(68)
பூனையை இடுப்பில் கட்டிக்கொண்டு சகுனம் பார்த்த கதையாக
Context: பிரச்சனையின் உச்சத்தில் இருக்கும்போது அதற்கான முடிவைக் காண முயற்சிப்பது
2026-05-11 03:09:25
(67)
வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல
Context: மிகவும் எளிமையான முறையில் எதையும் செய்யவேண்டும்
2026-04-15 10:20:55
(66)
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணுவது போல
Context: சரியான காலத்தில் எதையும் முடிக்காமல் காலம் சென்று செய்வது
2026-04-15 10:20:24
(65)
மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருக்கிறது (மழெ பேஞ்சு ஓஞ்ச மாதிரி இருக்கு)
Context: பெரிய பிரச்சனை முடிந்து நிம்மதியாக இருக்கும் போது இதைச் சொல்வார்கள்
2026-03-30 20:38:41
(64)
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்.
Context: என்னதான் மிகவும் நல்லதாக இருந்தாலும். ஒரு சிறு தவறு அல்லது ஒரு தனி ஆளால் எல்லாம் வீணாகிவிடும்.
2026-03-29 09:22:16
(63)
தேனை எடுக்கிறவன் புறங்கையை நக்காமல் இருப்பானா?
Context: பெரிய சொத்தை பாதுகாப்பவன் அதைத் திருடத்தான் செய்வான்.
2026-03-25 20:39:04
(62)
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
Context: வாய்ப்பை கடைசி நிமிஷத்தில் இழந்துவிட்டால் இப்படி சொல்வார்கள்.
2026-03-25 15:31:23
(61)
நெருப்பில்லாமல் புகையாது.
Context: ஏதாவது ஒரு பிரச்சனை பற்றி யாராவது பேசிக்கொண்டிருந்தால் அது நடந்திருக்கவேண்டும்.
2026-03-25 15:30:04
(60)
தலையில் மிளகாயை அறைத்துவிடுவார்கள்.
Context: விவரம் எதுவும் சரியாகத் தெரியவில்லை என்றால் சுலபமாக மற்றவர்கள் ஏமாற்றிவிடுவார்கள்.
2026-03-22 22:02:04
(59)
பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும்.
Context: நல்லவர்களோடு சேர்ந்த கெட்டவர்களும் நல்லவர்களாக இருப்பார்கள்.
2026-03-17 18:44:15
(58)
எள்தான் காய்கிறது என்றால் எலிப்புழுக்கையும் எதற்குச் சேர்ந்து காயவேண்டும்.
Context: எலிப்புழுக்கை எள்ளோடு கலந்திருக்கிற நிலையில் எது எள் எது எலிப்புழுக்கை என்று தெரியாமல் காயவைப்பார்கள். தேவையோடு தேவையில்லாததும் சேர்வது.
2026-03-17 12:37:14
(55)
ஆடுகிற மாட்டை ஆடி கறக்கணும். பாடுகிற மாட்டை பாடிக் கறக்கணும்.
Context: மற்றவர்களின் குணத்துக்கு ஏற்றபடி நாம்தான் நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும்
2026-03-08 16:07:44
(54)
வேலியே பயிரை மேய்ந்த மாதிரி
Context: பாதுகாப்பவர்களே தவறான செயலில் ஈடுபடுவது
2026-03-08 15:58:29
(53)
எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ, தெரியாது.
Context: எதுவும் செய்வதற்கு முன் சூழ்நிலையை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். எந்தப் பிரச்சனை எங்கிருந்து வரும் என்று தெரியாமல் போகலாம்.
2026-03-02 15:14:11
(52)
பாம்பின் கால் பாம்பறியும்
Context: தனி நபரின் அனைத்து ரகசியங்களும் அந்த நபருக்குத்தான் முழுமையாகத் தெரியும்.
2026-03-02 09:26:23
(51)
பஞ்சு விற்கப் போனால் காற்று அடிக்கிறது உப்பு விற்கப் போனால் மழை பெய்கிறது
Context: ஒருவருக்கு எந்தச் செயலைச் செய்யும் போதும் பிரச்சனை வருகிறது என்றால் இந்தப் பழமொழியைப் பயன்படுத்துவார்கள்.
