Home
Overview
Technical Help

Select Unit > Unit 10: ஓதுவார் > Lesson 2:      Lessons:   1   2   3   4   5   6  

    

தாயும் நீயே! தாயும் நீயே! தந்தை நீயே!

தாயும் நீயே! தாயும் நீயே! தந்தை நீயே!

தாயும் நீயே! தாயும் நீயே! தந்தை நீயே!

சங்கரனே! அணியே!

அதாவது இரண்டாயிரத்து ரெண்டு பிப்ரவரியிலெ இவர்கிட்டெ நாங்க இவர்கிட்டெ பாடம் கத்துக்க சேந்தோம். அது ஒரு பெரிய இதுவாச்சு. ஏண்ணா இவங்களுக்கு பத்து வருஷமா இவர்கிட்டெ பாடம் கத்துக்கணும்ணு ரொம்ப ஆசை. ஆனா இவரெ பிடிக்க முடியலெ. அவர் ரொம்ப பிஸி. பெரிய கர்னாட்டிக் சங்கீத வித்துவான்களெல்லாம் கூட இவர்கிட்ட வந்து தேவாரம் கத்துக்கிட்டு போவாங்க. அதனாலெ இவரெ பிடிக்கவே முடியாம இருந்துது. இப்படியே இருக்கும் போது ஒரு நாளு முருகாஷ்ரமுத்துல வந்து இவரு பிரண்டு இவர்கிட்டெ தேவாரம் கத்துக்க போனா. இவரோட க்லாஸ் இருந்துது. எனக்கு சைதாப்பேட்டையிலேருந்து அவருடைய க்லாசுக்கு வெஸ்ட் மாம்பலத்துலெ க்ளாசுக்கு போக முடியலெ. அப்ப அவர் சொன்னா அவர் சொல்லி குடுக்ற பாடமெல்லாம் பயங்கர சங்கதி இருக்கு. அந்த சங்கதியெல்லாம் நீ கரக்டா பாடிடுவெ. நீ பாடினா நன்னா இருக்கும் நீ போய் கத்துக்க. அப்படீண்ணு சொன்னா. அதனாலெ இயற்கையிலெ எனக்கு கர்னாட்டிக் கொஞ்சம் இதுவும் இருக்கு. அப்பா அம்மால்லாம் கர்னாட்டிக் பாடுவாங்க. சோ அந்த பிருகா சாரீரம் அதெல்லாம் இருக்க்றதுனாலெ சங்கீதம் கத்துக்கிண்டிருக்றதுனாலெ இந்தப் பாடல் நன்னா இருக்கும் நான் பாடினாக்கண்ணா ஆசைப்பட்டேன்.

    Grammar Notes:

Translate the reading to the best of your knowledge.

Gloss:

1) இரண்டாயிரத்து ரெண்டு பிப்ரவரி - Year 2002, February
2) கத்துக்கணும்ணு ஆசெ - desire to learn (lesson)
3) கர்னாட்டிக் சங்கீத வித்வான் - Expert in Karnatic music
4) தேவராம் - Tevaram hymns (sixth century Saiva hymns composed by a group of Saivaite hymnists)
5) சங்கதி - Musical note
6) இயற்கையிலேயே - by nature
7) நான் பாடினாக்கண்ணா - If I recite....

© South Asia Language Resource Center (SALRC)