Home
Overview
Technical Help

Select Unit > Unit 9: தஞ்சாவூர்காரங்க > Lesson 2:   Spoken      Lessons:   1   2   3   4   5   6   

    

போறுமா? போறுமா? பாருங்க?

Is this enough? Is this enough? Can you tell me?

என்ன? தஞ்சாவூர்காரங்க மாதிரி வெறுங்கறண்டியெ காட்டி போறுமா? போறுமாங்றீங்க? சும்மா ஊத்துங்க!

What? Like the custom in Thanjore district, you show the empty spoon and ask me whether it is enough! Why don't you just pour it?

அட! கொஞ்சந்தான் பாக்கி இருக்கு! இன்னும் இருபது பேர் பந்தியிலெ இருக்காங்க! எல்லாருக்கும் கொஞ்சம் கொஞ்சம் ஊத்தவேண்டாம்? அதுக்குத்தான் முஞ்சியிலெ அடிச்சமாதிரி இல்லேண்ணு சொல்லாம போறுமா போறுமாண்ணேன்! ஏதோ கல்யாணத்துக்கு வந்தோமா! கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டோமா! போனோமாண்ணு இல்லாமெ ஊத்திக்கிட்டே இருங்கண்ணா எப்படி? எல்லாரும் சாப்பிட வேண்டாம்?

Ya! We are left with only little bit of it! We have yet another twenty people in the row! Shouldn't I save some for everyone? That's the reason why I asked if that was enough. I didn't really want to be mean by saying that there isn't enough! It would be nice if you consume little bit of it instead of asking me to give you a lot! Don't others need to eat?

    Grammar Notes:

Translate the following:

நீங்கள் கல்யாணத்துக்கு வந்தோமா! சாப்பிட்டோமா! நான்கு பேரோடு பேசினோமா என்று இல்லாமல் ஏன் இப்படி இங்கே அது சரியில்லை! இது சரியில்லை என்று புலம்பிக்கொண்டேயிருக்கிறீர்கள்?  உங்களுக்கு நல்லதே கண்ணில் படாதா? குறை சொல்லிக்கொண்டேயிருக்கிறதுதான் உங்களுக்குப் பழக்கமாக இருக்கும் போலிருக்கிறது.

© South Asia Language Resource Center (SALRC)