Home
Overview
Technical Help

Select Unit > Unit 9: படிச்சோமா! போனோமா! > Lesson 3:   Spoken    Lessons:   1   2   3   4   5   6   

    

சீனு நேத்தி வீட்டுக்கு எத்தனெ மணிக்கு போனே?

Seenu! At what time did you leave yesterday?

அதெ ஏன் கேக்குறெ? பஸ்ஸும் கெடெக்கெலெ ஒன்னும் கெடெக்கெலெ! வீட்டுக்குப் போய் சேர பதினோறு மணி ஆயிட்டு!

That's a big story! I could not get any bus at all! I could only reach home late at eleven o'clock.

தம்பி நூலகத்துலெ பேசக்கூடாதுங்றது தெரியாதா? தொண தொணண்ணு இப்படி பேசிக்கிட்டேயிருந்தா மத்தவங்கல்லாம் எப்படி படிப்பாங்க? நூலகத்துக்கு வந்தோமா! புத்தகத்தெ படிச்சோமா! வீட்டுக்குப் போனோமாண்ணு இல்லாமெ இப்படி தொண தொணண்ணு பேசிக்கிட்டேயிருக்கீங்களே!

My dear! Don't you know that one should not talk in the library? If you chatter like this, how can others read here? Why don't you just have the habit of coming to the library, take a book, read it and leave for home! Instead, you are talking like a chatter box here!

    Grammar Notes:
Consult the grammar section on using interrogative sentences

Translate the following:

  1. கடைக்கு வந்தோமா! ஜாமான் வாங்கினோமா! வீட்டுக்குப் போனோமா என்று இல்லாமல் ஏன் இப்படி இங்கே எல்லோரிடமும் தொண தொணவென்று பேசிக்கொண்டேயிருக்கிறீர்கள்?
  2. கோவிலுக்கு வந்தோமா! சாமி கும்பிட்டோமா! வீட்டுக்குப் போனோமா என்று இல்லாமால் ஏன் இங்கே வந்து குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருக்கிறீர்கள்?
  3. பள்ளிக்கூடத்துக்கு வந்தோமா! வகுப்புக்குப் போனோமா! பாடம் படித்தோமா! வீட்டுக்குப் போனோமா என்று இல்லாமால் இப்படி வகுப்பில் விளையாடிக்கொண்டிருக்கிறீர்களே!
© South Asia Language Resource Center (SALRC)