Home
Overview
Technical Help

Select Unit > Unit 8: வெயில் > Lesson 2:   Spoken      Translation   Lessons:   1   2   3   4   5   6   

    

வெயில் நல்லா அடிச்சிக்கிட்டிருக்றதுனெல வெளியே எங்கேயும் போகவே முடியெல! இந்த வெயில்லெ வெளியே போனா ஓரே வேர்வை! சட்டெயெல்லாம் வேர்வையிலெ தொப்பறெயா நனஞ்சிடுது.

We can't go anywhere because of the sun! It's beating so hard! If we set out anywhere, we sweat so much. The dress becomes so wet due to sweating!

ஆமாம் ஆமாம்! ஒரு நாளெக்கி மூணு தடவெயாவது குளிக்க வேண்டியிருக்கு! கொஞ்சம் கூட மழெ பெய்யவே மாட்டேங்குது. இந்த வெயில்லெ தோளெல்லாம் கறுப்பாப் போகுது!

Ya! We need to take a shower at least three times every day! We don't get any rain at all! The skin is tanned due to sun.

போன மாசம் கொஞ்சம் கொஞ்சம் மழெ பேஞ்சதனால வெயில் அப்படி தெரியவேயில்லெ! இந்த மாசம் மழெயே பெய்யாததனாலெ வெயில் கொளுத்து கொளுத்துண்ணு கொளுத்துது!

We had some rain last month, so we didn't feel the sun that much! Becuase it hasn't rained at all this month, the sun is parching so heavy.

பெங்களூருலேருந்து என் மகன் போன் பண்ணினான். அங்க அடிக்கடி மழெ பெய்றதுனாலெ இப்படி வெயில் கொடுமெ இல்லவே இல்லயாம்.

My son from Bangalore called me! He says that it rains often there, so they don't feel the sun this bad!

ஊம். அவங்கெல்லாம் கொடுத்து வச்சவங்க! இங்க பாரு! வெயில் அடிச்சா ஓரேயடியா அடிக்குது. மழெ பேஞ்சா ஓரேயடியா பெய்யுது! நாம தமிழ் நாட்டுலெ இருக்கிறதவிட ஊட்டி கொடைக்கானல்னு எங்கேயாவது போய் நிம்மதியா இருக்கலாமாண்ணு தோணுது!

Ummm. They are very lucky! Look here! Shining and raining have always been so heavy here! Sounds like we can move to either Ooty or Kodaikkanal (resort places) and settle there with peace.

ஊட்டி கொடைக்கானல் மட்டும் என்ன? அங்கதான் ஒரே குளிரா குளிருது! எல்லாரும் கம்பளிப் போர்வெயெ போத்திக்கிட்டு குளிருலெ நடுங்கிக்கிட்டு இருக்காங்க!

Neither Ooty nor Kodaikkanal is that good either! It's very cold there! Everyone there is shivering wrapped with blankets!

    Grammar Notes:

Make sentences using the following expressions:

1) சட்டெயெல்லாம் வேர்வையிலெ தொப்பறெயா நனஞ்சிடுது.

2) தோளெல்லாம் கறுப்பாப் போகுது!

3) மழெயே பெய்யாததனாலெ

4) இருக்கிறதவிட

5) ஓரேயடியா

© South Asia Language Resource Center (SALRC)