2026-02-28 19:24:41
(50)
உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி
Context: ஒருவருக்கு பல முனைகளிலும் பிரச்சனை வருகிறது என்றால் இந்தப் பழமொழியைப் பயன்படுத்துவார்கள்.
2026-02-28 19:22:49
(49)
உயர உயரப் பறந்தாலும் குருவி பருந்தாகாது
Context: தகுதிக்கு அதிகமாகப் பேசுபவர்கள் எப்பொழுதும் பெரியவர்களாகிவிடமாட்டார்கள்.
2026-02-26 15:00:20
(48)
எள் என்றால் எண்ணையாக இருக்கவேண்டும்
Context: எள் என்ற சொன்னவுடனேயே அதை எண்ணையாக்குகிற அளவுக்கு தாமதம் எதுவும் இல்லாமல் வேகமாக எதையும் செய்யவேண்டும்.
2026-02-21 21:03:07
(47)
எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுகிறது மாதிரி
Context: மிகவும் கோபமாக இருக்கிறவரிடம் என்ன கூறினாலும் எடுபடாது. எரிந்துகொண்டிருக்கிற நெருப்பில் எண்ணையை ஊற்றினால் எப்படி தீ தீவிரமாக எரியுமோ அப்படித்தான் கோபக்காரர்களுக்கு மேலும் மேலும் கோபம் வரும். அவர்கள் சொல்வதற்கெல்லாம் சரி! சரி! என்று சொல்லிக்கொண்டிருக்கவேண்டும்.
2026-02-16 13:14:30
(46)
குரங்கு கையில் பூமாலையைக் கொடுத்தது போல
Context: அனுபவமில்லாதவர்களிடம் பெரிய பொறுப்பைக் கொடுத்து அவர்கள் எல்லாவற்றையும் கெடுப்பது
2026-02-11 22:06:39
(45)
வேலியில் போகிற ஓணானை இடுப்பில் கட்டிக்கொண்ட மாதிரி
Context: அனாவசியமாக பிரச்சனை செய்கிறவர்களோடு பழகுவது.
2025-07-14 19:10:17
(44)
உங்க பருப்பு என்கிட்ட வேகாது
Context: உங்களால் என்னை ஏமாற்ற முடியாது. இது பல வகையில் பயன்படுத்தலாம். அந்தப் பருப்பு இங்கே வேகாது; உங்க பருப்பெல்லாம் என்கிட்ட வேகாது...
2025-06-23 11:01:31
(43)
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது
Context: கொஞ்சம் கொஞ்சமாக அழிவு வந்து கடைசியில் உருத்தெரியாமல் போகிறது
2025-06-13 09:55:20
(42)
மடியில் கனமிருந்தால்தான் வழியில் பயம் வரும்
Context: எந்தத் தப்பும் செய்யாதவர்கள் எதற்கும் பயப்படத்தேவையில்லை
2025-04-13 22:55:59
(41)
உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா
Context: தனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லிக்கொள்ளும் படிக்காதவர்கள் எப்பொழுதுமே படித்த அறிஞர்களுக்கு நிகராகமாட்டார்கள்.
2025-04-13 16:12:11
(40)
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல்
Context: சம்பந்தமே இல்லாத ஒன்றை இன்னொன்றோடு இணைக்கும் முயற்சிக்கு இந்தப் பழமொழியைப் பயன்படுத்துவார்கள்
2025-03-27 10:21:42
(39)
வெள்ளம் தலைக்கு மேல் போன பிறகு சான் போனால் என்ன முழம் போனால் என்ன
Context: பெரிய பிரச்சனைக்குள் ஒருவர் மாட்டிக்கொண்ட போது பிரச்சனை கொஞ்சம்தான் அதிகம் இல்லை என்று கூறுவதில் பயன் இல்லை.
2025-03-27 10:08:57
(38)
தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்கிற கதை
Context: நல்ல வாய்ப்பு கிடைத்த பொழுது அதைப் பயன்படுத்தாமல் தோல்விக்கான நேரத்தில் வாய்ப்பைப் பயன்படுத்துவது என்பதற்கு இந்தப் பழமொழியைப் பயன்படுத்துவார்கள்
2025-03-27 10:06:42
(37)
அரைத்த மாவையே அரைக்கிறார்கள்
Context: ஒருவர் புதிதாக ஒன்றும் சொல்லாமல் எல்லோருக்கும் தெரிந்ததையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தால் இந்தப் பழமொழியைச் சுட்டிக்காட்டலாம்.
