Home
Overview
Technical Help

Select Unit > Unit 2 > Reading 2: லட்சம் பணம்Reading in Written form  Reading 1  Exercise 3  Exercise 4


ஒரு லட்சம் பணம்

ஒரு பிச்செக்காரன் தினமும் சிவபெருமானெக் கும்பிட்டுக்கிட்டிருந்தான். சிவன் அவன் மேல் இரக்கம்

காட்டினார். தன்னோடு மகன், பிள்ளையாரிடம், இவனுக்கு இன்னும் ஒரு வாரத்திலெ ஒரு

லட்சம் பணம் கொடு ண்ணு சொன்னார். அதற்குப் பிள்ளையார் சரி ண்ணாரு.

இதெ ஒரு பணக்காரக் கருமி கேட்டுக்கிட்டிருந்தான். அவன்

பிச்செக்காரன்கிட்டெருந்து அந்தப் பணத்தெ ஏமாத்தி

வாங்கணும் ண்ணு முடிவு செஞ்சான்.

கருமி பிச்செக்காரன்கிட்டெ போய் "நான் ஒனக்கு பத்து ருபாய் பணம்

தறேன். ஆனா நீ இன்னும் ஒரு வாரத்திலெ ஒனக்குக்

கெடெக்கும், எல்லாப் பணத்தெயும் எனக்குக் கொடுக்கணும்" ண்ணு சொன்னான்.

அதற்குப் பிச்செக்காரன் வேண்டாம் ண்ணான். கருமி தொகெயெ

ஏத்திக் கிட்டே போய் ஐம்பதாயிரம்

கொடுக்றேண்ணான். சரிண்ணு அதெ வாங்கிக்கிட்டான் அந்தப் பிச்செக்காரன்.

ஒரு வாரம் கழித்து அந்தப் பிச்செக்காரனெ

அழைத்துக்கிட்டு அந்தப் பணக்காரக் கருமி

கோவிலுக்குப் போனான். கதவெத் திறக்கும் போது

சிவனும் பிள்ளையாரும் பேசிக்கிட்டிருந்தாங்க.

"சிவன் பிள்ளையார்கிட்டெ நீ பிச்செக்காரன்கிட்டெ ஒரு லட்சம்

கொடுத்தேயா?" ண்ணு கேட்டார். அதற்கு பிள்ளையார், நான்

பிச்செக்காரனுக்கு ஐம்பதாயிரம் ருபாய் கொடுத்தேன், அது அந்தப்

பிச்செக்காரனுக்குப் போதும் ண்ணு சொன்னார்.

© South Asia Language Resource Center (SALRC)