நீங்கள் மதுரையா? சிதம்பரமா?
மதுரை எங்கள் ஊர். இது பெரிய ஊர். மதுரை அம்மன் கோவில் ஒரு பெரிய கோவில். இந்த அம்மன் பெயர் மீனாக்ஷி. நீங்கள் மதுரையா சிதம்பரமா? சிதம்பரமும் ஒரு அழகான ஊர். சிதம்பரம் சிவன் கோவில் ஒரு அழகான கோவில். இந்தச் சிவன் பெயர் நடராஜர்.
நடராஜர் வீடு எங்கள் உள்ளம். அவருடைய ஆட்டம் எங்கள் மகிழ்ச்சி. உங்கள் உள்ளம் யார் வீடு? மீனாக்ஷி வீடா? நடராஜர் வீடா?
முருகன் சிவனுடைய மகன். முருகன் தமிழ்க் கடவுள். மயில் முருகன் வாகனம். வேல் முருகனுடைய ஆயுதம்.
|