[
    {
        "id": "1",
        "proverb": "ஆற்றில் போட்டாலும் அளந்து போடவேண்டும்",
        "created_at": "2025-02-16 11:28:49",
        "context": "எந்த ஒரு செலவையும் செய்யும் முன்னால் இந்தப் பழமொழியை நினைத்துக்கொள்வது நல்லது."
    },
    {
        "id": "2",
        "proverb": "துஷ்டனைக் கண்டால் தூர விலகு",
        "created_at": "2025-02-16 11:37:56",
        "context": "நீங்கள் தொடர்பு கொண்டுள்ள ஒரு லாபநோக்கற்ற நிறுவனத்தில் நடக்கும் அவலங்களைக் கண்டு வேதனைப்படாமல் மகிழ்வோடு இருக்க இந்தப் பழமொழியை இந்நிறுவனம் பற்றி எண்ணும் போதெல்லாம் நினைத்துக்கொள்ளவேண்டும்."
    },
    {
        "id": "3",
        "proverb": "தேனை எடுக்கிறவன் புறங்கையை நக்காமல் இருப்பானா",
        "created_at": "2025-02-16 11:44:48",
        "context": "நீங்கள் தொடர்புகொண்டுள்ள நிறுவனத்தில் உங்களை ஏமாற்றும்படி ஒருவன் நடந்துகொண்டால் இந்தப் பழமொழியை நினைத்துகொண்டு உங்களை சமாதானப்படுத்திக்கொள்ளவேண்டும்."
    },
    {
        "id": "4",
        "proverb": "அழுகிற குழந்தைதான் பால் குடிக்கும்",
        "created_at": "2025-02-16 11:46:24",
        "context": "எதையும் சாதிக்கவேண்டுமென்றால் முயற்சி செய்துகொண்டே இருக்கவேண்டும் என்ற உண்மையை அவ்வப்போழுது நினைத்துக்கொள்ள இந்தப் பழமொழியைப் பயன்படுத்தலாம்."
    },
    {
        "id": "5",
        "proverb": "கொல்லன் பட்டறையில் கட்டெறும்புக்கு என்ன வேலை",
        "created_at": "2025-02-16 11:48:21",
        "context": "மிகவும் கொடூரமான எண்ணம் கொண்ட ஒரு குழுவினரின் அநீதியிலிருந்து தப்பிக்கவேண்டுமென்றால் இந்தப் பழமொழியை நினைத்துக்கொள்ளவேண்டும். அருகே போனால் பொசுக்கிவிடுகிற கொடூரத்தன்மை கொண்டவர்களிடமிருந்து தூர விலகியிருப்பதே நல்லது. "
    },
    {
        "id": "6",
        "proverb": "முள்ளில் மேல் விழுந்த சேலையை எடுப்பது போல மிகவும் கவனமாக இருக்கவேண்டும்",
        "created_at": "2025-02-16 12:28:40",
        "context": "முன்கோபக்காரர்களிடம் மிகவும் கோபப்படாமல் பொறுமையோடு நடந்துகொள்ளவேண்டும்."
    },
    {
        "id": "7",
        "proverb": "சுவற்றில் சேற்றை எறிந்தால் அது நம் மேல்தான் விழும்",
        "created_at": "2025-02-16 16:47:45",
        "context": "கோபக்காரர்களையோ தீயவர்களையோ கோபமாகத் திட்டினால் நமக்குத்தான் கேடு வரும் என்பதற்கு இந்தப் பழமொழியை நினைத்துக்கொள்ளலாம்."
    },
    {
        "id": "8",
        "proverb": "வரன் கொடுத்தவன் தலையிலேயே கையை வைக்கிறார்கள்",
        "created_at": "2025-02-17 11:11:30",
        "context": "நிறைய உதவிகளைச் செய்தபிறகும் உதவிகளையெல்லாம் ஏற்றுக்கொண்டு உதவி செய்தவருக்கு தீங்கு செய்ய நினைப்பவருக்கு இந்தப் பழமொழி மிகவும் பொருந்தும்."
