Home
Overview
Technical Help

Select Unit > Unit 4: அமெரிக்காவுக்கு அனுப்பணும் > Lesson 4:   Spoken      Translation   Lessons:   1   2   3   4   5   6   Exercises: 1   2   3   4   5   6   Reading: 1   2   Glossary    Test

    

Merchant: (on the phone)நாளைக்குக் கிடைத்துவிடும். கண்டிப்பாக. உம். வைத்துவிட்டுங்களா? நன்றி சார்.

Mechant: to the customer: வாருங்கள் சார். உட்காருங்கள்.

Customer: இந்த பார்சலை அமெரிக்காவுக்கு அனுப்பவேண்டும்.

Postal worker:இந்த பார்சலில் என்ன இருக்கிறது என்று சொல்லவேண்டுமே!

Customer: இதில் கொஞ்சம் புத்தகமும் கொஞ்சம் புகைப்படமும் இருக்கிறது.

Merchant: ஒரு நிமிஷம் இருங்கள் சார். இதை எடை போட்டுப் பார்க்கவேண்டும்.

Merchant: சார். இதில் ஆறு கிலோ அம்பது கிராம் இருக்கிறது.

Customer: எவ்வளவு ரூபாய் ஆகும்?

Merchant: கப்பலில் அனுப்பினால் நாப்பத்தியைந்து ரூபாய். விமானத்தில் அனுப்பினால் எழுநூறு ரூபாய்.

Customer: கிலோவுக்கா?

Merchant: ஆமாம்! கப்பலில் அனுப்ப வேண்டுமா? விமானத்திலெ அனுப்ப வேண்டுமா?

Customer: விமானத்திலேயே அனுப்பிவிடலாம். ஆறு. எழுநூறு. நாலாயிரத்து இரநூறு. ஐம்பதுகிரமுக்கு ஒரு முப்பத்தைந்து. நாலாயிரத்து இரநூத்திமுப்பத்தைந்து. சரியா?

Merchant: சரி, சார்.

Customer: சரியா இருக்கிறதா எண்ணிப் பாருங்கள்.

Merchant: ஐந்து, பத்து, பதினைந்து, இருபது, இருபதும் பதினைந்தும் முப்பத்தைந்து, நூறு, இருநூறு, முந்நூறு, நாநூறு, ஐநூறு, அறுநூறு, எழுநூறு, எண்ணூறு, தொள்ளாயிரம், ஆயிரம், ஆயிரத்தி நூறு, ஆயிரத்தி இருநூறு, ஆயிரத்தி முந்நூறு, ஆயிரத்தி நாநூறு, ஆயிரத்தி ஐநூறு, ஆயிரத்தி ஆறநூறு, ஆயிரத்தி எழுநூறு. ஆயிரத்தி எழுநூறு. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து. ஐந்து into ஐநூறு. இரண்டாயிரத்து ஐநூறு. ஆயிரத்து எழுநூறு. நாலாயிரத்தி இருநூறு. நாலாயிரத்தி இருநூத்தி முப்பத்தைந்து. சார் சரியாக இருக்கிறது சார்.

Customer: ரசீது கொடுங்கள்.

    Grammar Notes:

    Conjunction and Disjunction in Tamil

    Conjunction

    In English, conjuction is typically made by using the word 'and' between the nouns conjoined (e.g., 'John and Mary'). However, in Tamil conjunction of nouns is made by adding உம் to each of the constituents being conjoined. For example:
      நாளைக்கு முருகனும் செந்திலும் வருகிறார்கள். 'Tomorrow, Murugan and Senthil are coming.'
      மாம்பழமும் வெங்காயமும் கோழியும் வாங்குங்கள். 'Buy/get mango, onion, and chicken.
      நானும் நீயும் போகவேண்டும். 'You and I must go.'
    Notice how உம் must be attached to each of the nouns conjoined, how nouns need not be put into the oblique form (e.g., மாம்பழம் + உம் --> மாம்பழமும் and not மாம்பழத்தும்), but how glides are necessary when the noun ends in a vowel (e.g., கோழியும்).

    In addition to nouns/noun phrases, உம் can also be used to conjoin post-positions, adverbs, and infinitive and adverbial participles (see Unit 6). However, the words/phrases conjoined must be of the same part of speech (e.g., can't have a noun and a post-position conjoined with உம், etc.).

