Home
Overview
Technical Help

Select Unit > Unit 7: டீக்கடைக்காரர் > Lesson 5:       Translation   Lessons:   1   2   3   4   5   6   Exercises: 1

    

கண்ணன் - மாஸ்டர். சூடா ஒரு டீ போடுங்க! என்ன தோஸ்த்? என்ன ரொம்ப சுவாரசியமா படிச்சிக்கிட்டிருக்கீங்க? யாரு யாரெ வெட்டினாங்க? எந்த மந்திரி எவ்வளவு லஞ்சம் வாங்குனாரு?

மாலன் – அதெல்லாம் இல்லேப்பா! இந்த செய்தியெக் கேளு! ரொம்ப பரிதாபமா இருக்கு.

குஜராத் மாநிலத்தில் வெள்ள நிலமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. வெள்ளத்தில் சிக்கிய பகுதிகளிலிருந்து இதுவரை ஐந்து லட்சம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளனர். அடுத்த நாற்பத்தெட்டு மணி நேரத்தில் இன்னும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை கொடுத்திருக்கிறது.

கோபால் -- மழை பேஞ்சு வெள்ளம் வருது. இல்லேன்னா சுனாமி வந்து வெள்ளம் வருது. அதுவும் இல்லேன்னா பூகம்பம் வந்து மனஷங்க சாவுராங்க. இந்தியாவுலெ ஏழைங்களெதான் இந்த வெள்ளமும் சுனாமியும் பூகம்பமும் கஷ்டப்படுத்துது. பணக்காரங்களுக்கு எந்த வெள்ளம் வந்தா என்ன? எந்த சுனாமி வந்தா என்ன? எந்த பூகம்பம் வந்தா என்ன? அவங்க எப்பவுமே ரொம்ப சொகமா இருக்காங்க!

மாலன் – இதோ பாரு! இந்தச் சேதியெக் கேளு!

புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர இடம் வாங்கித் தருவதாகச் சொல்லி சென்னையைச் சேர்ந்தவரிடம் ரூ. பத்து லட்சம் மோசடி செய்த பாண்டிச்சேரிக்காரர் ஒருவரை சென்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோபால் – ஆமாம்! ஆமாம்! பாண்டிச்சேரிக்காரர் ஒருத்தர்தான் இந்த போலீஸ்காரங்க கண்ணுக்குத் தெரிஞ்சுது! எந்த மருத்துவக் கல்லூரியிலெ பணம் வாங்காம மாணவங்களுக்கு அனுமதி கொடுக்றாங்க? எந்த பொறியியல் கல்லூரியிலெ பணம் மாணவங்களுக்கு வாங்காம அனுமதி கொடுக்றாங்க?

டீக்கடைக்காரர் (டீ ஆற்றிக்கொண்டே) - நீ வேறப்பா! என்னோட மகனுக்கு அஞ்சு வயசுதான் ஆகுது! பள்ளிக்கூடத்துலெ அனுமதி கேட்டா! பத்தாயிரம் ரூபா கேக்குறாங்க! நான் எங்கே போக? பத்தாயிரத்துக்கும் இருபதாயிரத்துக்கும்?

    Grammar Notes:
    Grammar: Narrate a context using the following expressions:

    1) வாங்கித் தருவதாகச் சொல்லி...

    2) நான்தான் உங்க கண்ணுக்குத் தெரிஞ்சுது

    3) பத்தாயிரம் ரூபாய்க்கும் இருபதாயிரம் ரூபாய்க்கும் நான் எங்கே போறது?

    4) மோசடி செஞ்சுட்டாங்க.

    5) பூகம்பம் வந்தா என்னா? சுனாமி வந்தா என்ன?

© South Asia Language Resource Center (SALRC)