    },
    {
        "id": "9",
        "proverb": "பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்",
        "created_at": "2025-02-17 15:03:15",
        "context": "ஒருவரின் தவறைக் கண்டு அவர் மாட்டிக்கொள்ளாமலேயே இருக்கிறாரே என்று நினைத்த போது இந்தப் பழமொழியை நினைத்துக்கொள்ளலாம்.  "
    },
    {
        "id": "10",
        "proverb": "ஆள் பாதி ஆடை பாதி",
        "created_at": "2025-02-17 15:03:54",
        "context": "நல்ல சட்டையைப் போட்டு அழகு பார்க்கிற போது இந்தப் பழமொழியை நினைத்துக்கொள்ளலாம்."
    },
    {
        "id": "11",
        "proverb": "ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது",
        "created_at": "2025-02-17 15:16:01",
        "context": "எதையும் நன்றாக யோசித்துச் செய்யவேண்டும். அவசர அவசரமாக எந்த முடிவையும் எடுத்துவிடக்கூடாது என்பதற்கான பழமொழி இது."
    },
    {
        "id": "12",
        "proverb": "எறுமை மாட்டின் மேல் மழை பெய்த மாதிரி",
        "created_at": "2025-02-17 21:13:56",
        "context": "என்னதான் சொன்னாலும் எதையும் கேட்காமல் செய்வதையே செய்துகொண்டிருப்பவர்களை நினைக்கும்போது இந்தப் பழமொழி நினைவுக்கு வரும்."
    },
    {
        "id": "13",
        "proverb": "இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் போகிறது",
        "created_at": "2025-02-17 21:15:44",
        "context": "தெரிந்துகொண்டதையெல்லாம் உடனே மறந்துவிடுபவர்களை நினக்கும்போது இந்தப் பழமொழி நினைவுக்கு வரும்."
    },
    {
        "id": "14",
        "proverb": "கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி",
        "created_at": "2025-02-17 21:16:58",
        "context": "சொல்கிறது எதுவும் புரியாமல் இருப்பவர்களை நினைக்கும் போது இந்தப் பழமொழி நினைவுக்கு வரும்."
    },
    {
        "id": "15",
        "proverb": "முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கிறது மாதிரி இருக்கிறது",
        "created_at": "2025-02-19 14:34:05",
        "context": "நம்ப முடியாத அளவுக்கு ஒருவர் அப்பட்டமாகப் பொய்யைச் சொல்லும் போது இந்தப் பழமொழியைப் பயன்படுத்தலாம்."
    },
    {
        "id": "16",
        "proverb": "தெருவில் போகிற நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்த மாதிரி",
        "created_at": "2025-02-22 16:29:01",
        "context": "தகுதியில்லாத ஒருவனுக்கு அதிக பதவியைக் கொடுத்து அவன் செய்கிற அட்டூழியத்தைக் குறிக்கிற பழமொழி இது."
    },
    {
        "id": "17",
        "proverb": "நாய் வாலை நிமிர்த்தவே முடியாது",
        "created_at": "2025-02-22 17:10:01",
        "context": "என்னதான் முயற்சி செய்தாலும் சிலருடைய கெட்ட பழக்கத்தை மாற்றவே முடியாது."
    },
    {
        "id": "18",
        "proverb": "திருடனுக்கு தேள் கொட்டியது போல",
        "created_at": "2025-02-23 07:00:26",
        "context": "சிலர் தாங்கள் செய்த தவறை மற்றவர்கள் கண்டுபிடிக்கும் போது அவர்களுக்கு மனதுக்குள் உறுத்துவதைச் சொல்ல இந்தப் பழமொழியைப் பயன்படுத்துவார்கள்."
    },
    {
        "id": "19",
        "proverb": "குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறுவார்கள்",
        "created_at": "2025-02-25 21:57:28",
        "context": "தான் தவறு செய்துவிட்ட்து எல்லோருக்கும் தெரிந்துவிட்டது என்றாலும் அந்தத் தவறுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்."
    },
    {
        "id": "20",
        "proverb": "ஒண்ணும் தெரியாத பாப்பா போட்டுக்கிட்டாளாம் தாப்பாள்",
        "created_at": "2025-02-26 10:54:28",
        "context": "எதுவும் தெரியாத மாதிரி நடிப்பவர்களுக்கு இந்தப் பழமொழியைச் சொல்லலாம்."
    },
    {
        "id": "21",
        "proverb": "பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டுவிடுமாம்",
        "created_at": "2025-02-26 10:56:07",
        "context": "தனக்குத்தான் எல்லாம் தெரியும். மற்றவர்களுக்கெல்லாம் ஒன்றும் தெரியாது என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு இந்தப் பழமொழியைச் சொல்லலாம்."
