Home
Overview
Technical Help

Select Unit > Unit 4: வெலெயெச் சொல்லுங்க > Lesson 1:   Written      Translation   Lessons:   1   2   3   4   5   6   Exercises: 1   2   3   4   5   6   Reading: 1   2   Glossary    Test

    

use of ellaam, idiom

கடைக்காரர்: கொய்யாப் பழம். கொய்யாப் பழம். நாட்டுக் கொய்யா. மதுரெ கொய்யா. ஊட்டிக் கொய்யா. கொய்யாப் பழம். கொய்யாப் பழம்.

கோபால்: கொய்யாப் பழம். நிறுத்து.

கடைக்காரர்: வாங்க. வாங்க.

கோபால்: கொய்யாப்பழமெல்லாம் என்ன வெலெ?

கடைக்காரர்: எல்லாக் கொய்யாப்பழமும் வெலெ ரொம்ப ஜாஸ்தி. பரவாயில்லெயா?

கோபால்: என்ன கிண்டல் பண்ணுறியா? நான் வாங்க மாட்டேண்ணு நெனெக்கிறியா? விலெயெச் சொல்லுய்யா!

கடைக்காரர்: ஒரு டஜன் எண்பது ரூபாய்.

கோபால்: எண்பது ரூபாயா? என்னய்யா? யானெ விலெ குதிரெ வெலெ சொல்றெ?

கடைக்காரர்: சார்! இது ரொம்ப கம்மி சார். மத்தக் கடையிலெயெல்லாம் ஒரு டஜன் நூறு ரூபாய்.

கோபால்: இதோ பார்! இந்தக் கதையெல்லாம் வேணாம். எல்லா இடத்திலெயும் அறுபட்டஞ்சு ரூப்பாய்தான் விக்குறாங்க. அறுபத்தியஞ்சு ரூபாதான் கொடுப்பேன்.

கடைக்காரர்: அறுபத்தியஞ்சு ரூபாயா? ஐயையோ கட்டுபடியாகாது சார். பெட்ரோல் வெலெயெல்லாம் ரொம்ப ஜாஸ்தி ஆயிட்டுது. மழெயே பெய்யலெ.

கோபால்: ஏன்யா! பெட்ரோல் வெலெக்கும் கொய்யாப்பழத்துக்கும் என்னய்யா சம்பந்தம்? சரி கடைசியா என்ன வெலைக்குக் கொடுப்பெ?

கடைக்காரர்: உங்களுக்காக எழுபத்தஞ்சு ரூபாய்க்குக் கொடுக்க்றேன். சரி! எத்தனெ டஜன் வேணும்?

கோபால்: எனக்கு ஒரு கால் டஜன் வேணும். நல்ல பழமா பொறுக்கி) எடுத்துக் கொடு.

கடைக்காரர்: அடக் கடவுளே! இதுக்குத்தான் இவ்வளவு தூரம் பேரம் பேசுனீங்களா? பார்த்து எடுத்துக்கோங்க.

கோபால்: இந்தா வைத்துக்கொள். ஒன்று. (ஒன்று). இரண்டு (ரெண்டு). மூன்று.

    Grammar Notes:

    The present tense in Tamil

    As with the future tense in Tamil, the present tense is constructed by adding a tense marker to the verb root followed by person-number-gender (agreement with the subject). (Structure: verb-tense-PNG). The tense marker differs whether the verb is weak or strong. Weak verbs take the tense marker -கிற்- while strong verbs take the tense marker -க்கிற்- (cf. the infinitive). In spoken Tamil, generally -க்கிற்- reduces to -க்ற்- or -க்குற்- and -கிற்- reduces -ற்-. In addition to (க்)கிற், there is another tense marker -(க்)கின்ற்- which is a stylistic variant of -(க்)கிற்- for all PNG except the neuter plural. -(க்)கின்ற்- must be used with the neuter plural PNG; -(க்)கிறன- is not possible.

