Home
Overview
Technical Help

Select Unit > Unit 6: சும்மா தொண தொணண்ணு பேசிக்கிட்டே இருக்காதீங்க > Lesson 2:   Spoken      Translation   Lessons:   1   2   3   4   5   6   Exercises: 1   2   3   4   5   6   Reading: 1   2   Glossary    Test


Task (English):
Task (Tamil):

    

A:என்னங்க, என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? காய்கறி, பால், பழமெல்லாம் வாங்கிகொண்டு வரவேண்டாமா?

B:வாங்கிகொண்டுதான் வரவேண்டும். வெளியில் மழை பெய்துகொண்டிருக்கிறது! எப்படி வெளியே போகிறது என்று படுத்துக்கொண்டே யோசனை பண்ணிக்கொண்டிருக்கிறேன்.

A:யோசித்துக்கொண்டே இருந்தால் மழை நிற்குமா? குடையை எடுத்துக்கொண்டு கிளம்புங்கள். நேரம் ஆகிக்கொண்டிருக்கிறது.

B:நேரம் ஆகிக்கொண்டுதான் இருக்கும். அதற்காக பறக்க முடியுமா?

A:தொண தொண என்று பேசிக்கொண்டே இருக்காதீர்கள். சீக்கிரமாக கடைக்குப் போய் ஜாமான்களையெல்லாம் வாங்கிக்கொண்டு வாருங்கள்.

B:கொஞ்ச நேரம் நிம்மதியாக படுத்துக்கொண்டு யோசனை பண்ணிக்கொண்டிருக்க முடிகிறதா? எப்பொழுது பார்த்தாலும் கத்திக்கொண்டே இருக்கிறாய்!

A:அது சரி! யாராவது எல்லா ஜாமானையும் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தால் ஐயா நிம்மதியாக படுத்துக்கொண்டு யோசித்துக்கொண்டேயிருப்பீர்கள்.

B: சரி ஏன் கத்திக்கொண்டேயிருக்கிறாய்? அதான் கிளம்பிக்கொண்டிருக்கிறேன் இல்லையா?

    Grammar Notes:

    Progressive meaning using the aspectual verb கொண்டிரு

    The progressive, or continuous, in Tamil is expressed using the aspectual suffix கொண்டிரு (sp. கிட்டிரு) as in பார்த்துக்கொண்டிருக்கிறேன் 'I have been watching', சொல்லிக்கொண்டிருக்கிறான் 'I have been saying' etc. Like all the other aspectual forms, this suffix is also added after AVP form of a verb. The role of this suffix is mainly to represent any event that takes place for a given length of time, either in the present, past or in the future. Note that கொண்டிரு is itself a composite of the AVP of கொள் (கொண்டு) and இரு. As such கொண்டிரு declines just similarly to இரு as copular verb (except for negation, see below).

      Structure: Verb(AVP)-(k)koNtiru-tense-PNG (the க் is doubled under the same conditions as all AVPs, see Unit 6, Grammar 1)

    1. எல்லோரும் ஒரு மணி நேரமாகப் படித்துக்கொண்டிருக்கிறார்கள். Everyone has been studying for the past one hour.

    When something is carried out for unusually long time, the emphatic suffix ஏ is added (plus the glide ய்) between கொண்டு and இரு as follows.

    2. என் தங்கை பத்து மணியிலிருந்து அரை மணி நேரமாகச் சாப்பிட்டுக்கொண்டேயிருக்கிறீர்கள். My younger sister has been eating for the past half an hour since ten o'clock.

    3. முருகன் இன்னும் உலகத்தைச் சுற்றிக்கொண்டேயிருக்கிறார். Lord Muruga has been/is circling around the world still.

    4. நீங்கள் ரொம்ப நேரமாகச் சாப்பிட்டுக் கொண்டேயிருக்கிறீர்கள் You have been eating for an unusually long time.

    5. நான் நேற்று உங்கள் வீட்டுக்கு வந்த போது நீங்கள் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தீர்கள். When I came to your house yesterday, you were sleeping well.

    6. நாளைக்கு இந்நேரம் நான் டென்னிஸ் விளையாடிக்கொண்டிருப்பேன். By this time tomorrow I will be playing tennis.

    Negation of the progressive கொண்டிரு

    Where as இரு as the copula is negated with the irregular form இல்லை, கொண்டிரு is negated regularly from the infinitive: கொண்டிருக்கவில்லை.

    B: என்ன செய்துகொண்டிருக்கிறாய்? A: நான் படித்துக்கொண்டிருக்கிறேன். B: இல்லை. நீ படித்துகொண்டிருக்கவில்லை. நீ தூங்கிக்கொண்டிருந்தாய்!

    Note: modals can also be added by simply adding them to the infinitive of கொண்டிரு, கொண்டிருக்க-modal:
    எனக்கு எழுதிக்கொண்டிருக்கவேண்டும்.
    என்னால் தூங்கிக்கொண்டிருக்கமுடியாது.

    When two actions are carried out simultaneously, the progressive aspectual form is used with one of the verbs, but without the suffix இரு as shown below.

    7. நீங்கள் பாட்டுப் பாடிக்கொண்டே கார் ஓட்டுவீர்களா? Do you drive while singing?

    8. டீ. வி பார்த்துக்கொண்டே படிக்காதீர்கள் Don't study while watching the T.V.

    9. உங்களை நினைத்துக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தேன், நீங்கள் சரியாக வந்துவிட்டீர்கள். I was just thinking of you while eating. You arrived here on time.

    Translate the following combinations and make your own sentences in Tamil using these combinations: (Be sure to convert these written forms into their corresponding spoken forms appropriately).

