other they got a curse for themselves eventually) 5. மந்திரவாதி தன்னையே கண்ணாடியில் பார்த்துக்கொள்வார். The magician sees himself in the mirror 6. வானம் எப்பொழுதும் தன்னையே புகழ்ந்துகொள்கிறது. Sky always praises itself. Use of கொள் for future use/ego benefaction etc.:Adding the suffix கொள் gives a slightly different meaning from 'benefaction', as we saw above. Rather, it can also be used to express that the action of the AVP is for 'future use' or 'for one's own sake' etc. 7. செருப்பைப்/ சட்டையைப் போட்டுக்கொள்... (put on your chepals/ shirt etc.,) 8. ஊருக்குப் போவதற்கு முன்னால் எல்லாவற்றையும் எடுட்டு வைத்துக்கொள். You have to get everything packed before you leave for another town. 9. இந்தப் புத்தகத்தை எனக்காகக் கொஞ்ச நேரம் வைத்துக்கொள்ளுங்கள். Please keep this pen for a while for me. Use of கொள் to express the process of becoming (inchoative/punctual)கொள் can also be used to indicate that some event/state is coming into being. This meaning occurs primarily with verbs that describe states, such as the defective (dative subject) verbs such as தெரி, புரி. Note how the subject's case changes are it is the auxiliary கொள் which takes the PNG agreement suffix. எனக்கு தமிழ் தெரியும். 'I know Tamil.'
எனக்கு நீங்கள் சொன்னது புரிந்தது. 'I understood (it was understandable) what you said.'
Expressing simultaneityகொள் in the non-finite AVP form, கொண்டு (sp. கிட்டு) can be used to express simultaneity of actions. The structure is AVP1-கொண்டு...Main Verb. அவர் பேசிக்கொண்டு கார் ஓட்டினார். (written)
அவர்கள் நிறைய புத்தகம் எடுத்துக்கொண்டு மதுரைக்கு போவார்கள்.
Writing exercise I. Translate the following sentences with கொள் appropriately. 1. The elephant went into to the pond to drink water. 2. The Guru and the teacher cursed themselves. 3. The magician saw himself in a mirror. 4. I took lots of money before leaving for India. 5. I wore a good shirt.
Practice drill for கொள்1. நான் இந்தியாவுக்குப் போனால் நிறைய பணம் எடுத்துக்கொள்வேன் நிறைய மருந்து வாங்கு நல்ல சட்டை போடு ரொம்ப gifts purchase பண்ணு 2. நான் இன்றைக்கு காலையில் பள்ளிக்கூடத்துக்கு வரும் முன்னால் ரொம்ப சாப்பிட்டுக்கொண்டேன் வீட்டுப்பாடம் எல்லாவற்றையும் எழுது கண்ணாடியை துடைத்து போடு எல்லா புஸ்தகத்தையும் எடு 3. நான் வீட்டுக்கு திரும்பி வரும் வரை நீங்கள் வீட்டை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள் பாங்கில் பணத்தை withdraw செய் ராத்திரியில் கதவை நன்றாகச் சாட்டு Krogersலெ பால் வாங்கு 4. நாளைக்கு எனக்கு interview என்றால் நான் நன்றாகப் படித்துக்கொள்ளவேண்டும் நல்ல கோட் போடு எல்லா certificatesஐயும் எடு சாமியை கும்பிடு Dialogue 1: Put on a nice shirt! unit_06/section_C/lesson01.html Dialogue 2. What do you eat with? unit_06/section_A/lesson01.html | |
| |
Hesitation formsHesitation and making a guess in Tamil are usually accompanied by the forms உம்..., இல்லெ..., வந்து..., அப்பறம்... etc. These words can occur at any place in a sentence for any number of times. The possible contexts where these forms can be used include: a) When trying to admit a mistake, b)When saying something without knowing much details about it, c)When trying to hide something from somebody, d) when trying to break a surprise, e) when attempting to express something out of fear, and so on. வந்து. வந்து. நான் நேத்து வந்து, உம் அப்பறம்...நான் பள்ளிக்கூடத்துக்குப் போகாம சினிமாவுக்கு போனேன் 'I went to a movie theater yesterday, without attending to the school'. A: உம்ம்ம்... நான் வந்து உன்னெ வந்து... 'I, you know, I...' B: என்ன? வந்து போயிண்ணு ஒரே வழிசலா வழியுறெ? சொல்றதெ டக்குண்ணு சொல்லு! 'What? What do you mean by 'coming' and 'going'? What are you making a big fuss about? Tell me right away! A: இல்லெ! வந்து! நான் வந்து! உன்னெ... வந்து! காதலிக்கிறேன். 'No! I am just! I love you!' | |
© South Asia Language Resource Center (SALRC) |