    },
    {
        "id": "22",
        "proverb": "பஞ்சு விக்கப் போனா காத்தடிக்குது உப்பு விக்க போனா மழை பெய்யுது",
        "created_at": "2025-02-26 13:07:50",
        "context": "எதும் நமக்கு சாதகமாக இல்லாமல் எதிர்மாறாக இருந்தால் இந்தப் பழமொழியைப் பயன்படுத்தலாம்"
    },
    {
        "id": "23",
        "proverb": "ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரையாம்",
        "created_at": "2025-02-28 10:00:19",
        "context": "கரும்பு ஆலை இல்லாத ஊரில் சர்க்கரைக்காக இலுப்பைப் பூவை பயன்படுத்துவார்களாம்.  பெரியோர்கள் இல்லாத இடத்தில் அறிவில்லாத சிறியவர்களுக்கும் மதிப்பு கிடைக்கும்."
    },
    {
        "id": "24",
        "proverb": "கிளியை வளர்த்து பூனைக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறோம்",
        "created_at": "2025-02-28 10:26:00",
        "context": "முறையாக வளர்த்து நன்றாக வளரவேண்டும் என்று நினைத்து உருவாக்கிய ஒரு நிறுவனத்தை கடைசியில் ஒரு அராஜகக்காரனிடம் கொடுத்து வீணாக்கும்போது இந்தப் பழமொழியைச் சொல்லலாம்."
    },
    {
        "id": "25",
        "proverb": "எறிகிற தீயில் எண்ணையை ஊற்றுகிற மாதிரி",
        "created_at": "2025-03-01 15:46:43",
        "context": "திரும்பத் திரும்ப ஒருவரின் மனதைப் புண்படுத்திக்கொண்டிருந்தால் இந்தப் பழமொழியைப் பயன்படுத்தலாம்."
    },
    {
        "id": "26",
        "proverb": "நொந்த புண்ணில் வேலை பாய்ச்சுகிற மாதிரி",
        "created_at": "2025-03-01 15:47:32",
        "context": "ஒருவரின் தவறைத் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தால் இந்தப் பழமொழியைப் பயன்படுத்தலாம்"
    },
    {
        "id": "27",
        "proverb": "தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது",
        "created_at": "2025-03-04 11:09:05",
        "context": "ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு தீங்கு நடந்தததென்றால் நடந்தது நடந்தாகவே இருக்கட்டும். இனிமேல் எல்லாம் நல்ல முறையில் நடக்கும் என்று நினைத்துக்கொள்ள இந்தப் பழமொழியைப் பயன்படுத்துவார்கள்."
    },
    {
        "id": "28",
        "proverb": "முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல",
        "created_at": "2025-03-09 11:45:11",
        "context": "முடியாத ஒன்றை அடைய ஒருவர் விரும்பினால் இந்தப் பழமொழியைப் பயன்படுத்தலாம். மரக்கொம்புகளில் இருக்கும் தேனடையைத் தட்டிவிட்டு தேனீக்களெல்லாம் வருவதற்கு முன் அந்த இடத்தை விட்டு ஓடவேண்டும். முடவனால் முடியாத போது அவன் எப்படி தேனடையைத் தட்டிவிட்டு தேனை எடுக்க ஆசைப்படலாம்."
    },
    {
        "id": "29",
        "proverb": "எதிரும் புதிருமாக",
        "created_at": "2025-03-10 08:57:21",
        "context": "ஒருவருக்கு ஒருவர் நேர் மாறான எண்ணம் கொண்டவர்களைப் பற்றி இதைக் கூறலாம்"
    },
    {
        "id": "30",
        "proverb": "உள்ளூர் மாடு வெளியூர்லெதான் வெலெ போகும்",
        "created_at": "2025-03-13 08:32:50",
        "context": "நன்றாகத் தெரிந்தவர்கள் என்றுமே ஒருவரின் திறமையை மதிக்கமாட்டார்கள். பொறாமை குணம்தான் இருக்கும். ஆனால் திறமை தெரியாதவர்களிடம்தான் மதிக்கப்படும் என்பதற்கு இந்தப் பழமொழி."
