Home
Overview
Technical Help

Select Unit > Unit 7: காலுலெ சக்கரம். > Lesson 4:      Translation   Lessons:   1   2   3   4   5   6   Exercises: 1   

    

கண்ணன் - சரி! நான் கிளம்பறேன்! ரொம்ப ரொம்ப நாள் கழிச்சி ஒங்களெயெல்லாம் பாத்ததுலெ எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.

ராமையா - நீங்க எங்க வீட்டுக்கு வந்ததிலெ எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி! அடிக்கடி வந்து போய்கிட்டிருங்க! ஜானகி! அண்ணன் பொறப்பட்றேங்க்றாரு.

ஜானகி - என்ன இப்பதான் வந்தீங்க! ஒடனே பொறப்பட்றீங்க! இருந்து மத்தியானம் சாப்பிட்டுட்டு போகலாமே!

ராமையா - இல்லம்மா! இன்னொரு நாள் வந்து தங்கி சாப்பிட்டுட்டுப் போறேன். இந்தப் பக்கம் வந்தேன் அதான் உங்களெயெல்லாம் பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்!

ஜானகி - நீங்க எப்பவுமே இப்படித்தான். கால்லெ சக்கரத்தெக் கட்டிக்கிட்டுதான் வருவீங்க! அடுத்த தடவெ உங்க மனெவி மகனெயெல்லாம் அழச்சிக்கிட்டு வந்து இரண்டு நாள் தங்கிட்டுதான் போகணும்!

ராமையா - சரிம்மா! எங்கே கோபால்! கூப்பிடுங்க! சொல்லிக்கிட்டு போறேன்.

கண்ணன் - ஏய் கோபால் இங்க வா! அண்ணன் கெளம்புறேங்க்றாரு. உங்கிட்ட சொல்லிக்கிட்டுப் போறேங்க்றாரு. வா.

கோபால் - என்ன அதுக்குள்ள கெளம்பிட்டீங்க! இப்பதான் வந்தீங்க! ஒடனே கெளம்பிட்டீங்களா? இருந்து சாப்பிட்டுட்டு போகலாமே!

ராமையா - இன்னொரு நாள் பொறுமையா வந்து இரண்டு நாள் தங்கிட்டு போறோம்!

வறேம்மா. வறேன் ராமையா.

போயிட்டுவாங்க.

    Grammar Notes:

    Grammar: Narrate a context using the following expressions:

    1) உங்களெயெல்லாம் பாத்ததுலெ ரொம்ப மகிழ்ச்சி.

    2) அப்போ நான் பொறப்படுறேன்.

    3) சாப்பிட்டுட்டு போகலாமே.

    4) கால்லெ சக்கரத்தெ கட்டிக்கிட்டு வருவீங்க.

    5) ரெண்டு நாள் தங்கிட்டு போகணும்.

    6) சொல்லிக்கிட்டு போறேன்.

    7) பொறுமையா வந்து ரெண்டு நாள் தங்கிட்டு போகணும்.

© South Asia Language Resource Center (SALRC)