    Below is the conjugation of a weak and a strong verb: Weak verb: செய்
    Verb roottense markerPNGWritten formSpoken formEnglish
    செய்-கிற்--ஏன்செய்கிறேன்செய்றேன்I do/make
    செய்-கிற்--ஈர்கள்செய்கிறீர்கள்செய்றீங்க(ள்)You (pol/formal) do
    செய்-கிற்--ஆய்செய்கிறாய்செய்றெYou (impol/informal) do
    செய்-கிற்--ஓம்செய்கிறோம்செய்றோம்We (incl/excl) do
    செய்-கிற்--ஆன்செய்கிறான்செய்றா(ன்)He (impol/informal) does
    செய்-கிற்--ஆர்செய்கிறார்செய்றாருHe (pol/formal) does
    செய்-கிற்--ஆள்செய்கிறாள்செய்றாள்She (impol/informal) does
    செய்-கிற்--ஆர்கள்செய்கிறார்கள்செய்றாங்க(ள்)She (pol/formal) does or They do
    செய்-கிற்--அதுசெய்கிறதுசெய்யுதுIt (sing.) does
    செய்-கின்ற்--அனசெய்கின்றனசெய்கிறதுThey (neut pl) do.


      அவருக்கு உதவி செய்கிறீர்களா? (sp. அவருக்கு ஒதவி செய்றீங்களா?) 'Are you helping him?'
      இப்பொழுது நிறைய வேலை செய்கிறேன். (sp. இப்பொ நெறெய வேலெ செய்றேன்.) 'I am doing a lot of work right now.'
      நேற்று அவர்கள் அந்த விட்டுப்பாடம் செய்யவில்லை. அதனால் இன்றைக்கு செய்கிறார்கள். (sp. நேத்து அவங்க அந்த வீட்டுப்பாடம் செய்யலெ. அதனால இண்ணெக்கி செய்றாங்க) 'Yesterday she didn't do that lesson. So, today she is doing it.'

    Strong verb: கொடு u
    Verb roottense markerPNGWritten formSpoken formEnglish
    கொடு-க்கிற்--ஏன்கொடுக்கிறேன்கொடுக்றேன்I give
    கொடு-க்கிற்--ஈர்கள்கொடுக்கிறீர்கள்கொடுக்றீங்க(ள்)You (pol/formal) giveg
    கொடு-க்கிற்--ஆய்கொடுக்கிறாய்கொடுக்றெYou (impol/informal) give
    கொட்ய்-க்கிற்--ஓம்கொடுக்கிறோம்கொடுக்றோம்We (incl/excl) give
    கொடு-க்கிற்--ஆன்கொடுக்கிறான்கொடுக்றா(ன்)He (impol/informal) gives
    கொடு-க்கிற்--ஆர்கொடுக்கிறார்கொடுக்றாருHe (pol/formal) gives
    கொடு-க்கிற்--ஆள்கொடுக்கிறாள்கொடுக்றாள்She (impol/informal) gives
    கொடு-க்கிற்--ஆர்கள்கொடுக்கிறார்கள்கொடுக்றாங்க(ள்)She (pol/formal) gives or They give
    கொடு-க்கிற்--அதுகொடுக்கிறதுகொடுக்குதுIt (sing) gives
    கொடு-கின்ற்--அனகொடுகின்றனகொடுக்குதுThey (neut pl) give


      நாளைக்கு கொஞ்சம் பணம் நமக்கு கொடுக்கிறார். (sp. நாளெக்கி கொஞ்சம் பணம் நமக்கு கொடுக்றார் 'He is giving us some money tomorrow.'
      வகுப்புக்கு அப்புறம் என் பையை என்னிடம் திருப்பி கொடுக்கிறாயா?. (sp. வகுப்புக்கு அப்புறம் என் பைய்யெ என்கிட்ட திருப்பி கொடுக்றியா?). 'Are you (informal/impolite) returning (giving back) my bag back after class?'
      அவன் அவருக்கு எனக்காக கொடுக்கிறான். (sp. அவ அவருக்கு எனக்காக கொடுக்றான்.) 'He is giving it to him for me (on my behalf).'