    },
    {
        "id": "31",
        "proverb": "ஆசை காட்டி மோசம் பண்ணிவிட்டான்",
        "created_at": "2025-03-14 19:01:10",
        "context": "நல்ல வாய்ப்பைக் கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு கடைசி நேரத்தில் கைவிரித்துவிட்டால் இந்தப் பழமொழியைச் சொல்வார்கள்"
    },
    {
        "id": "32",
        "proverb": "ஊர் அறிந்த பார்ப்பானுக்கு பூனூல் எதற்கு",
        "created_at": "2025-03-15 21:26:35",
        "context": "திறமையோடு இருப்பவர்களுக்கு விளம்பரம் தேவையில்லை என்பதற்கு பயன்படும் பழமொழி இது "
    },
    {
        "id": "33",
        "proverb": "ஊரோடு ஒத்து வாழவேண்டும்",
        "created_at": "2025-03-15 21:29:46",
        "context": "ஊரில் பெரும்பாலானோர் எப்படி இருக்கிறார்களோ அப்படியே எல்லோரும் இருக்கவேண்டும். தனிப்பட்டவர்களின் கருத்துகளை ஒதுக்கிவைக்கவேண்டும் என்பதற்கான பழமொழி இது."
    },
    {
        "id": "34",
        "proverb": "ஊர் கூடி தேர் இழுப்போம்",
        "created_at": "2025-03-15 21:44:30",
        "context": "எல்லோரும் சேர்ந்து ஒரு செயலைச் செய்வோம் என்பதற்கான பழமொழி இது."
    },
    {
        "id": "35",
        "proverb": "கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை",
        "created_at": "2025-03-25 15:04:30",
        "context": "சில சமயம் நாம் எதிர்பார்த்தது கிடைத்துவிடும் நேரத்தில் ஏதோ ஒரு காரணத்தால் கிடைக்காமல் போய்விடும். கைக்கு வந்துவிட்டாலும் அதைச் சாப்பிடமுடியாமல் போகும்."
    },
    {
        "id": "36",
        "proverb": "சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்",
        "created_at": "2025-03-27 08:10:31",
        "context": "நிறைய படித்திருந்தால் ஆய்வு செய்திருந்தால் புதியனவற்றைக் கூறுவார்கள். மாறாக சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்பவர்களுக்கு இந்தப் பழமொழியைக் கூறலாம்."
    },
    {
        "id": "37",
        "proverb": "அரைத்த மாவையே அரைக்கிறார்கள்",
        "created_at": "2025-03-27 08:11:26",
        "context": "ஒருவர் புதிதாக ஒன்றும் சொல்லாமல் எல்லோருக்கும் தெரிந்ததையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தால் இந்தப் பழமொழியைச் சுட்டிக்காட்டலாம்."
    },
    {
        "id": "38",
        "proverb": "தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்கிற கதை",
        "created_at": "2025-03-27 10:06:42",
        "context": "நல்ல வாய்ப்பு கிடைத்த பொழுது அதைப் பயன்படுத்தாமல் தோல்விக்கான நேரத்தில் வாய்ப்பைப் பயன்படுத்துவது என்பதற்கு இந்தப் பழமொழியைப் பயன்படுத்துவார்கள்"
    },
    {
        "id": "39",
        "proverb": "வெள்ளம் தலைக்கு மேல் போன பிறகு சான் போனால் என்ன முழம் போனால் என்ன",
        "created_at": "2025-03-27 10:08:57",
        "context": "பெரிய பிரச்சனைக்குள் ஒருவர் மாட்டிக்கொண்ட போது பிரச்சனை கொஞ்சம்தான் அதிகம் இல்லை என்று கூறுவதில் பயன் இல்லை."
    },
    {
        "id": "40",
        "proverb": "மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல்",
        "created_at": "2025-03-27 10:21:42",
        "context": "சம்பந்தமே இல்லாத ஒன்றை இன்னொன்றோடு இணைக்கும் முயற்சிக்கு இந்தப் பழமொழியைப் பயன்படுத்துவார்கள்"
    },
    {
        "id": "41",
        "proverb": "உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா",
        "created_at": "2025-04-13 16:12:11",
        "context": "தனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லிக்கொள்ளும் படிக்காதவர்கள் எப்பொழுதுமே படித்த அறிஞர்களுக்கு நிகராகமாட்டார்கள்."
