Home
Overview
Technical Help

Select Unit > Unit 8: மருத்துவர் > Lesson 4:     Translation   Lessons:   1   2   3   4   5   6   

    

நோயாளி - ரெண்டு நாளா சரியாவே சாப்பிடலெ. பசியே இல்லெ. நல்ல ஜுரம். ராத்திரியிலெ தூங்கவே முடியலெ. அடிக்கடி தலைவலி உயிர் போகுது.

மருத்துவர் – உடம்பு வலி இருக்கா?

நோயாளி - ஆமாம். உடம்புவலி உயிர் போகுது. நடந்தா தலை சுத்துது! அடிக்கடி மயக்கம் வருது!

மருத்துவர் – உடம்புலெ எங்கயாவது காயம் ஏதாவது இருக்கா?

நோயாளி – இப்போ காயம் எதுவும் இல்லெ. இரண்டு வாரத்துக்கு முன்னாலெ கீழெ விழுந்து கால்ல ஒரு காயம் இருந்துது. இப்போ ஆறிப்போச்சு. (காயத்தைக் காட்டுகிறார்).

மருத்துவர் - காலெலெ என்ன சாப்பிட்டீங்க?

நோயாளி - நாலு இட்லி சாப்பிட்டேன். ஆனா ஒரு மணி நேரத்துலெ வாந்தி எடுத்துட்டேன்!

மருத்துவர் – வாந்தி எத்தனெ நாளா இருக்கு?

நோயாளி – இண்ணெக்கிதான் ஒரு தடவெ வாந்தி வந்துது!

மருத்துவர் – வயித்து வலி இருக்கா?

நோயாளி – ஆமாம். அப்பப்ப வயித்து வலி வருது.

மருத்துவர் – சரி. இப்போ ஒரு ஊசி போடறேன். ஒரு வாரத்துக்கு மருந்து எழுதித் தறேன். ஒரு நாளைக்கு மூணு மாத்தரை சாப்பிடுங்க! காலையிலெ சாப்பாட்டுக்கு அப்பறம் ஒண்ணு. மத்தியானம் சாப்பாட்டுக்கு அப்பறம் ஒண்ணு. ராத்திரி தூங்க போறதுக்கு முன்னாலெ ஒண்ணு. ஒரு வாரத்துக்கு அப்பறம் ஒடம்பு சரியா இல்லேண்ணா மறுபடியும் என்ன வந்து பாருங்க!

Grammar Notes:
Make your sentences using the following words and expressions:
1) ரெண்டு நாளா சரியாவே சாப்பிடலெ
2) நல்ல ஜுரம்.
3) இப்போ காயம் ஆறிப்போச்சு.
4) ஒடம்பு சரியா இல்லேண்ணா...
5) தலை சுத்துது!
6) அப்பப்ப வயித்து வலி வருது.
Cultural Notes:

    Borrowing and lending money

    Borrowing and lending money are common among some sections of Tamils, usually among the middle class. There are pawn brokers and professional money lenders, who lend money for interest. Even though the credit card companies have started to emerge in recent times as a result of 'globalization', the most common way of borrowing money is made either with these money lenders or from friends, colleagues and neighbors.

    There are also instances where some people borrow money and fail to pay back, and in such instances it is the concern of the lender to get the money back from such persons. This practice of borrowing money is very common especially among the monthly salaried people, who run short of money during the last week of the month. Asking for and lending money is not considered a bad habit, and is generally assumed to be one of the routine activities for some people.

    Words and Phrases:

    கைமாற்று (sp. கைமாத்து) 'borrowing' (lit. exchange of hands) (எனக்கு கைமாத்தா ஒரு ஐம்பது ரூபாய் தரமுடியுமா? ஒரே வாரத்துலெ திருப்பிக் கொடுத்துடுவேன்! 'Can you lend me some fifty rupees? I will return it in a week.'

    கடன் வாங்கு/கொடு 'borrow, lend, loan' (மாசக் கடைசி!. கடன் வாங்கினால்தான் கதை நடக்கும். 'It is end of the month. The rest of the days can only be spent with a loan from somebody')

    கடன் படு 'owe': This phrase is used both in its literal sense as well as in a metaphorical sense. (நான் உங்களுக்கு நிறைய கடன் பட்டிருக்கிறேன் 'I owe you a lot (of money or of help)'

    வட்டி போட்டு பணத்தைத் டிருப்பிக் கொடு 'pay money back with intrest' (நூறு ருப்பாய் கைமாத்து கொடுங்க. இன்னும் ஒரு மாசத்துலெ வட்டி போட்டுக் கொடுதுடறேன் 'Lend me some hundred rupees. I will pay you back in a month with intrest'.)

© South Asia Language Resource Center (SALRC)