2025-03-27 08:11:26
(36)
சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்
Context: நிறைய படித்திருந்தால் ஆய்வு செய்திருந்தால் புதியனவற்றைக் கூறுவார்கள். மாறாக சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்பவர்களுக்கு இந்தப் பழமொழியைக் கூறலாம்.
2025-03-27 08:10:31
(35)
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை
Context: சில சமயம் நாம் எதிர்பார்த்தது கிடைத்துவிடும் நேரத்தில் ஏதோ ஒரு காரணத்தால் கிடைக்காமல் போய்விடும். கைக்கு வந்துவிட்டாலும் அதைச் சாப்பிடமுடியாமல் போகும்.
2025-03-25 15:04:30
(34)
ஊர் கூடி தேர் இழுப்போம்
Context: எல்லோரும் சேர்ந்து ஒரு செயலைச் செய்வோம் என்பதற்கான பழமொழி இது.
2025-03-15 21:44:30
(33)
ஊரோடு ஒத்து வாழவேண்டும்
Context: ஊரில் பெரும்பாலானோர் எப்படி இருக்கிறார்களோ அப்படியே எல்லோரும் இருக்கவேண்டும். தனிப்பட்டவர்களின் கருத்துகளை ஒதுக்கிவைக்கவேண்டும் என்பதற்கான பழமொழி இது.
2025-03-15 21:29:46
(32)
ஊர் அறிந்த பார்ப்பானுக்கு பூனூல் எதற்கு
Context: திறமையோடு இருப்பவர்களுக்கு விளம்பரம் தேவையில்லை என்பதற்கு பயன்படும் பழமொழி இது
2025-03-15 21:26:35
(31)
ஆசை காட்டி மோசம் பண்ணிவிட்டான்
Context: நல்ல வாய்ப்பைக் கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு கடைசி நேரத்தில் கைவிரித்துவிட்டால் இந்தப் பழமொழியைச் சொல்வார்கள்
2025-03-14 19:01:10
(30)
உள்ளூர் மாடு வெளியூர்லெதான் வெலெ போகும்
Context: நன்றாகத் தெரிந்தவர்கள் என்றுமே ஒருவரின் திறமையை மதிக்கமாட்டார்கள். பொறாமை குணம்தான் இருக்கும். ஆனால் திறமை தெரியாதவர்களிடம்தான் மதிக்கப்படும் என்பதற்கு இந்தப் பழமொழி.
2025-03-13 08:32:50
(29)
எதிரும் புதிருமாக
Context: ஒருவருக்கு ஒருவர் நேர் மாறான எண்ணம் கொண்டவர்களைப் பற்றி இதைக் கூறலாம்
2025-03-10 08:57:21
(28)
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல
Context: முடியாத ஒன்றை அடைய ஒருவர் விரும்பினால் இந்தப் பழமொழியைப் பயன்படுத்தலாம். மரக்கொம்புகளில் இருக்கும் தேனடையைத் தட்டிவிட்டு தேனீக்களெல்லாம் வருவதற்கு முன் அந்த இடத்தை விட்டு ஓடவேண்டும். முடவனால் முடியாத போது அவன் எப்படி தேனடையைத் தட்டிவிட்டு தேனை எடுக்க ஆசைப்படலாம்.
2025-03-09 11:45:11
(27)
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது
Context: ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு தீங்கு நடந்தததென்றால் நடந்தது நடந்தாகவே இருக்கட்டும். இனிமேல் எல்லாம் நல்ல முறையில் நடக்கும் என்று நினைத்துக்கொள்ள இந்தப் பழமொழியைப் பயன்படுத்துவார்கள்.
2025-03-04 11:09:05
(26)
நொந்த புண்ணில் வேலை பாய்ச்சுகிற மாதிரி
Context: ஒருவரின் தவறைத் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தால் இந்தப் பழமொழியைப் பயன்படுத்தலாம்
2025-03-01 15:47:32
(25)
எறிகிற தீயில் எண்ணையை ஊற்றுகிற மாதிரி
Context: திரும்பத் திரும்ப ஒருவரின் மனதைப் புண்படுத்திக்கொண்டிருந்தால் இந்தப் பழமொழியைப் பயன்படுத்தலாம்.
