Home
Overview
Technical Help

Select Unit > Unit 9: கொஞ்சம் இங்க வறீங்களா? > Lesson 1:   Spoken      Translation   Lessons:   1   2   3   4   5   6   

    

என்னெங்க கொஞ்சம் இங்க வறீங்களா?

Hello! Dear! Can you come over here for a bit?

கொஞ்சம் இரு! இதெ எழுதிட்டு வறேன்!

Wait! As soon as I finish writing it, I will come!

அட! இங்க வாங்க! வாங்கண்ணுக்கிட்டேயிருக்கேன்! நீங்கபாட்டுக்கும் கொஞ்சம் இரு! கொஞ்சம் இருண்ணுக்கிட்டேயிருக்கீங்களே!

What's the matter with you? Come here right away! I keep asking you to come by here, you keep telling me to wait!

இதெ எழுதி முடிச்சிட்டு வறேங்றேன். அதுக்குள்ள இப்பவே வா! இப்பவே வாண்ணுக்கிட்டேயிருக்கியே! அப்படி என்னதான் தலை போற விஷயம்ங்றேன்?

I say that I will come once I finish writing this! You keep telling me to come right away! I ask what's so important about it?

ஏங்க! இங்க கொஞ்சம் வாங்கங்றேனே! உங்களுக்குக் கேக்குதா இல்லியா?

Hey! I am asking that you come here a bit! Don't you hear me?

கேக்குது! கேக்குது! நீங்க வாங்க! வாங்கங்றது நல்லாவே கேக்குது! ஏதாவது செய்யணும்னா! ஒடனே செஞ்சாதான் ஆச்சும்பியே நீ! அப்படி என்னதான் தலை போற வஷயம்ங்றேன்!

Ya! I do hear! I do hear well what you say about me coming right away! If you want to do anything, you would want it done right away! I am asking what is so important about it?

நீங்க! வறேன்! வறேம்பீங்க! ஆனா வரவேமாட்டீங்க! கொஞ்ச நேரம் இங்க வந்துட்டுதான் போங்களேங்றேன்! இதோ வறேன் இதோ வறேண்ணுகிட்டே இருக்கீங்களே தவிர! உட்கார்ந்த இடத்தெ விட்டு எழுந்து வறமாட்டேண்ணுக்கிட்டே இருக்கீங்களே!

Ya! Right! You would say that you would come right away! But, you would never come! Why can't you just come by here for a bit and go?

என்ன செய்யணுங்கறதெ சொல்லித்தான் தொலையேன்! சும்மா! வாங்க! வாங்கண்ணுகிட்டேயிருப்பியே தவிர என்ன செய்யணுங்கறதெ சொல்லவே மாட்டியே! இப்ப என்னதான் செய்யணுங்றே நீ?

Why can't you just tell me what needs to be done? You would only be telling me to come by but would never tell me what is it for though! What do you want me to do now?

ஆமாம்! ஆமாம்! என்ன செய்யணுங்றதெ சொல்லிட்டா அப்படியே ஒண்ணு விடாம! டக்கு டக்குண்ணு செஞ்சிடுவீங்க பாருங்க! என்ன செய்யணுங்றதெ சொல்லணுமாம் சொல்லி!

Ya! If I tell you what needs to be done, you would go and do every bit of it without any problem, right? It's so that he is asking me to say what needs to be done!

    Grammar Notes:
Consult the grammar section on using என்

Translate the following to English:

  1. நீங்கள் வருகிறேன் என்று சொல்லிக்கொண்டேயிருக்கிறீர்கள்!
  2. நீங்கள் வருகிறேன் என்பீர்கள் ஆனால் வரவேமாட்டீர்கள்.
  3. நான் தமிழ் படிக்கிறேன் என்கிறதால் என்னால் நன்றாக தமிழ் பேசமுடிகிறது.
  4. என்னுடைய மாமாவும் மாமியும் எங்கள் வீட்டுக்கு வருகிறார்கள் என்கிறதற்காக நாங்கள் எங்கேயும் போகாமல் வீட்டிலேயே இருக்கிறோம்.
  5. நான் வருகிறேன் என்கிறேன். நீ வராதே என்கிறாய்!

 

© South Asia Language Resource Center (SALRC)