    Note how in written Tamil the tense marker -கிண்ற்- must be used with the neuter plural. However, in spoken Tamil neuter subjects are optionally pluralized, and thus the neuter singular PNG is unmarked for number. For example, நாய் கடிக்கிறது can mean either 'The dog bites' or 'Dogs bite'; here, number is determined by the context as it is unspecified by the form.

    Certain verbs are irregular in either their spoken or written.
    இரு 'be, existence'
    இருக்கிறேன்இருக்குறேன் or இர்க்கேன்'I am'
    இருக்கிறீர்கள்இருக்குறீங்க(ள்) or இருக்கீங்க(ள்)'You (pol/formal) are'
    இருக்கிறாய்இருக்குறெ or இர்க்கெ'You (impol/inform) are'
    இருக்கிறோம்இருக்குறோம் or இர்க்கோம்'We (incl/excl) are'
    இருக்கிறான்இருக்குறா or இர்க்கா'He (impol/inform) is'
    இருக்கிறார்இருக்குறாரு or இர்க்காரு 'He (pol/formal) is'
    இருக்கிறாள்இருக்குறாள் or இர்க்கா'She (impol/inform) is'
    இருக்கிறார்கள்இருக்குறாங்க or இர்க்காங்க'She (pol/formal) is' or They are'
    இருக்கிறதுஇருக்கு or இர்க்கு'It (sing) is'
    இருக்கின்றனஇருக்கு or இர்க்கு'They (neut pl) are'


      எப்படி இருக்கிறீர்கள்? (sp. எப்படி இருக்கீங்க?) 'How are you doing?'
      நான் வத்தியாராக இருக்கிறேன் (sp. waan vaththiyaaraa irukkeen) 'I am a teacher.'
      என்னிடம் இரண்டு மாம்பழங்கள் மட்டும் இருக்கின்றன. (sp. என்கிட்டெ ரெண்டு மாம்பழம் மட்டும் இருக்கு). 'I only have 2 mangoes on/with me.'

    வா 'come'
    வருகிறேன்வறேன்'I come'
    வருகிறீர்கள்வறீங்க(ள்) 'You (pol/formal) come'
    வருகிறாய்வறெ'You (impol/inform) come'
    வருகிறோம்வறோம்'We (incl/excl) come'
    வருகிறான்வறா'He (impol/inform) comes'
    வருகிறார்வறாரு 'He (pol/formal) comes'
    வருகிறாள்வறாள்'She (impol/inform) comes'
    வருகிறார்கள்வறாங்க'She (pol/formal) comes' or They come'
    வருகிறதுவருது'It (sing) comes'
    வருகின்றனவருது'They (neut pl) come'


      அவள் நம்ம வீட்டுக்கு உன்னை பார்க்க வருகிறாளா? (sp. அவள் நம்ம வீட்டுக்கு ஒன்னெ பார்க்க வறாளா?). 'Is she (impol/informal) coming to our house to see you (impol/informal)?'
      இராத்திரியில் நாய்கள் சாப்பிட வருகின்றன. (sp. ராத்திரிலெ நாய் சாப்பிட வறது). 'At night dogs come to eat.'
      நான் போய்விட்டு வருகிறேன். (sp. நான் போயிட்டு வறேன்). Lit. 'Having gone I will come back.' I.e., 'Good-bye.' (see Unit 3 Cultural 1).

    கேள் 'ask, listen'
    கேட்கிறேன்கேக்குறேன்'I ask'
    கேட்கிறீர்கள்கேக்குறீங்க(ள்) 'You (pol/formal) ask'
    கேட்கிறாய்கேக்குறெ'You (impol/inform) ask'
    கேட்கிறோம்கேக்குறோம்'We (incl/excl) ask'
    கேட்கிறான்கேக்குறா'He (impol/inform) asks'
    கேட்கிறார்கேக்குறாரு 'He (pol/formal) asks'
    கேட்கிறாள்கேக்குறாள்'She (impol/inform) asks'
    கேட்கிறார்கள்கேக்குறாங்க'She (pol/formal) asks' or They ask'
    கேட்கிறதுகேக்குது'It (sing) asks'
    கேட்கின்றனகேக்குது'They (neut pl) ask'


      நான் பாட்டு கேட்கிறேன் (sp. நான் பாட்டு கேக்குறேன்). 'I am listening to music.'
      அவர் உன்னை பற்றி கேட்கிறார். (sp. அவரு ஒன்னெ பத்தி கேக்குறாரு.) 'He is asking about you.'
      நீங்கள் பாட்டு கேட்கிறீர்களா? (sp. நீங்க பாட்டு கேகுறீங்களா?) 'Are you listening to the music?'

