![]() |
|
Select Unit > Unit 4: என்ன அங்கே ஒரே ரகளை? > Lesson 2: Spoken Translation | Lessons: 1 2 3 4 5 6 Exercises: 1 2 3 4 5 6 Reading: 1 2 Glossary Test |
father: என்ன? அங்கே ஒரே ரகளை?
mother: இவர்களுக்கு வேறு வேலைதான் என்ன? எதற்காவது ஏதாவது செய்துகொண்டிருப்பார்கள்!
son1 அப்பா! பாருங்கள்! இது என்னுடைய புத்தகம்.
son2 இல்லே! என்னுடைய புத்தகம்.
father என்ன? பெரிய தலைவலியாக இருக்கிறதா? சரி! சரி! அது யாருக்கும் வேண்டாம். என்னிடம் கொடு. சரி! நீங்கள் இரண்டு பேரும் வீட்டுப்பாடம் செய்தீர்களா?
son இன்னும் இல்லை. நாளைக்கு செய்கிறேன்.
father நாளைக்கு கீளைக்கியெல்லாம் வேண்டாம். இப்பவே செய். போ! என்ன கமலா? சாப்பிட என்ன செய்தாய்? வாசனை மூக்கை துளைக்கிறது.
mother வெங்காய தோசையும், வெங்காய சட்னியும் செய்தேன்.
father அப்படியா! இன்றைக்கு ஒரு பிடி பிடித்துவிடலாம்.
Children நாங்களும் சாப்பிட வரலாமா?
father: முதலில் வீட்டுப்பாடத்தை முடியுங்கள்.
|
|
| |
Reduplication (also see Unit 2 Cultural 2)Reduplication is a grammatical process where words and/or phrases are duplicated. Some of the reasons for reduplicating words are a) for emphasis or to express intensity, b) to express continuous action and c) to mark plurality in querying for a list of things. Reduplication of question wordsWhen question words are duplicated as in the following examples, the meaning of plurality, or of a list, in terms of location, time, and objects are understood. Usually, the reduplicated question words are translated into: 'wh- are all' (where are all, who are all, what are all, etc.) or 'wh-word all' (where all, who all, what all, etc.) Examples: 1. நீங்க இந்தியாவுலெ எங்க எங்க போயிருக்கீங்க? What are all the places have you visited in India? 2. யார் யார் உங்களோடெ நாளெக்கி சினிமா பாக்க வரப்போறாங்க? Who are all the people coming with you to see the movie tomorrow? 3. அமெரிக்காவுலெ எந்த எந்த எடத்துக்கெல்லாம் போயிருக்கீங்க? Which are all the places have you visited in America? 4. நேத்து கடையிலெ என்ன என்ன வாங்குனீங்க? What are all the things you bought from the store yesterday? 5. நீங்க தெனமும் எப்ப எப்ப தமிழ் படிப்பீங்க? What are all the times you study Tamil daily? Reduplication of verbal participle formsReduplication of verbal participle forms (AVP) usually gives the meaning of 'continuously' or 'regularly'. 6. நான் தமிழெ படிச்சி படிச்சிப் பார்த்தேன், எனக்கு ஒன்னும் புரியலெ I attempted to study Tamil quite regularly, but I couldn't make out anything. 7. என்னோடெ அப்பாக்கிட்டெ கார் வாங்கிக் கொடுங்கண்ணு கேட்டு கேட்டு பாத்துட்டேன் அவர் வாங்கித் தரவேயில்லெ! I kept asking my father to buy me a car, but he never did. 8. எனக்கு இந்தியாவுக்குப் போய் போய் நெறெய பணம் செலவாயிட்டுது. I spent so much money going to India so often. Reduplication of modal formsReduplication of modal forms with the emphatic ஏ added to the first modal gives the meaning of 'emphasis', 'stubborn' or being 'firm'. 9. என்னோடெ அப்பா எனக்குக் கார் வாங்கித் தர மாட்டவே மாட்டேண்ணு சொல்லிட்டாங்க. My father stubbornly refused to buy me a car 10. நான் என் அம்மாக்கிட்டெ கடெக்கிப் போக முடியவே முடியாதுண்ணு சொல்லிட்டேன். I stubbornly refused my mother saying I would not go to the store 11. நான் இனிமெ உங்க வீட்டுக்கு வரக் கூடவே கூடாதுண்ணு இருக்கேன். I made it a firm point that I should not come to your house from now on. 12. என்னதான் நான் வேண்டவே வேண்டாம்ணு சொல்லியும் என்னோடெ அப்பா எனக்குக் கார் வாங்கிக் கொடுத்துட்டாங்க. Even though I refused so firmly, my father bought me a car Echo-words:Echo words are reduplicated words where the second of two words is made by substituting the first syllable of the first word with 'ki' or 'kii'. Usually the echo constructions give a meaning of 'like something'. 13. நாமெ ஹொட்டலுக்குப் போய் காப்பிக் கீப்பி குடிப்போமா? Shall we go to a restaurant and drink coffee or something? 14. யாராவது ஜான் கீன் வந்தா நான் வீட்டுலெ இல்லேண்ணு சொல்லிடு! If John or anybody like John comes, tell him that I am not home 15. நான் எதாவது புத்தகம் கித்தகம் படிச்சிக்கிட்டு இருக்கேன், நீங்க சீக்கிரம் கடைக்குப் போயிட்டு வந்துடுங்க. I will be waiting here reading some book or other, go to the store and return quickly. Such echoes aren't only restricted to the கி substitution, e.g., recall the reduplicated forms of Unit 2, Cultural Lesson 2: தடல் புடல் ('extravagant'),
கடா முடா 'harsh', கறா முறா 'squeaking', and கசா முசா 'confused' or 'uneven.'
| |
| |
Secret Language GameWhen talking among adults without letting children know about it, adults tend to use a special code for which there exists no name in Tamil. By this method, the syllable க is added to every syllable in the word. Example: Ordinary Tamil: மிட்டாய் பையை பத்திரமா உள்ளெ வை 'keep the candy bag inside, safely' Secret code: கமி-கட்-கடா-கய் கபை-கயை கப-கத்-கதி-கர-கமா கவு-கள்-களே கவை நாளெக்கி சினிமாவுக்குப் போகலாம் 'we can go to the movies tomorrow'. Secret code: கனா-களெ-கக்-ககி கசி-கனி-கமா-கவு-கக்-ககு கபோ-கக-கலா-கம். No strict rule is followed while making this type of secret code, and there may be some irregularities due to convenience. This language is used only casually among the adults for the purposes of talking around the children, and there are no other serious purpose of using this method is found in the language. | |
© South Asia Language Resource Center (SALRC) |