    1. பாடிக்கொண்டிருக்கமுடியும்

    2. படித்துக்கொண்டிருக்கவேண்டும்

    3. போய்க்கொண்டிருக்கலாம்

    4. கேட்டுக்கொண்டிருப்பேன்

    5. தூங்கிக்கொண்டிருந்தார்கள்

    6. அழுதுகொண்டேயிருக்கிறீர்கள் (note the idiomatic use also)

    7. சாப்பிட்டுக்கொண்டே பாடமுடியுமா

    t. அழுதுகொண்டே வாங்கிக்கொடுக்காதீர்கள். (note the idiomatic use also)

    II. Translate the following sentences.

    1. I have been studying since morning ten o'clock.

    2. My younger brother had been playing from morning nine o'clock to (வரை) evening five o'clock.

    3. My brother and I have been studying Tamil for the past two years.

    4. We will be listening to the radio tomorrow evening.

    5. I like to watch T.V. while eating.

    6. I do not drive car while listening to songs.

    7. Can you run fast talking to me?

    8. You should not sleep sitting in the class.

    N.B. a) Use of ஆக is necessary when expressing duration of an event in relation to a specific point of time. b) Use of இலிருந்து ('from, since')and வரை ('up to, until') with temporal nouns is needed to express the length of an action in terms of time.

    Dialogue 1: It has been raining outside! unit_06/section_A/lesson02.html

    Dialogue 2: What are you upto?unit_06/section_A/lesson01.html

    Dialogue 2: Is the coffee ready?unit_07/section_C/lesson02.html

    Cultural Notes:

    Verbs of bodily action and their cultural connotations

    In Tamil, certain physical actions, and the verbs that denote them, are traditionally attached to some cultural meaning. Such relationships don't usually have any clear explanation, but are just believed because of tradition. But, Tamils take such connotations very seriously.

    புறையேறு 'choke'

    When someone chokes while drinking water, it is believed that that person is being scolded by someone else at a distant place.

    யாரோ உங்களெ திட்டுறாங்க. அதான் உங்களுக்குப் பொறெயேறுது 'Someone is scolding you, that is the reason why you are choking. (Note how the subject of புறையேறு is put in the dative and the verb takes the neuter PNG).

    விக்கல் எடு 'hiccup': It is believed that when someone is hiccuping, someone in a distant place is thinking of them. Unlike choking, the other person is on good terms with this person.

    யாரோ உங்களெ நெனெக்கிறாங்க. அதான் உங்களுக்கு விக்கல் வந்திருக்கு. 'Somebody is thinking about you, so you are getting hiccups.

    தும்மு 'sneeze': Sneezing is considered a bad omen. It is not acceptable to sneeze when someone is about to start something: leaving the home, giving money to someone, starting to write a letter to someone etc. It's really bad when someone sneezes during the marriage. This is also one of the reasons why the drumming is done in marriage ceremonies.

    மொதல் மொதலா ஒரு வேலைக்குப் போகலாம்ணு கெளம்புனேன். இவன் தும்மிட்டான். போற காரியம் என்ன ஆகுமோ தெரியலெ. 'I just started to set out to join a new job. He sneezed it. I don't know what's going to happen to my job.'

    கல்யாண வீட்டுலெ தும்மி கிம்மி வைக்காதெ! 'Don't you ever sneeze on the occasion of someone's marriage.'

    வயிற்று வலி 'stomach ache': If someone eats in front of someone without sharing it, it is said that that person would get stomach pain.

    எல்லாரையும் பாக்க வச்சி நீ மட்டும் சாப்பிட்டா உனக்கு வயித்து வலி வரும். 'if you eat in front of everybody, without sharing it, you will get stomach pain'.

    தலை வலி 'head ache': When someone is bothering too much, it would be said that that person is giving too much head ache.

    நீ சரியான தலைவலிடா. எப்ப பாத்தாலும் தொண தொணண்ணு அதெக் கொடு இதெக் கொடுண்ணு கேட்டுக்கிட்டே இருப்பே 'You are such a head ache. You always ask me to give you this or that.'

    குமட்டு 'feel like throwing'

    அந்த ஆளு மூஞ்சியைப் பாத்தாலே எனக்குக் கொமட்டிக்கிட்டுத்தான் வருது. 'As soon as I see his face, I feel like throwing'.

    மூக்கெப் புடிச்சிக்கிட்டு 'holding your breath': This expression, which is relatively different from the others above, is used in a number of different contexts. When eating some food which is not so good tasting, or medicine, one might say that it should be taken holding the breath; it is also used when trying to do some difficult work.

    மூக்கெப் பிடிச்சிக்கிட்டு இந்தச் சாப்பாட்டெ சாப்பிடு. 'Take this medicine holding your breath.

    மூக்கெப் பிடிச்சிக்கிட்டு இந்த மூட்டெயெத் தூக்கூங்க. 'Lift this bag holding your breath.'

    When someone eats a lot, the phrase மூக்கு முட்ட சாப்பிடு 'eat up to the nose' is used.

    சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துது. மூக்கு முட்டச் சாப்பிட்டுட்டேன். 'The food is so great. I ate up to my nose.'

    பாக்கச் சகிக்கலெ 'not very pleasant to see' (written பார்க்கச் சகிக்கவில்லை): If someone or something is not very pleasant or not liked, this phrase can be used to denote the sight of that person or thing.

    தலையிலெ டையை அடிச்சிருக்கான். பாக்க சகிக்கலெ. 'He dyed his hair. It's very unpeasant to see'. (lit. dyed on his head!)

© South Asia Language Resource Center (SALRC)