    As can be seen from the examples above, the present tense in Tamil is used to refer to both events in the present time--immediately as well as generally (i.e., extending into the past and future, cf. generic statements)--as well as events occuring in the immediate future. It can generally be translated in English as the simple present or the present progressive.

      எனக்கு ஒரு புத்தகம் தான் இருக்கு. 'I only have 1 book'
      நாய் கடிக்கிறது. 'Dogs bite.'
      நான் நளைக்கு வறேன் 'I will be/am coming tomorrow' or 'I will come tomorrow.'
      அவர் படிக்கிறார். 'He is studying.'

    போ 'go'
    போகிறேன்போறேன்'I go'
    போகிறீர்கள்போறீங்க(ள்) 'You (pol/formal) go'
    போகிறாய்போறெ'You (impol/inform) go'
    போகிறோம்போறோம்'We (incl/excl) go'
    போகிறான்போறா'He (impol/inform) goes'
    போகிறார்போறாரு 'He (pol/formal) goes'
    போகிறாள்போறாள்'She (impol/inform) goes'
    போகிறார்கள்போறாங்க'She (pol/formal) goes' or They go'
    போகிறதுபோறது'It (sing) goes'
    போகின்றனபோறது'They (neut pl) go'

    சொல்ல் (சொல்லு) 'say, tell'
    சொல்லுகிறேன்சொல்றேன்'I say, tell'
    சொல்லுகிறீர்கள்சொல்றீங்க(ள்) 'You (pol/formal) say, tell'
    சொல்லுகிறாய்சொல்றெ'You (impol/inform) say, tell'
    சொல்லுகிறோம்சொல்றோம்'We (incl/excl) say, tell'
    சொல்லுகிறான்சொல்றா'He (impol/inform) says, tells'
    சொல்லுகிறார்சொல்றாரு 'He (pol/formal) says, tells'
    சொல்லுகிறாள்சொல்றாள்'She (impol/inform) says, tells'
    சொல்லுகிறார்கள்சொல்றாங்க'She (pol/formal) says, tells' or They say, tell'
    சொல்லுகிறதுசொல்றது'It (sing) says, tells'
    சொல்லுகின்றனசொல்றது'They (neut pl) say, tell'

    பார் 'see, look'
    பார்க்கிறேன்பாக்றேன்'I see'
    பார்க்கிறீர்கள்பாக்றீங்க(ள்) 'You (pol/formal) see'
    பார்க்கிறாய்பாக்றெ'You (impol/inform) see'
    பார்க்கிறோம்பாக்றோம்'We (incl/excl) see'
    பார்க்கிறான்பாக்றா'He (impol/inform) sees'
    பார்க்கிறார்பாக்றாரு 'He (pol/formal) sees'
    பார்க்கிறாள்பாக்றாள்'She (impol/inform) sees'
    பார்க்கிறார்கள்பாக்றாங்க'She (pol/formal) sees' or They see'
    பார்க்கிறதுபாக்றது'It (sing) sees'
    பார்க்கிண்றனபாக்றது'They (neut pl) see'

    படி 'study, read'
    படிக்கிறேன்படிக்றேன்'I study, read'
    படிக்கிறீர்கள்படிக்றீங்க(ள்) 'You (pol/formal) study, read'
    படிக்கிறாய்படிக்றெ'You (impol/inform) study, read'
    படிக்கிறோம்படிக்றோம்'We (incl/excl) study, read'
    படிக்கிறான்படிக்றா'He (impol/inform) studies, reads'
    படிக்கிறார்படிக்றாரு 'He (pol/formal) studies, reads'
    படிக்கிறாள்படிக்றாள்'She (impol/inform) studies, reads'
    படிக்கிறார்கள்படிக்றாங்க'She (pol/formal) studies, reads' or They study, read'
    படிக்கிறதுபடிக்றது'It (sing) studies, reads'
    படிக்கின்றனபடிக்றது'They (neut pl) study, read'

