ஒரு பிச்சைக்காரன் தினமும் சிவபெருமானைக் கும்பிட்டுக்கொண்டிருந்தான். சிவன் அவன் மேல் இரக்கம்
காட்டினார். தன்னுடைய மகன், பிள்ளையாரிடம், இவனுக்கு இன்னும் ஒரு வாரத்தில் ஒரு
லட்சம் பணம் கொடு என்று சொன்னார். அதற்குப் பிள்ளையார் சரி என்றார்.
இதை ஒரு பணக்காரக் கருமி கேட்டுக்கொண்டிருந்தான். அவன்
பிச்சைக்காரனிடமிருந்து அந்தப் பணத்தை ஏமாற்றி வாங்க
வேண்டும் என்று முடிவு செய்தான்.
கருமி பிச்சைக்காரனிடம் போய் "நான் உனக்கு பத்து ருபாய் பணம்
தருகிறேன். ஆனால் நீ இன்னும் ஒரு வாரத்தில்
உனக்குக் கிடைக்கும், எல்லாப் பணத்தையும் எனக்குக் கொடுக்கவேண்டும்" என்று
சொன்னான். அதற்குப் பிச்சைக்காரன் வேண்டாம் என்றான். கருமி
தொகையை ஏற்றிக் கொண்டே போய்
ஐம்பதாயிரம் கொடுக்கிறேன் என்றான். சரி என்று அதை வாங்கிக்கொண்டான்
அந்தப் பிச்சைக்காரன்.
ஒரு வாரம் கழித்து அந்தப் பிச்சைக்காரனை
அழைத்துக்கொண்டு அந்தப் பணக்காரக் கருமி
கோவிலுக்குப் போனான். கதவைத் திறக்கும் போது
சிவனும் பிள்ளையாரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
"சிவன் பிள்ளையாரிடம் நீ பிச்சைக்காரனிடம் ஒரு லட்சம்
கொடுத்தாயா?" என்று கேட்டார். அதற்கு பிள்ளையார், நான்
பிச்சைக்காரனுக்கு ஐம்பதாயிரம் ருபாய் கொடுத்தேன், அது அந்தப்
பிச்சைக்காரனுக்குப் போதும் என்று சொன்னார்.
|