2025-03-01 15:46:43
(24)
கிளியை வளர்த்து பூனைக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறோம்
Context: முறையாக வளர்த்து நன்றாக வளரவேண்டும் என்று நினைத்து உருவாக்கிய ஒரு நிறுவனத்தை கடைசியில் ஒரு அராஜகக்காரனிடம் கொடுத்து வீணாக்கும்போது இந்தப் பழமொழியைச் சொல்லலாம்.
2025-02-28 10:26:00
(23)
ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரையாம்
Context: கரும்பு ஆலை இல்லாத ஊரில் சர்க்கரைக்காக இலுப்பைப் பூவை பயன்படுத்துவார்களாம். பெரியோர்கள் இல்லாத இடத்தில் அறிவில்லாத சிறியவர்களுக்கும் மதிப்பு கிடைக்கும்.
2025-02-28 10:00:19
(22)
பஞ்சு விக்கப் போனா காத்தடிக்குது உப்பு விக்க போனா மழை பெய்யுது
Context: எதும் நமக்கு சாதகமாக இல்லாமல் எதிர்மாறாக இருந்தால் இந்தப் பழமொழியைப் பயன்படுத்தலாம்
2025-02-26 13:07:50
(21)
பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டுவிடுமாம்
Context: தனக்குத்தான் எல்லாம் தெரியும். மற்றவர்களுக்கெல்லாம் ஒன்றும் தெரியாது என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு இந்தப் பழமொழியைச் சொல்லலாம்.
2025-02-26 10:56:07
(20)
ஒண்ணும் தெரியாத பாப்பா போட்டுக்கிட்டாளாம் தாப்பாள்
Context: எதுவும் தெரியாத மாதிரி நடிப்பவர்களுக்கு இந்தப் பழமொழியைச் சொல்லலாம்.
2025-02-26 10:54:28
(19)
குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறுவார்கள்
Context: தான் தவறு செய்துவிட்ட்து எல்லோருக்கும் தெரிந்துவிட்டது என்றாலும் அந்தத் தவறுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.
2025-02-25 21:57:28
(18)
திருடனுக்கு தேள் கொட்டியது போல
Context: சிலர் தாங்கள் செய்த தவறை மற்றவர்கள் கண்டுபிடிக்கும் போது அவர்களுக்கு மனதுக்குள் உறுத்துவதைச் சொல்ல இந்தப் பழமொழியைப் பயன்படுத்துவார்கள்.
2025-02-23 07:00:26
(17)
நாய் வாலை நிமிர்த்தவே முடியாது
Context: என்னதான் முயற்சி செய்தாலும் சிலருடைய கெட்ட பழக்கத்தை மாற்றவே முடியாது.
2025-02-22 17:10:01
(16)
தெருவில் போகிற நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்த மாதிரி
Context: தகுதியில்லாத ஒருவனுக்கு அதிக பதவியைக் கொடுத்து அவன் செய்கிற அட்டூழியத்தைக் குறிக்கிற பழமொழி இது.
2025-02-22 16:29:01
(15)
முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கிறது மாதிரி இருக்கிறது
Context: நம்ப முடியாத அளவுக்கு ஒருவர் அப்பட்டமாகப் பொய்யைச் சொல்லும் போது இந்தப் பழமொழியைப் பயன்படுத்தலாம்.
2025-02-19 14:34:05
(14)
கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி
Context: சொல்கிறது எதுவும் புரியாமல் இருப்பவர்களை நினைக்கும் போது இந்தப் பழமொழி நினைவுக்கு வரும்.
2025-02-17 21:16:58
(13)
இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் போகிறது
Context: தெரிந்துகொண்டதையெல்லாம் உடனே மறந்துவிடுபவர்களை நினக்கும்போது இந்தப் பழமொழி நினைவுக்கு வரும்.
2025-02-17 21:15:44
(12)
எறுமை மாட்டின் மேல் மழை பெய்த மாதிரி
Context: என்னதான் சொன்னாலும் எதையும் கேட்காமல் செய்வதையே செய்துகொண்டிருப்பவர்களை நினைக்கும்போது இந்தப் பழமொழி நினைவுக்கு வரும்.