    I. Write the present and negative forms of the following verbs.
    Use subject நான்
    1) செய்
    2) படி
    3) குடி
    4) சொல்
    5) பார்
    Use the subject நாங்கள்

    6) அடி
    7) எடு
    8) நட
    9) கொடு
    10) போடு
    11) வாங்கு
    12) இரு
    13) முடி
    14) முடி
    15) நடி

    Use the subject நீங்கள்
    16) ஆடு
    17) ஓடு
    18) போ
    19) வா
    20) மற

    Use the subject அவர்கள்
    21) கொல்
    22) நில்
    23) வில்
    24) உட்கார்
    25) சமை
    26) கலை
    II. Translate:
    1. I study at home.
    2. I am going to study at home.
    3. I eat at the restaurant.
    4. I am going to eat in that restaurant.
    5. I am going to India.
    6. I am going to go to India.
    7. I am not coming to your house.
    8. I am not studying Hindi.
    9. We are playing.
    10. They are not playing.
    11. You and I are reading Tamil stories.
    12. The train is coming late.
    13. A bus runs on our street.
    14. A dog is barking.
    15. The cats are running.
    III. Fill-in the blanks with the correct form of present tense verb.
    1) நான் தினமும் காலையில் எட்டு மணிக்கு _____________ (எழு). ஒன்பது மணிக்கு சாப்பாடு ____________________ (சாப்பிடு). அப்புறம் பள்ளிக்கூடத்துக்கு __________________ (வா). சாயந்திரம் கடைக்கு __________________ (போ). பால் _____________ (வாங்கு). வீட்டில் காப்பி _______________ (குடி). எனக்கு டீ ___________________ (பிடி) அதனால் டீ _________________ (குடி). எனக்கு பிட்சா ரொம்ப_________________ (பிடி) உங்களுக்கு பிட்சா _____________ (பிடி).

    2) நான் நான்றாக ஆங்கிலம் (பேசு) _______________ ஆனால் இந்தி கொஞ்சம் கூட (பேசு) ___________ நான் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் (பேசு) _________________ . எனக்கு தமிழ் நன்றாக __________________ (புரி). நீங்கள் ஆங்கிலத்தில் வேகமாக _______________ (எழுது)? தமிழில் ரொம்ப வேகமாக ________________ (எழுது)? நாங்கள் தினமும் தமிழ் வீட்டுப்பாடம் ________________ (எழுது) தமிழ் நிறைய _________________ (படி). அடுத்த மாதம் நாங்கள் தமிழ் நாட்டுக்கு ___________________ (போ). அங்கே நாங்கள் நிறைய தமிழ் __________________(பேசு).

    Dialogue: http://www.thetamillanguage.com/unit_03/section_C/lesson02.html

    Cultural Notes:

    Vocative Expressions and Addressing Terms

    There are specific ways of calling someone who is at a distance from the speaker but within ear shot. When calling by name, the name will undergo a change in one of the syllables, depending upon the ending. There are also certain terms of address like அம்மா, அப்பா, தம்பி etc., which lose their original kinship meaning and simply act as honorific address terms. Using the word 'hey' as in English, and a Tamil version similar to this as ஓய் are considered very impolite in Tamil. ஹேய் ஜான்! இங்கே வா 'Hey John! Come here' is considered very disrespectful in Tamil. Only a boss would call his/her servent with 'hey! or ஹேய்.

    Vocative forms:

    In general vowel length is stretched to denote the vocative. Vowel ending names are used in vocative expressions by stretching the final vowel to a maximum length.