    Post-positions

      மேசை மேலெயும் கீழெயும் தேடு. அதுக்கு அப்புறம் அறைக்கு உள்ளெயும் வெளியேயும் பாரு. 'Look on top of and under the table. After that, look inside and outside of the room.'

    Adverbs
      நான் வாத்தியாராகவும் மாணவனாகவும் இருக்கிறேன். 'I am a teacher and a student.'

    Infinitive clauses
      குமார் சாப்பிடவும் குடிக்கவும் வருகிறார். 'Kumar comes to eat and drink.'

    Disjunction

    In Tamil, disjunction ('or') can be accomplished in a number of ways. Like conjunction the constituents must be of the same type. Also note that disjunction in Tamil is exclusive; i.e., only one of the disjuncts can be true, both cannot (contra disjunction in English).

    அல்லது Structure: X அல்லது Y

      அவர் அல்லது அவள் கடிதம் அனுப்புவார்கள். 'He or she will send the letter.'
      பள்ளிகூடத்துக்கு முன்னாலெ அல்லது பின்னாலெ சின்ன கொளம் இருக்கு. 'In front of or behind the school there is a small pond.'
    அல்லது can also be used to conjoin sentences:
      நான் பாடுவேன் அல்லது உங்கள் தம்பி பாடுவான். 'I will sing or your younger brother will sing.'

    The form இல்லாவிட்டால் (sp. இல்லாட்டா) (the negative conditional of இரு), 'otherwise', can also be used for disjunction:

      இப்போ வாங்கணும். இல்லாட்டா நாளைக்கு கிடைக்காது.
      You should buy it now. Otherwise it won't be available tomorrow.

      இப்போ போ. இல்லாட்டா புதன் கிழமை போகமுடியாது.
      Go now or Wednesday you won't be able to go.

    Disjunction can also be done by affixing either ஆவது or ஓ to each of the constituents. Structure: X-ஆவது/ஓ Y-ஆவது/ஓ.

      அவர்-ஆவது/ஓ அவள்-ஆவது/ஓ கடிதம் அனுப்புவார்கள். 'He or she will send the letter.'
      பள்ளிகூடத்துக்கு முன்னாலேயாவது/ஓ பின்னாலேயாவது/ஓ சின்ன குளம் இருக்கும். 'In front of or behind the school there will be a small pond.'

    These two kinds of constructions, அல்லது and -ஆவது/-oo, can be used by all of the same constituents except for with adjectives. With adjectives only அல்லது can be used:

      எங்கள் அப்பாவுக்கு ரொம்ப பழைய அல்லது ரொம்ப புது புத்தகங்கள் படிக்க பிடிக்கும். 'Our father likes either really old or really new books (but not both).'

    Alternative questions can be formed by adding the interrogative suffix -ஆ at the end of a sentence, rather than to the constituent. As with the interrogative suffix in general, it can not be attached to all of the same kinds of constituents (nouns, adverbs, adjectives, verbs, etc.):

      உஙளுக்கு சாதாரணமான சட்டை வாங்கணுமா பிரபலமான சட்டை வாங்கணுமா? 'Do you want a ordinary shirt or a popular shirt?'
      சாப்பாடு கொஞ்சம் போடலாமா நிறைய போடலாமா? 'Shall I serve you a little bit or a lot of food?
      உங்களுக்கு சாப்பாடு! கொஞ்சமா? நெறையவா? 'how much food do you need? little or a lot? (Actually, each of these words constitutes a separate sentence!)

    Other kinds of coordination

    In addition to conjunction and disjunction there are a number of other words that can be used to coordinate constituents, some of which we have already looked at (e.g., temporal words like அப்புறம், etc.):

    ஆனால் (sp. ஆனா) 'But'

      அது புதுசு ஆனால் ரொம்ப சாதாரண கார். 'That is a new but a very ordinary car.'
      அவர் பேசுகிறார் ஆனால் எனக்கு ஒன்னும் புரியவில்லை. 'He is talking but I can't understand even one thing.'

    அதனால் (sp. அதனாலெ)'So, because of that.'

      நேத்து நான் என் வேலையெ செய்யலெ. அதனாலெ இன்னெக்கி ரொம்ப வேலை செய்யணும். 'Yesterday I didn't do my work. Because of that today I have to do a lot of work.'

