Home
Overview
Technical Help

Select Unit > Unit 9: ஊருக்கு கீருக்கு > Lesson 6:    Translation   Lessons:   1   2   3   4   5   6     

    

தம்பி! இங்கேயே உட்காந்திரு! யாராவது ஜான் கீன் வந்து சார் கீரெ பாக்கணும்ணு சொன்னா நான் ஊருக்கு கீருக்கு போயிருக்கேண்ணு ஏதாவது சொல்லி அனுப்பிடு! என்ன? புரியுதா?

சரி சார்! நல்லா புரியுது! நான் அப்படியே சொல்லிட்றேன்! நீங்க நிம்மதியா உள்ளேயே இருங்க சார்!

Scene changes! Someone comes and talks to the boy

தம்பி! சார் வீட்டுலெ இருக்காரா? சாரெ பாக்கணுமே!

உங்க பேரு என்ன சார்?

என் பேரு ஜான்.

சார்! யாராவது ஜான் கீன் வந்து சார் கீர் வீட்டுலெ இருக்காரா? அவரெ பாக்கணும் கீக்கணும்ணு சொன்னா, அவர் ஊருக்கு கீருக்குப் போயிருக்காருண்ணு ஏதாவது சொல்லி உங்களெ வீட்டுக்கு அனுப்பிடணும்ணு சொன்னாரு சார்!

சார் கீருகிட்ட சொல்லு. ஜான் கீன்ண்ணு ஒரு பெட்டி கிட்டியோட வந்தாரு. தங்கம் கிங்கம் எடுத்துக்கிட்டு வந்தாரு. குடுக்கலாம் கிடுக்கலாம்ணு நெனெச்சாரு. இல்லே கில்லேண்ணு சொன்னவொடனே வாறேன் போறேண்ணு போயிட்டாருண்ணு சொல்றியா? மறக்காம சொல்லுப்பா!

    Grammar Notes:
Consult the grammar section on using echo and reduplicative constructions in Tamil

Rewrite the following with echo constructions:

  1. எனக்குக் காப்பி பிடிக்காது.
  2. எனக்கு ஜானைத் தெரியாது.
  3. உங்களுக்கு கடைக்குப் போகவேண்டுமா?
  4. இந்த ஊரில் கோயில் எங்கே இருக்கிறது?
  5. யாருக்குக் கதை சொல்லத் தெரியும்?
© South Asia Language Resource Center (SALRC)