    },
    {
        "id": "42",
        "proverb": "மடியில் கனமிருந்தால்தான் வழியில் பயம் வரும்",
        "created_at": "2025-04-13 22:55:59",
        "context": "எந்தத் தப்பும் செய்யாதவர்கள் எதற்கும் பயப்படத்தேவையில்லை"
    },
    {
        "id": "43",
        "proverb": "கழுதை தேய்ந்து கட்டெறும்பானது",
        "created_at": "2025-06-13 09:55:20",
        "context": "கொஞ்சம் கொஞ்சமாக அழிவு வந்து கடைசியில் உருத்தெரியாமல் போகிறது"
    },
    {
        "id": "44",
        "proverb": "உங்க பருப்பு என்கிட்ட வேகாது",
        "created_at": "2025-06-23 11:01:31",
        "context": "உங்களால் என்னை ஏமாற்ற முடியாது. இது பல வகையில் பயன்படுத்தலாம். அந்தப் பருப்பு இங்கே வேகாது; உங்க பருப்பெல்லாம் என்கிட்ட வேகாது..."
    },
    {
        "id": "45",
        "proverb": "வேலியில் போகிற ஓணானை இடுப்பில் கட்டிக்கொண்ட மாதிரி",
        "created_at": "2025-07-14 19:10:17",
        "context": "அனாவசியமாக பிரச்சனை செய்கிறவர்களோடு பழகுவது."
    },
    {
        "id": "46",
        "proverb": "குரங்கு கையில் பூமாலையைக் கொடுத்தது போல",
        "created_at": "2026-02-11 22:06:39",
        "context": "அனுபவமில்லாதவர்களிடம் பெரிய பொறுப்பைக் கொடுத்து அவர்கள் எல்லாவற்றையும் கெடுப்பது"
    },
    {
        "id": "47",
        "proverb": "எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுகிறது மாதிரி",
        "created_at": "2026-02-16 13:14:30",
        "context": "மிகவும் கோபமாக இருக்கிறவரிடம் என்ன கூறினாலும் எடுபடாது.  எரிந்துகொண்டிருக்கிற நெருப்பில் எண்ணையை ஊற்றினால் எப்படி தீ தீவிரமாக எரியுமோ அப்படித்தான் கோபக்காரர்களுக்கு மேலும் மேலும் கோபம் வரும். அவர்கள் சொல்வதற்கெல்லாம் சரி! சரி! என்று சொல்லிக்கொண்டிருக்கவேண்டும்."
    },
    {
        "id": "48",
        "proverb": "எள் என்றால் எண்ணையாக இருக்கவேண்டும்",
        "created_at": "2026-02-21 21:03:07",
        "context": "எள் என்ற சொன்னவுடனேயே அதை எண்ணையாக்குகிற அளவுக்கு தாமதம் எதுவும் இல்லாமல் வேகமாக எதையும் செய்யவேண்டும். "
    },
    {
        "id": "49",
        "proverb": "உயர உயரப் பறந்தாலும் குருவி பருந்தாகாது",
        "created_at": "2026-02-26 15:00:20",
        "context": "தகுதிக்கு அதிகமாகப் பேசுபவர்கள் எப்பொழுதும் பெரியவர்களாகிவிடமாட்டார்கள்."
    },
    {
        "id": "50",
        "proverb": "உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி ",
        "created_at": "2026-02-28 19:22:49",
        "context": "ஒருவருக்கு பல முனைகளிலும் பிரச்சனை வருகிறது என்றால் இந்தப் பழமொழியைப் பயன்படுத்துவார்கள்."
    },
    {
        "id": "51",
        "proverb": "பஞ்சு விற்கப் போனால் காற்று அடிக்கிறது உப்பு விற்கப் போனால் மழை பெய்கிறது",
        "created_at": "2026-02-28 19:24:41",
        "context": "ஒருவருக்கு எந்தச் செயலைச் செய்யும் போதும் பிரச்சனை வருகிறது என்றால் இந்தப் பழமொழியைப் பயன்படுத்துவார்கள்."
    },
    {
        "id": "52",
        "proverb": "பாம்பின் கால் பாம்பறியும்",
        "created_at": "2026-03-02 09:26:23",
        "context": "தனி நபரின் அனைத்து ரகசியங்களும் அந்த நபருக்குத்தான் முழுமையாகத் தெரியும்."
    },
    {
        "id": "53",
        "proverb": "எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ, தெரியாது.",
        "created_at": "2026-03-02 15:14:11",
        "context": "எதுவும் செய்வதற்கு முன் சூழ்நிலையை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.  எந்தப் பிரச்சனை எங்கிருந்து வரும் என்று தெரியாமல் போகலாம்."
