Home
Overview
Technical Help

Select Unit > Unit 5 > Reading 2: சிங்கமும் நரியும்Reading in Written form  Reading 1  Exercise 3  Exercise 4

சிங்கமும் நரியும்

ஒரு காட்டிலெ ஒரு சிங்கம் வாழ்ந்து வந்தது. சிங்கம் காட்டிலெ இருக்றது எல்லா மிருகத்துக்கும் தெரியும். சிங்கம் மத்த மிருகத்தெயெல்லாம் அடிச்சி சாப்பிட்டது. சிங்கம் இப்படி தங்களெ சாப்பிட்றது மிருகத்துக்கெல்லாம் பிடிக்கலெ. இதெ நிறுத்தணும்ணு அதெல்லாம் நெனெச்சிது. ஒரு நரி ஒரு திட்டம் போட்டது. சிங்கத்துகிட்டெ போய், நீங்க எங்களோட சண்டெ போடவேண்டாம். நீங்க எங்களெ ஒரு நாளெக்கி ஒருவரா சாப்பிடுங்க. உங்களோடெ சாப்பாட்டுக்கு நாங்க ஒவ்வொருவரா வர ஏற்பாடு செய்றோம்ணு சொன்னுது. சிங்கம் அதுக்கு சரிண்ணு சொன்னது. நரி இதெ எல்லா மிருகத்துக்கிட்டெயும் சொன்னது. ஒவ்வொரு நாளும் ஒரு மிருகம் சிங்கத்துகிட்டெ வந்தது. ஒரு நாள் நரியோடெ மொறெ வந்தது. நரி சிங்கத்துகிட்டெ போய், “உங்களெப் போலவே இன்னொரு சிங்கம் இந்த காட்டிலெ இருக்கு. நான் வழியிலெ பாத்தேண்ணு சொன்னது.“ சிங்கத்துக்கு கோபம் வந்தது.

நான் தான் இந்த காட்டுக்கு ராஜா! இன்னொரு சிங்கம் இந்தக் காட்டிலெ இருக்கா? எங்கே! காட்டுண்ணு சொன்னது. நரி சிங்கத்தெ ஒரு கிணத்துக்கு பக்கத்திலெ அழெச்சிக்கிட்டு வந்தது. கிணத்துலெ எட்டிப்பார்ண்ணு சொன்னது. சிங்கம் கிணத்துக்குள்ளெ பாதுது. அங்கே தன்னோடெ நெழலெ பாத்தது. அது இன்னொரு சிங்கம்ணு நெனெச்சி அதெக் கொல்ல நெனெச்சி கெணத்துக்குள்ளெ குதிச்சி. செத்துப் போனது. காட்டுலெ எல்லா மிருகமும் மகிழ்ச்சியா இருந்தது.

© South Asia Language Resource Center (SALRC)