Home
Overview
Technical Help

Select Unit > Unit 7: ஆளெயே காணோம்! > Lesson 3:   Translation   Lessons:   1   2   3   4   5   6   Exercises: 1   

    

வணக்கம் ராமையா சார்.

ராமையா – அடெடே. அடேடே! வாங்க! வாங்க! வாங்க! ரொம்ப நாளா இந்தப் பக்கம் ஆளெயே காணோம்! அத்தி பூத்த மாதிரி அதிசயமா எங்க வீட்டுப் பக்கம் வந்திருக்கீங்க! இண்ணக்கி மழெதான் வரப் போகுது! உக்காருங்க.

இருக்கட்டுங்க

அட! உக்காருங்க.

கண்ணன் - அதெல்லாம் ஒண்ணும் இல்லெ! வேலெ நெறெய இருந்துது! தாசில்தார் அலுவலகம் பக்கம் கொஞ்சம் வேலெ இருந்துது! வழியிலெ உங்க வீடு இருந்துதா! அதான் அப்படியே பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்! எல்லாரும் செளக்கியமா இருக்கீங்களா?

ராமையா – அதானே பாத்தேன்! தாசில்தார் அலுவலகத்துலெ வேலெ! அதான் உங்களுக்கு எங்க ஞாபகம் வந்துது! இல்லேன்னா எங்க ஞாபகம் உங்களுக்கு எப்படி வரும்? நீங்க எங்க வீட்டுக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் இருக்குமா?

கண்ணன் -- அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லெ! உங்களெயெல்லாம் மறக்கமுடியுமா? உங்களெயெல்லாம் மறக்க நான் என்ன அப்படி பெரிய ஆளா? கொஞ்சம் வேலெ அதிகம் அவ்வளவுதான்! நீங்க எல்லாரும் சுகமா இருக்கீங்களா?

ராமையா – நாங்க ரொம்ப நல்லா இருக்கோம்! ஜானகி!!! இங்க வா! யாரு வந்துருக்காங்க பாரு! அத்தி பூத்த மாதிரி நம்ப வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்திருக்காங்க!

ஜானகி – அட! வாங்க! வாங்க! என்ன அதிசயம்! எங்க வீடு உங்களுக்கு எப்படி ஞாபகம் வந்துது? அத்தி பூத்த மாதிரி வந்திருக்கீங்க! மழெதான் வரப் போகுது!

கண்ணன் – அட! நீ வேறம்மா! தலெக்கி மேலெ வேலெ! மூச்சே விட முடியலெ! வெளியூருக்கெல்லாம் போயி கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு மேலெயே ஆகுது. உங்களெயெல்லாம் அவ்வளவு சீக்கிரம் மறந்துடுவேனா என்ன?

    Grammar Notes:

    Grammar: Make a context where you would use the following phrases:

    1) அத்திப் பூத்த மாதிரி

    2) அதெல்லாம் ஒண்ணும் இல்லெ

    3) இண்ணெக்கி மழதான் வரப் போகுது.

    4) கொஞ்சம் வேலை இருந்து

    5) பாத்துட்டுப் போகலாம்ணு வந்தேன்

    6) உங்களுக்கு எங்க ஞாபகம் எங்க வரப் போகுது.

    7) உங்களெயெல்லாம் அவ்வளவு சீக்கிரம் மறந்துடுவேனா என்ன?

© South Asia Language Resource Center (SALRC)