    ஏனென்றால் (sp. ஏண்ணா) 'because, for the reasons of'

      நாளெக்கி என்னாலெ உங்க வீட்டுக்கு வரமுடியாது. ஏண்ணா, நான் நாளெக்கி ஊருலெ இருக்க மாட்டேன் I won't be able to come to your house tomorrow, because I will be out of town tomorrow (lit. I will not be in town tomorrow).
    Cultural Notes:

    Conducting Prayers at House and in Temples, Churches and Mosques

    The vocative terms refering to gods--namely ஆண்டவா, சாமியே, கடவுளே, பகவானே--and the proper names of the gods--like முருகா, கர்த்தரே, அல்லா etc.--are used quite frequently by people during their daily activities, especially when rejoicing, performing laborious works, when they get hurt, or when they are in anguish. All of these terms, except for கர்த்தரே--used by Christians--and அல்லா (or one of its variants, அரே அல்லா or அல்லாவே)--used by Muslims--are used when performing prayers in front of the god.

    Manner of worship varies from religion to religion. The Hindus fold their hands near their face or some time above the head, and close their eyes while uttering these words. In some cases, people use expressions like கடவுளே என்னெக் காப்பாத்துப்பா 'Oh! Lord. Please protect/save me (from troubles!). The suffix ப்பா is used as a vocative term.

    In some cases, people tend to use the impolite forms like டா and டீ to address gods and godesses respectively, with the impression that they get much closer to them by doing so. This is especially the case at the time of worries and troubles.

    முருகா! ஏண்டா! என்னை இப்படி சோதிக்கிறே! 'Oh! Muruga! Why are you testing me with all these troubles?'

    மாரியம்மா! நான் உனக்கு என்ன செஞ்சேன்! நீ என்னெ இப்படி சோதிக்கிறியேடி! 'Oh! Mariyamman! What did I do wrong to you, so you make me suffer this way'.

    When blessing others the adults use the expressions like அருளால் 'by the grace', புண்ணியத்தில் 'by the merit of', துணையில் 'with the company of etc.

    கர்த்தர் அருளால் உனக்கு எல்லாம் நல்லது நடக்கும் 'By the grace of the Christ, everything will happen very well for you.

    அல்லா எப்பவும் உன் பக்கம் இருப்பார்! நீ கவலையே படாதே! 'Allah will be on your side all the time! Don't worry.

    Even refering to the name of a temple in a particular place during prayer, or when talking about God(s), is also common.

    வேலாங்கன்னி மாதா அருள் உங்களுக்கு இருக்கிறது. கவலைப் படாதீங்க 'You have the grace of Velangkanni goddess (Mary), Don't worry.'

    திருச்செந்தூர் முருகன் இருக்கார்! உனக்கு எந்தக் கஷ்டமும் வராது போ! 'The Thiruchendur Murugan is out there! No trouble will come to you! You keep doing what you are doing!

    எப் ஒண் விசாவுலேருந்து இண்ணெக்கி க்ரீன் கார்டுலெ இருக்கேண்ணா அதுக்கெல்லாம் எங்க ஊரு புள்ளையாருதான் காரணம். அவரோடெ தொணெ எனக்கு எப்பவும் உண்டு. 'I have been through the process of F1 visa to the Green Card (in the U.S.). The Vinayaka of my local town is the reason for all these. I am with his company all the time.

    Offerings to Gods

    Vows and Promises to gods are usually made privately to one's self, but will be revealed to others later either at the time of or after the actual 'offering'. Expressions used in this context include வேண்டிக்கிட்டேன் 'I made a vow to god'; பிரார்த்தனை பண்ணிக்கிட்டேன் 'I promised to god' and so on.

    நான் பரிட்சையிலெ மட்டும் பாஸ் ஆனா நூத்தொரு தேங்கா ஒடெக்கிறேண்ணு எங்க ஊரு புள்ளையாருக்கிட்டெ வேண்டிக்கிட்டேன் 'I made a vow to the Vinayaga of our local town that I would offer him one hundred and one coconuts (cracking coconuts is a common way of making offerings), if I succeed in my examinations.

    என் பெண்ணுக்கு நல்லபடி கல்யாணம் ஆனவொடனே புள்ளையாருக்கு பெரிய அர்ச்சனெ செய்யிரேண்ணு பிரார்த்தனை பண்ணிக்கிட்டேன். 'I prayed to god that I would offer him a 'Puja' after my daughter gets married without any trouble.'

© South Asia Language Resource Center (SALRC)