Home
Overview
Technical Help

Select Unit > Unit 9: பாத்து! பாத்து! > Lesson 5: Translation   Lessons:   1   2   3   4   5   6   

    

பாத்து! பாத்து! உழுந்து கிழுந்து வைக்காதீங்க!

Watch out! Don't you make a scene by falling down!

சும்மா வாயெ போத்திக்கிட்டு வாங்க! உழுவேன் கிழுவேண்ணு பயமுறுத்தாதீங்க!

You keep your mouth shut and come! Don't you scare me by saying that I would fall down!

உழுந்து கிழுந்து காலெ கீலெ ஒடெச்சிக்குவீங்களேண்ணு சொன்னேன்! அதுக்கு ஏன் நாய் மாதிரி வள் வள்ளுண்ணு கத்துறீங்க!

I was warning you not to get your leg hurt by falling down! Why are you screaming like a dog's barking?

    Grammar Notes:
Consult the grammar section on using echo and reduplicative constructions in Tamil

Translate the following:

  1. நீங்கள் எனக்கு காப்பி கீப்பி வாங்கிக்கொடுக்கிறீர்களா?
  2. இங்கே கோவில் கீவில் எங்கேயாவது இருக்கிறதா?
  3. எனக்கு புத்தகம் கித்தகமெல்லாம் படிக்கப்பிடிக்காது.
  4. நீங்கள் என் வீட்டுக்கு கீட்டுக்கு வந்துவிடாதீர்கள்!
  5.  அவர்கள் உங்கள் வீட்டுக்கு வந்துவிட்டார்கள்! சும்மா வாங்க! கீங்கண்ணு எதாவது சொல்லிவையுங்கள்!
© South Asia Language Resource Center (SALRC)