![]() |
|
Select Unit > Unit 8: பயணம் > Lesson 3: Translation | Lessons: 1 2 3 4 5 6 |
சோமு – என்ன ராமு? பயணக் களைப்பெல்லாம் போயிட்டா?
ராமு - ஆமாம் மாமா! ராத்திரி நல்லா தூங்கினேன். களெப்பெல்லாம் போயிட்டு. நேத்து கஸ்டம்ஸலெ வேற ஒரு மணி நேரம் நின்னுக்கிட்டே காத்துக்கிட்டு இருக்க வேண்டியாதாப் போச்சு!
சோமு – எத்தனெ மணி நேரம் விமானத்திலெ வரவேண்டியிருந்துது?
ராமு - கிட்டத்தட்ட பத்தொன்பது மணிநேரம். விமானத்துலெ உக்காந்துக்கிட்டே வந்ததுலெ காலெல்லாம் ஒரு வலி! ஒடம்பு வலி உயிர் போகுது! வெண்ணீருலெ குளிச்சதுலெ இப்போ கொஞ்சம் பரவாயில்லெ.
சோமு – எந்த விமானத்துலெ வந்தே? எந்த வழியா வந்தே?
ராமு - சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்லெ வந்தேன். நியூவர்க்லேருந்து சிங்கப்பூர் பதினாறு மணி நேரம்! சிங்கப்பூர்லெ இரண்டு மணிநேரம் சென்னை விமானத்துக்காக காத்துக்கிட்டிருந்தோம். அப்பறம் சிங்கப்பூருலேருந்து சென்னைக்கு மூணு மணி நேரம்!
சோமு - விமானத்துலெ தூங்க முடிஞ்சுதா? சாப்பாடெல்லாம் எப்படி இருந்துது?
ராமு - பக்கத்துலெ ஒரு ஆள் கொறட்ட விட்டுத் தூங்கிக்கிட்டிருந்தார்! ஒரே கொறட்டச் சத்தம். தூங்கவே முடியெல. அப்பப சாப்பாடு அது இதுண்ணு கொண்டு வந்து கொடுத்து கொஞ்சத் தூக்கத்தெயும் கெடுத்துட்டாங்க!
சோமு – நெறய தண்ணி குடிச்சிக்கிட்டே இரு. இன்னும் ரெண்டு நாள்ளெ பயணக் களெப்பெல்லாம் போயிடும்.
|
|
| |
Make sentences using the following words and expressions: 1) பயணக் களைப்பெல்லாம் போயிட்டா? 2) வலி உயிர் போகுது! 3) இப்போ கொஞ்சம் பரவாயில்லெ. 4) கொறட்டச் சத்தம். தூங்கவே முடியெல 5) சாப்பாடெல்லாம் எப்படி இருந்துது? | |
© South Asia Language Resource Center (SALRC) |