Home
Overview
Technical Help

Select Unit > Unit 8: ஓட்டிப்பாக்றதாவது! > Lesson 1:         Translation   Lessons:   1   2   3   4   5   6   

    

மகன் – அப்பா! இந்த வண்டியை நான் கொஞ்ச தூரம் ஓட்டிப் பாக்றேன்பா!

அப்பா – என்ன? நீயாவது இந்த வண்டியை ஓட்டிப்பாக்றதாவது! அதெல்லாம் முடியாது. உன் வேலையைப் பார்.

மகன் - அப்பா! வெளியே எங்கேயும் போகலெ. இங்கேயே ஓட்டிப்பாக்றேங்றேன்.

அப்பா - நீ ஓட்டக்கூடாதுங்றேனே தெரியெல? நீ சின்னப் பையன் இந்த வண்டயையெல்லாம் ஓட்டக்கூடாது. அடுத்த வருஷம் உனக்கு ஒரு சின்ன வண்டி வாங்கித் தறேன். இப்ப சும்மா இரு.

மகன் - நீங்களாவது எனக்கு வண்டி வாங்கிக் கொடுக்றதாவது! சும்மா வாங்கித் தறேன்! வாங்கித் தறேன்னு சொல்வீங்க! எப்போ வாங்கினீங்க!

அம்மா – இங்கேதானே ஓட்டிப்பாக்றேங்றான்! சாவியைத்தான் கொடுங்களேன்!

அப்பா – இப்போ அப்படித்தான் சொல்வான். இங்கேயே ஓட்டிப்பாக்றேம்பான்! நாளைக்கு கடைத்தெரு வரைக்கும் கொண்டுபோவேம்பான்! அப்பறம்! வண்டி வீட்டிலேயே இருக்காது!

அம்மா - சும்மா! இண்ணெக்கி மட்டும் கொடுங்க! நாளெக்கெல்லாம் கேக்கமாட்டான்!

(மகன் -- வண்டியை ஓட்டுகிறான்)

    Grammar Notes:
Consult grammar on using ஆவது
    Grammar: Narrate a context using a form similar to the one as follows:

    1. நீங்களாவது எனக்கு பணம் தறதாவது.

    2. படிக்கிறேன் படிக்கிறேண்ணு சொல்லுவீங்க. ஆனா படிக்கவே மாட்டீங்க.

    Write the written form of the following words:

    3. ஓட்டிப்பாக்றேம்பான்

    4. கொடுக்றேண்ணேனே

    5. சொல்றேங்குறதுக்காக

© South Asia Language Resource Center (SALRC)