Home
Overview
Technical Help

Select Unit > Unit 9: பாத்த மாதிரி இருக்கே! > Lesson 4:   Translation   Lessons:   1   2   3   4   5   6   

    

a boy to a girl ஏங்க! உங்களெ எங்கேயோ பாத்த மாதிரி இருக்கே!

வழியெ விடுங்க! உங்களெ எனக்கு முன்னெ பின்ன திரியாது! சும்மா! அங்க பாத்தேன் இங்கெ பாத்தேண்ணு கதெ விடாதீங்க!

இல்லிங்க! நிஜமாத்தான் சொல்றேன்! உங்களெ எங்கேயோ பாத்திருக்கேன்!

என்னங்க கடைக்காரரே! இந்த ஆளு என்னெ அங்க பாத்தேன் இங்க பாத்தேண்ணு தொந்தரவு பண்றாரு பாருங்க!

Store person to the boy ஏன்யா! கடைக்கு வந்தோமா! துணி வாங்கினோமா! வீட்டுக்கு போனோமாண்ணு இல்லாமெ ஏன் இப்படி கடைக்கு வற பொண்ணுங்ககிட்டெயெல்லாம் உங்களெ அங்க பாத்தேன் இங்க பாத்தேண்ணு இப்படி தொந்தரவு பண்றீங்க?

    Grammar Notes:

Translate the following:

  1. உங்களை எனக்கு முன்னே பின்னே தெரியாது! இப்படி திடு திப்பென்று வந்து என் கூட காப்பி சாப்பிட வருகிறாயா என்று கேட்கிறீர்களே!
  2. முன்னே பின்னே தெரியாதவர்களிடம் அனாவசியமாகப் பேசிக்கொண்டிருக்காதீர்கள்!
  3. உங்களுக்கு என்னை யார் என்று தெரிகிறதா? பத்து வருடத்துக்கு முன்னால் நாம் இரண்டு பேரும் ஒன்றாகப் படித்தோமே! ஞாபகம் இல்லையா?
  4. உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே! எங்கே என்றுதான் எனக்கு ஞாபகம் வரமாட்டேன் என்கிறது.
© South Asia Language Resource Center (SALRC)