Home
Overview
Technical Help

Select Unit > Unit 7: லஞ்சம் > Lesson 2:       Translation   Lessons:   1   2   3   4   5   6   Exercises: 1   

    

கமலா – வா மல்லிகா! என்ன சமையலெல்லாம் முடிஞ்சுதா? வீட்டுக்காரர் உத்தியோகத்திலேருந்து திரும்பி வந்துட்டாரா? அஞ்சு மணி ஆச்சோ இல்லெயோ டாண்ணு வேலெயெ முடிச்சுட்டு உங்க வீட்டுக்காரர் வீட்டுக்கு வந்துருவாரே!

மல்லிகா - உன்னோட கிண்டலுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்லெ! உன் வீட்டுக்காரர் மாதிரியா? சம்பளம் பாதி கிம்பளம் பாதிண்ணு சம்பாதிச்சுக் கொட்டுறாரு என் வீட்டுக்காரர்? ஏதோ ஒரு வேலைங்ற பேரில காலையிலெ ஒன்பது மணிக்குப் போயிட்டு சாயங்காலம் அஞ்சு மணியாச்சோ இல்லெ டாண்ணு வீட்டுக்குத் திரும்பி வந்துருராரு!

கமலா -- சும்மா கதெ விடாதெ! உங்க வீட்டுக்காரருக்கு ஒண்ணுமே தெரியாது பாரு! வாயிலெ வெரலெ வச்சா கடிப்பாரு! ஏன் மல்லிகா! இந்தக் காலத்துலெ யாருதான் லஞ்சம் வாங்கலெ! லஞ்சம் வாங்காமெதானா இவ்வளவு பெரிய மாடிவீடு கட்டியிருக்கீங்க?

காரெல்லாம் வாங்கியிருக்கீங்க!

மல்லிகா - எங்களோட மாடிவீட்டெயும் காரெப் பத்தியும் பேசலேண்ணா ஒனக்கு தூக்கமே வராதே! மாடி வீடும் காரும் நான் எங்க அப்பா வீட்டுலேருந்து கொண்டுவந்ததாக்கும்! சும்மா உன் புருஷன் லஞ்சம் வாங்குறாரு! கிம்பளம் வாங்குறாருன்ணு பொலம்பாதே! உன் புருஷன் லஞ்சம் வாங்குனா ஊருலெ இருக்குற எல்லாரும் லஞ்சம் வாங்குவாங்கண்ணு முடிவு பண்ணிட்டியா?

கமலா – ஆமாம்! ஆமாம்! உங்க வீட்டுக்காரரு அரிச்சந்திரன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர்! பொய்யே பேசமாட்டாரு! கை ரொம்ப சுத்தம்! யாராவது காதுலெ பூவெச் சுத்திக்கிட்டு பைத்தியம் மாதிரி உட்கார்ந்திருப்பாங்கல்லெ அவுங்ககிட்ட போய் சொல்லு! இவுங்க வீட்டுக்காரரு லஞ்சம் வாங்க மாட்டாராம் லஞ்சம்!

    Grammar Notes:

    கொய்யாப்பழம் எல்லாம் ரொம்ப விலை ஜாஸ்தியாக இருக்குமே! பரவாயில்லையா?

    என்ன சார்! எண்பது ரூபாய் ரொம்ப ஜாஸ்தியா? மற்றக் கடையிலெல்லாம் ஒரு டஜன் நூறு ரூபாய்க்கு விற்கிறார்கள்!

    Write a sentence with விலை ஜாஸ்தியாக இருக்குமே

    பெட்ரோல் விலைக்கும் மாம்பழத்துக்கும் என்ன சம்பந்தம்? சரி கடைசியாக எவ்வளவுக்குத்தான் கொடுப்பீர்கள்? சொல்லுங்கள்?

    Can you make up a context where you would use என்ன சம்பந்தம் ?

    அடக் கடவுளே! கால் டஜனுக்குத்தானா இப்படி பேரம் பேசுகிறீர்கள்!!!

    Where are all the places you would use the phrase பேரம் பேசு

    அப்படியா! இன்றைக்கு ஒரு பிடி பிடித்துவிடலாம். என்ன? சாப்பிடலாமா?

    இது நன்றாக இருக்கிறதா? எனக்கு அசிங்கமாக இருக்கிறது. இது உங்களுக்குத்தான் நன்றாக இருக்கிறது. பாருங்கள்.

    Give a sentence with the expression

    அசிங்கமாக இருக்கிறது

    கொஞ்சம்தான் ஊத்தினேன். துடைத்துவிடுகிறேன். இனிமேல் சமையலறை பக்கம் தலைவைத்துக் கூட படுக்கமாட்டேன்.

    Explain the idiom

    தலைவைத்துக்கூட படுக்கமாட்டேன்

    ஊத்துவதையும் ஊத்திவிட்டு துடைத்துவிடுவானாம் துடைத்துவிடுவானாம். சரி சரி போ. நானே துடைத்துவிடுகிறேன்.

    Make a paragraph with the suffixes கொண்டிரு and விடு use the following expressions

    ஒரே வேலை! அதையும் இதையும் செய்துகொண்டே இருக்கிறேன். நாள் போய்க்கொண்டே இருக்கிறது. அதுதான் உன்னை கூப்பிடவே முடியவில்லை. ஆனால் உன்னை அடிக்கடி நினைத்துகொண்டுதான் இருக்கிறேன்.

    வீட்டில் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்? கமலா பள்ளிக்கூடத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறாளா? நீ நன்றாகப் படித்துக்கொண்டிருக்கிறாயா? பக்கத்து வீட்டு மணி வேலை பார்த்துக்கொண்டிருக்கிறானா?

© South Asia Language Resource Center (SALRC)