    கமலா would be கமலாஆஆ

    செல்வி would be செல்வீஈஈ

    ராஜூ would be ராஜூஊஉ

    மேரி would be மேரீஈஈ and so on

    In names ending in a consonant the vowel in the last syllable will be stretched.

    ஜான் would be ஜாஆஆன்

    கோபால் would be கோபாஆஆல்

    In multiple syllable ன் ending words, the ன் is dropped and the final vowel is stretched.

    நாராயணன் would be நாராயணாஆஆ

    சேதுபாண்டியன் would be சேதுபாண்டியாஆஆ

    கண்ணன் is கண்ணாஆஆ

    In ம் ending names, the vowel in the last syllable stretched with nasalization.

    மங்களம் is மங்களஆஆம்

    சுந்தரம் is சுந்தரஆஆம்

    These vocative forms can be used only among the equals or for adults calling the youngsters. It is disrespectful for any young person to call an adult by their name. In order for younger persons to call adults, or to call to a stranger, kinship terms such as தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அக்கா, தம்பி, அய்யா (to call a superior by a servant), சார் (to call an educated person) etc., are employed. Indeed, as we have seen, Tamil culture, as with many others, is very sensitive to social relations and appropriate interactions between individuals. Such social relations are often explicitly marked in how individuals are addressed and referred to: e.g., the use of pronouns such as நீங்கள் vs. நீ, அவன் vs. அவர், etc. as well as in imperative constructions போ vs. போங்கள், வராதெ vs. வராதீர்கள், etc. Kinship terms are no exception and can be used in Tamil to address not only actual kin, but to anyone else as well in conversation. Such 'fictive' kinship can be used for showing or not showing respect, conveying formality or informality, or creatively for insulting or complementing, etc. For example, one might refer to an older gentleman as அப்பா, an older woman as அம்மா. Similarly, to a young boy/girl as தம்பி/தங்கை or an older person, but not old enough to be one's father/mother, as அண்ணன்/அக்கா. Proper care should be taken to use these to address others, otherwise using them inappropriately could result in a misunderstanding.

    For example, using தாத்தா on someone who is about forty or fifty years old might make that person very angry. One has to be about sixty to qualify to be a தாத்தா (cf. in English using the term 'grandpa', 'Pop'). Also, note that the person who is called as தாத்தா doesn't have to have grandsons or granddaughters to be called with this term. Also, only people under forty-years-old can call a person at the age of sixty or above as தாத்தா. A sixty-year-old person calling another sixty-year-old person தாத்தா is awkward. The same applies to the use of பாட்டி and other terms. For example, if one wants to call someone அக்கா, that person has to make sure he or she is much younger that the person one is addressing.

    The terms அய்யா, அப்பா, அம்மா and அக்கா are also used with a reduction of first syllable and added in another word like என்னப்பா 'what's up respectable person', வாங்கம்மா 'welcome respectable madam' and so on. These terms can occur on their own, or be added to verbs.

    Any stranger addressing a woman:

    இந்தப் பழம் நல்லாருக்கும்மா! வாங்குங்கம்மா! 'Madam! this fruit is good. Please buy it (madam).

    Any stranger addresing a man:

    அய்யா! வாங்கய்யா! நல்லாருக்கீங்களாய்யா? 'Sir! Welcome. Are you doing fine?

    Youngsters addressing educated male - either known or strangers!

    சார்! வாங்க சார்! இங்க உக்காருங்க சார்! காப்பி கீப்பி குடிக்கிறீங்களா சார்! 'Sir! please come (sir). Please have a seat (sir). Would you like to drink cofee or something (sir)?

    In addition to the honorific deictics and the kinship terms, Tamil also utilizes a number of other address terms. Like the kinship terms, a these forms are often attached to the ends of verbs or used freely to address individuals:
    (அ)டா or டேய்used to address small male children or close male friends younger than the speaker; also low-status males or as insultபோடா, 'Get lost boy, run along'
    (அ)டீused to address small female children or close female friends younger than the speaker; also low-status females or as insultகொடுடீ 'Give it here girl'
    The அ in parantheses is dropped when appended to a word that ends in a vowel.

© South Asia Language Resource Center (SALRC)