Home
Overview
Technical Help

Select Unit > Unit 7: அன்னியன் படம் > Lesson 1:   Translation   Lessons:   1   2   3   4   5   6   Exercises: 1    

    

மணீஷ் – டேய் விக்ரம்! அன்னியன் படம் பார்த்தியா? இருபத்தைந்து கோடி ரூபா செலவுலெ பிரமாண்டமா எடுத்துருக்காங்களாம்! இயக்குனர் சங்கர் இந்தப் படத்தெ எந்த படம் மாதிரியும் இல்லாமெ சண்டைக் காட்சியெல்லாம் ப்ரமாதமா படப்பிடிப்பு பண்ணி தூள் பண்ணியிருக்காராம். நீ இந்த சினிமாவெ இன்னும் பாக்கவே இல்லெயா?

விக்ரம் - நேத்து பள்ளிக்கூடம் முடிஞ்சிதோ இல்லியோ! முதல் வேலெயா அந்தப் படத்த பாக்கணும்னு போய் பாத்தேன். சொல்ற அளவுக்கு படத்துலெ ஒண்ணுமே இல்லெ. பணத்தெக் கொட்டி படத்தெ எடுத்துருக்காங்க! கதையிலெ ஒரு விறு விறுப்பே இல்லெ! கதாநாயகன் மூஞ்சி பாக்க சகிக்கலெ. கதாநாயகி கொஞ்சம் பரவாயில்லெ.

இவன் எப்பவுமே இப்படித்தாண்டா! இவனெ விடக் கொஞ்சம் அழகா இருந்தா போதுமே. இவனுக்குப் பொறுக்காது.

சுரேஷ் – யாருடா கதாநாயகன்? விக்ரமா? நானும் இந்தப் படத்தெ இன்னும் பாக்கவேயில்லெ. நாளைக்குப் பாக்கலாம்னு இருந்தேன். நீ சொல்றத பாத்தா இந்தப் படத்தெப் பார்த்து காசெ வீணாடிக்கவேண்டாம்னு தோணுது.

விக்ரம் – அப்படி ஒன்னும் மட்டமான படம் இல்லெ! ஒரு தடவெ பாக்கலாம். நாலு பாட்டு நல்லா இருக்கு. வைரமுத்துப் பாட்டு. ஜெயராஜ் தூள் பண்ணியிருக்காரு. ஒரு தரவெ பாக்கலாம். ஆனா கதெயிலெதான் ஒன்னும் புதுஸா இல்லெ.

மணீஷ் – சும்மா கதைவிடாதெடா! இயக்குனர் சங்கர் இந்தப் படத்தெ எடுத்துருக்காரு! இசை இயக்குனர் ஆர். ஜெயராஜ்! வேறெ என்ன வேணும்? சும்மா கதை கதைன்னு அலட்டாதெ! இப்ப வற படத்துலெயெல்லாம் கதெ எங்க இருக்கு!

நாலு பாட்டு நல்லா இருக்கு கதாநாயகி மொகம் பாக்றதுக்குப் பரவாயில்லெ!

வேற என்ன வேணும்.

சங்கர் படம்ணாலே ப்ரமாதமாதாண்டா இருக்கும். பரிட்செ எப்ப முடியும்ணு காத்துக்கிட்டிருக்கேன்! பரிட்செ முடிஞ்சுதோ இல்லயோ இந்தப் படத்தெ முதல் வேலெயா பாத்துட்டுதான் மறு வேலெ.

சரி வா போலாம். நேரம் ஆகுது.

    Grammar Notes:

    Reportative marker ஆம்

    When reporting information that is obtained from a source that the speaker wouldn't want to reveal explicitly, or doesn't want to accept the fact that was revealed, the suffix ஆம் is added to the finite form of the verb or with the predicate noun of any typical noun-noun sentence to express the non-commitment to the fact.

    1. முருகன் வாத்தியாராம்
    muruhan vaattiyaaraam
    It is said/claimed that Murugan is a teacher

    Here the implication is that the speaker may or may not want to accept the fact that Murugan is a teacher, but simply reports what he heard someone saying about Murgan. In the following utterances, this suffix is used with finite verbs.

    2. நாளைக்கு மழை பெய்யுமாம்
    It is believed/reported that there would be a rain tomorrow.

    3. போன வாரம் பள்ளிக்கூடத்துக்க் மாணவர்கள் வரவில்லையாம்
    It is claimed that no student attened the school last week.

    Metaphorical use of the verb கொட்டு

    The verb கொட்டு literally means 'pour' or 'drop something', but when used metaphorically it means 'spend lavishly', especially money.

    4. சிவாஜி படத்தயாரிப்பாளர்கள் பணத்தைக் கொட்டி இந்தச் சினிமாவை எடுத்திருக்கிறார்கள்.

    The Sivaji film productions spent lots and lots of money to make this movie.

    அவர் தான் சம்பாதிச்ச பணத்தெயெல்லாம் கொட்டி தன் மகனெ படிக்க வச்சாரம். ஆனால் அவன் சரியா படிக்காம ஊரெச் சுத்திக்கிட்டிருக்கானாம்.

    He claims that he spent all the money he earned for his son's education, but the son seems to be roaming around without doing well in his education.

© South Asia Language Resource Center (SALRC)