Home
Overview
Technical Help

Select Unit > Unit 4 > Reading 2: வாசல்படிReading in Spoken form  Reading 1  Exercise 3  Exercise 4

வீட்டுக்கு வீடு வாசல்படி

தன்னுடைய மகன் சரியாகப் படிப்பதில்லை, மனைவி சரியாகச் சமைப்பதில்லை, மகள் வீட்டைச் சுத்தம் செய்வதில்லை என்று சுந்தரம் நாளுக்கு நாள் கவலைப் பட்டுக்கொண்டே இருப்பான். அடுத்த வீடு மணியும் அவனுடைய மனைவியும் அவர்களுடைய குழந்தைகளோடு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று சுந்தரம் எப்பொழுதும் நினைத்துக் கோண்டிருப்பான். ஒரு நாள் சுந்தரம் மணியைக் கடைத்தெருவில் எதேச்சையாகப் பார்த்தான். அவனோடு பேசிக்கொண்டிருந்த போது, அவனுடைய மனைவி மணிக்கு “ஒரு தரம் சாப்பிடுகிறீர்களா? காபி குடிக்கிறீர்களா? தண்ணீர் வேண்டுமா” என்று எதாவது கேட்டுக்கொண்டேயிருப்பாள். அவள் தன்னுடைய குழந்தைகளை ரொம்ப அன்பாக பார்த்துக்கொள்வாள் என்று பெருமையடித்துக் கொண்டான். அதைக் கேட்ட சுந்தரத்துக்கு ஒரே கவலை. தன்னுடைய மனைவி அப்படி இல்லையே என்று வருத்தப்பட்டான்.

மணி தன்னுடைய மனைவியைப் பற்றி அடிக்கொருதரம் புகழ்ந்து பேசுகிறான். ஆனால் சுந்தரம் பேச்சுக்குப் பேச்சு தன்னுடைய மனைவியை பற்றி குறை சொல்லிக் கொண்டேயிருக்கிறான்.

சில நட்கள் கழித்து மணியின் மனைவி சுந்தரத்தின் மனைவியோடு பேசிக்கொண்டிருந்தாள். அவர்கள் அவ்வப்போழுது இப்படி ஏதாவது பேசிக்கொண்டிருப்பது வழக்கம். மணியும் மனைவி போன பிறகு என்ன பேசிக்கொண்டிருந்தீர்கள் என்று தன்னுடைய மனைவியிடம் கேட்டான் சுந்தரம். மணி எப்பொழுதும் தன்னையும் தன் மகன்களையும் திட்டிக்கொண்டே இருப்பதாகவும், பலகாரம் செய்யச் சொல்லிக்கொண்டிருப்பதாகவும் மணியின் மனைவி சொன்னாள் என்று சுந்தரத்தின் மனைவி சொன்னாள்.

அப்படியென்றால் சுந்தரம் சொன்னதெல்லாம் ஒரு பேச்சுக்குத்தானா? யார் வீட்டில்தான் குறை இல்லை?

வீட்டுக்கு வீடு வாசல்படி!

© South Asia Language Resource Center (SALRC)