Home
Overview
Technical Help

Select Unit > Unit 8: சம்பளம் வந்துதோ இல்லியோ! > Lesson 5:      Translation   Lessons:   1   2   3   4   5   6   

    

மனைவி – ஒண்ணாந் தேதி வந்துதோ இல்லியோ! கைக்கு சம்பளம் வந்துதோ இல்லியோ! பாட்டிலும் கையுமா உக்காந்துட்டா கடங்காரங்களுக்கெல்லாம் யார் பதில் சொல்றது?

கணவன் - ஒண்ணாந் தேதி வந்துதோ இல்லியோ! கைக்கு சம்பளம் வருது. ஆனா! இரண்டாந் தேதி வந்துதோ இல்லியோ! கைக்கு வந்த சம்பளமெல்லாம் பறந்து போயிடுது! இன்னெக்கி ஒரு நாளாவது குடிச்சிட்டு நிம்மதியா இருக்கலாம்னா! குடிக்காதே! குடிக்காதேண்ணு தொந்தரவு பண்றியே நீ!

மனைவி – ஆமாம்! ஆமாம்! நான்தான் தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்கேன்! நீங்க குடிச்சிக்கிட்டே இருங்க! கடனா வாங்கிக்கிட்டே இருங்க! கடங்காரங்க கடனெத் திருப்பிக் கொடு! திருப்பிக்கொடுண்ணு உயிரெ வாங்கிக்கிட்டே இருக்காங்க.

கணவன் – இந்த மாசம் கடன் வாங்கி போன மாசக் கடனெ கொடுக்கலாம்! அடுத்த மாசத்துக்கு இன்னும் கொஞ்சம் கடன் வாங்கலாம்! ஏன் அனாவசியமா கத்திக்கிட்டே இருக்கே!

மனைவி – நான் கத்திக்கிட்டே இருக்கேன் நீங்க நிம்மதியா உக்காந்து தண்ணி அடிச்சிக்கிட்டே இருங்க!

கணவன் – நீ என்ன எப்போ நிம்மதியா தண்ணி அடிக்க விட்டே? நான் கையிலெ பாட்டிலெ எடுத்தேனோ இல்லியோ! நீபாட்டுக்கு கத்த ஆரம்பிச்சுடறே! வாழ்க்கையில் நிம்மதி ஏது? என் வாழ்க்கையில் நிம்மதி ஏது?

    Grammar Notes:

Make sentences (narrating a context) where you can use the following expressions:

1) ஒண்ணாந் தேதி வந்துதோ இல்லியோ....
2) பறந்து போயிடுது!
3) இன்னெக்கி ஒரு நாளாவது
4) உயிரெ வாங்கிக்கிட்டே இருக்காங்க.
5) அனாவசியமா
6) நிம்மதியா

© South Asia Language Resource Center (SALRC)