2025-02-17 21:13:56
(11)
ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது
Context: எதையும் நன்றாக யோசித்துச் செய்யவேண்டும். அவசர அவசரமாக எந்த முடிவையும் எடுத்துவிடக்கூடாது என்பதற்கான பழமொழி இது.
2025-02-17 15:16:01
(10)
ஆள் பாதி ஆடை பாதி
Context: நல்ல சட்டையைப் போட்டு அழகு பார்க்கிற போது இந்தப் பழமொழியை நினைத்துக்கொள்ளலாம்.
2025-02-17 15:03:54
(9)
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்
Context: ஒருவரின் தவறைக் கண்டு அவர் மாட்டிக்கொள்ளாமலேயே இருக்கிறாரே என்று நினைத்த போது இந்தப் பழமொழியை நினைத்துக்கொள்ளலாம்.
2025-02-17 15:03:15
(8)
வரன் கொடுத்தவன் தலையிலேயே கையை வைக்கிறார்கள்
Context: நிறைய உதவிகளைச் செய்தபிறகும் உதவிகளையெல்லாம் ஏற்றுக்கொண்டு உதவி செய்தவருக்கு தீங்கு செய்ய நினைப்பவருக்கு இந்தப் பழமொழி மிகவும் பொருந்தும்.
2025-02-17 11:11:30
(7)
சுவற்றில் சேற்றை எறிந்தால் அது நம் மேல்தான் விழும்
Context: கோபக்காரர்களையோ தீயவர்களையோ கோபமாகத் திட்டினால் நமக்குத்தான் கேடு வரும் என்பதற்கு இந்தப் பழமொழியை நினைத்துக்கொள்ளலாம்.
2025-02-16 16:47:45
(6)
முள்ளில் மேல் விழுந்த சேலையை எடுப்பது போல மிகவும் கவனமாக இருக்கவேண்டும்
Context: முன்கோபக்காரர்களிடம் மிகவும் கோபப்படாமல் பொறுமையோடு நடந்துகொள்ளவேண்டும்.
2025-02-16 12:28:40
(5)
கொல்லன் பட்டறையில் கட்டெறும்புக்கு என்ன வேலை
Context: மிகவும் கொடூரமான எண்ணம் கொண்ட ஒரு குழுவினரின் அநீதியிலிருந்து தப்பிக்கவேண்டுமென்றால் இந்தப் பழமொழியை நினைத்துக்கொள்ளவேண்டும். அருகே போனால் பொசுக்கிவிடுகிற கொடூரத்தன்மை கொண்டவர்களிடமிருந்து தூர விலகியிருப்பதே நல்லது.
2025-02-16 11:48:21
(4)
அழுகிற குழந்தைதான் பால் குடிக்கும்
Context: எதையும் சாதிக்கவேண்டுமென்றால் முயற்சி செய்துகொண்டே இருக்கவேண்டும் என்ற உண்மையை அவ்வப்போழுது நினைத்துக்கொள்ள இந்தப் பழமொழியைப் பயன்படுத்தலாம்.
2025-02-16 11:46:24
(3)
தேனை எடுக்கிறவன் புறங்கையை நக்காமல் இருப்பானா
Context: நீங்கள் தொடர்புகொண்டுள்ள நிறுவனத்தில் உங்களை ஏமாற்றும்படி ஒருவன் நடந்துகொண்டால் இந்தப் பழமொழியை நினைத்துகொண்டு உங்களை சமாதானப்படுத்திக்கொள்ளவேண்டும்.
2025-02-16 11:44:48
(2)
துஷ்டனைக் கண்டால் தூர விலகு
Context: நீங்கள் தொடர்பு கொண்டுள்ள ஒரு லாபநோக்கற்ற நிறுவனத்தில் நடக்கும் அவலங்களைக் கண்டு வேதனைப்படாமல் மகிழ்வோடு இருக்க இந்தப் பழமொழியை இந்நிறுவனம் பற்றி எண்ணும் போதெல்லாம் நினைத்துக்கொள்ளவேண்டும்.
2025-02-16 11:37:56
(1)
ஆற்றில் போட்டாலும் அளந்து போடவேண்டும்
Context: எந்த ஒரு செலவையும் செய்யும் முன்னால் இந்தப் பழமொழியை நினைத்துக்கொள்வது நல்லது.
2025-02-16 11:28:49