    },
    {
        "id": "54",
        "proverb": "வேலியே பயிரை மேய்ந்த மாதிரி",
        "created_at": "2026-03-08 15:58:29",
        "context": "பாதுகாப்பவர்களே தவறான செயலில் ஈடுபடுவது"
    },
    {
        "id": "55",
        "proverb": "ஆடுகிற மாட்டை ஆடி கறக்கணும். பாடுகிற மாட்டை பாடிக் கறக்கணும்.  ",
        "created_at": "2026-03-08 16:07:44",
        "context": "மற்றவர்களின் குணத்துக்கு ஏற்றபடி நாம்தான் நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும்"
    },
    {
        "id": "58",
        "proverb": "எள்தான் காய்கிறது என்றால் எலிப்புழுக்கையும் எதற்குச் சேர்ந்து காயவேண்டும். ",
        "created_at": "2026-03-17 12:37:14",
        "context": "எலிப்புழுக்கை எள்ளோடு கலந்திருக்கிற நிலையில் எது எள் எது எலிப்புழுக்கை என்று தெரியாமல் காயவைப்பார்கள். தேவையோடு தேவையில்லாததும் சேர்வது."
    },
    {
        "id": "59",
        "proverb": "பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும். ",
        "created_at": "2026-03-17 18:44:15",
        "context": "நல்லவர்களோடு சேர்ந்த கெட்டவர்களும் நல்லவர்களாக இருப்பார்கள்."
    },
    {
        "id": "60",
        "proverb": "தலையில் மிளகாயை அறைத்துவிடுவார்கள். ",
        "created_at": "2026-03-22 22:02:04",
        "context": "விவரம் எதுவும் சரியாகத் தெரியவில்லை என்றால் சுலபமாக மற்றவர்கள் ஏமாற்றிவிடுவார்கள்."
    },
    {
        "id": "61",
        "proverb": "நெருப்பில்லாமல் புகையாது. ",
        "created_at": "2026-03-25 15:30:04",
        "context": "ஏதாவது ஒரு பிரச்சனை பற்றி யாராவது பேசிக்கொண்டிருந்தால் அது நடந்திருக்கவேண்டும். "
    },
    {
        "id": "62",
        "proverb": "கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.  ",
        "created_at": "2026-03-25 15:31:23",
        "context": "வாய்ப்பை கடைசி நிமிஷத்தில் இழந்துவிட்டால் இப்படி சொல்வார்கள்."
    },
    {
        "id": "63",
        "proverb": "தேனை எடுக்கிறவன் புறங்கையை நக்காமல் இருப்பானா?",
        "created_at": "2026-03-25 20:39:04",
        "context": "பெரிய சொத்தை பாதுகாப்பவன் அதைத் திருடத்தான் செய்வான்."
    },
    {
        "id": "64",
        "proverb": "ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்.",
        "created_at": "2026-03-29 09:22:16",
        "context": "என்னதான் மிகவும் நல்லதாக இருந்தாலும். ஒரு சிறு தவறு அல்லது ஒரு தனி ஆளால் எல்லாம் வீணாகிவிடும்."
    },
    {
        "id": "65",
        "proverb": "மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருக்கிறது (மழெ பேஞ்சு ஓஞ்ச மாதிரி இருக்கு)",
        "created_at": "2026-03-30 20:38:41",
        "context": "பெரிய பிரச்சனை முடிந்து நிம்மதியாக இருக்கும் போது இதைச் சொல்வார்கள்"
    },
    {
        "id": "66",
        "proverb": "கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணுவது போல",
        "created_at": "2026-04-15 10:20:24",
        "context": "சரியான காலத்தில் எதையும் முடிக்காமல் காலம் சென்று செய்வது"
    },
    {
        "id": "67",
        "proverb": "வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல",
        "created_at": "2026-04-15 10:20:55",
        "context": "மிகவும் எளிமையான முறையில் எதையும் செய்யவேண்டும்"
    },
    {
        "id": "68",
        "proverb": "பூனையை இடுப்பில் கட்டிக்கொண்டு சகுனம் பார்த்த கதையாக",
        "created_at": "2026-05-11 03:09:25",
        "context": "பிரச்சனையின் உச்சத்தில் இருக்கும்போது அதற்கான முடிவைக் காண முயற்சிப்பது"
    }
]